என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏனாம் எம்.எல்.ஏ. வருத்தம் தெரிவிக்க வேண்டும்-பா.ம.க. வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    ஏனாம் எம்.எல்.ஏ. வருத்தம் தெரிவிக்க வேண்டும்-பா.ம.க. வலியுறுத்தல்

    • புதுவை மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் இந்த என்.ஆர்.பா.ஜனதா கூட்டணி அரசு அறிவித்து செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
    • ஏனாம் எம்.எல்.ஏ. இத்தகைய செயலை மாநிலத்தில் எந்த கட்சியும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் இந்த என்.ஆர்.பா.ஜனதா கூட்டணி அரசு அறிவித்து செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இது அனைத்து பொது மக்களுக்கும் தெரியும். அதற்கான தீர்வை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதல்-அமைச்சர் கைகோர்த்து மத்தியிலே தேவையான நிதிகளை பெற்று மக்களுக்கு பணி செய்ய வேண்டிய ஏனாம் எம்.எல்.ஏ. கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் என்று கூட பார்க்காமல் அநாகரிமாக மக்கள் மத்தியில் பேசி இருப்பது மிகவும் கண்டிக்க த்தக்கது.

    ஏனாம் எம்.எல்.ஏ. இத்தகைய செயலை மாநிலத்தில் எந்த கட்சியும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். அரசாங்க பணிகள் நடக்கவில்லை என்று சொன்னால் யூனியன் பிரதேசத்தில் அரசின் தலைமை பொறுப்பில் உள்ள கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்களும், துறை சார்ந்த அதிகாரிகளும் தான் பொறுப்பாவார்கள்.

    தனிப்பட்ட விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு வயது வித்தியாசம் கூட பார்க்காமல் , அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசி இருக்கும் செயலை புதுவை பா.ம.க. வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக ஏனாம் எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து தான் பேசிய செயலுக்கு வருத்தம் தெரிவித்து.மற்ற அரசு சார்ந்த விஷயங்களை முதல்-அமை்ச்சரை அலுவலகத்தில் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×