என் மலர்
நீங்கள் தேடியது "Enam MLA"
- புதுவை மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் இந்த என்.ஆர்.பா.ஜனதா கூட்டணி அரசு அறிவித்து செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
- ஏனாம் எம்.எல்.ஏ. இத்தகைய செயலை மாநிலத்தில் எந்த கட்சியும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் இந்த என்.ஆர்.பா.ஜனதா கூட்டணி அரசு அறிவித்து செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இது அனைத்து பொது மக்களுக்கும் தெரியும். அதற்கான தீர்வை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதல்-அமைச்சர் கைகோர்த்து மத்தியிலே தேவையான நிதிகளை பெற்று மக்களுக்கு பணி செய்ய வேண்டிய ஏனாம் எம்.எல்.ஏ. கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் என்று கூட பார்க்காமல் அநாகரிமாக மக்கள் மத்தியில் பேசி இருப்பது மிகவும் கண்டிக்க த்தக்கது.
ஏனாம் எம்.எல்.ஏ. இத்தகைய செயலை மாநிலத்தில் எந்த கட்சியும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். அரசாங்க பணிகள் நடக்கவில்லை என்று சொன்னால் யூனியன் பிரதேசத்தில் அரசின் தலைமை பொறுப்பில் உள்ள கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்களும், துறை சார்ந்த அதிகாரிகளும் தான் பொறுப்பாவார்கள்.
தனிப்பட்ட விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு வயது வித்தியாசம் கூட பார்க்காமல் , அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசி இருக்கும் செயலை புதுவை பா.ம.க. வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக ஏனாம் எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து தான் பேசிய செயலுக்கு வருத்தம் தெரிவித்து.மற்ற அரசு சார்ந்த விஷயங்களை முதல்-அமை்ச்சரை அலுவலகத்தில் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக கூறி புதுவை முழுவதும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
- பின்னர் திடீரென போராட்டக்காரர்கள் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக்கின் உருவ பொம்மை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக கூறி புதுவை முழுவதும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஊசுடு தொகுதி என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் பத்துக்கண்ணு சந்திப்பில் மாநில பிரதிநிதி வைத்தியநாதன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. பின்னர் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் அகரம் ஆசிரியர் கணேசன், சேதராப்பட்டு தங்கம், தாமோதரன், சிங்காரவேல், குமரேசன், ரவி, முத்தாலு வெங்கடேசன், காத்தவராயன், ஜனார்த்தனன், சக்திமுருகன், பாஸ்கர், அன்பரசன், முருகையன், பாலு, கோனேரி அரி, வீரப்பன், ரகுராமன், ஆறுமுகம், கணேசன் உள்ளிட்ட என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் திடீரென போராட்டக்காரர்கள் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக்கின் உருவ பொம்மை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் வந்து அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.






