என் மலர்
புதுச்சேரி
- புதுவை கல்வித்துறை சார்பில் காந்திநகர் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு 3 மாதம் தற்காப்புகலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
- இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கல்வித்துறை சார்பில் காந்திநகர் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு 3 மாதம் தற்காப்புகலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாக்கு புதுவை மாநில கோஜரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை குணசுந்தரி, உடற்கல்வி ஆசிரியர் சரவணன், மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் மாலதி, மகாலட்சுமி , அமுதா, கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவிகளுக்கு கராத்தே சங்க மூத்த பயிற்சியாளர் சிவமதிமாண வருக்கு பயிற்சி அளித்தார்.
- புதுவை அரசு உள்ளாட்சித் துறையின் கீழ் வில்லியனூர் கொம்யூன் பராமரிப்பில் கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் இயங்கி வந்தது.
- பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு உள்ளாட்சித் துறையின் கீழ் வில்லியனூர் கொம்யூன் பராமரிப்பில் கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் இயங்கி வந்தது.
தற்போது இந்த மண்டபம் கடந்த 15 ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. குறைந்த வாடகையில் வில்லியனூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த இந்த மண்டபத்தை புனரமைப்பு செய்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் இந்த கட்டிடம் சேதமடைந்து இருப்பதால் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என வில்லியனூர் கொம்யூன் நிர்வாகம் அதனை மூடிவிட்டது.
ஆனால் அங்கு ஒரு சில அரசு சார்ந்த அலுவலகப் பணிகள் மட்டும் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வில்லியனூர், ஊசுடு, மங்கலம் தொகுதி குழு சார்பில் கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபத்தை புனரமைப்பு செய்ய வலியுறுத்தி தொகுதி செயலாளர் பெஞ்சமின் தலைமையில் மலர் வளையம் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி துணை செயலாளர் பெருமாள், தொகுதி பொருளாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். பின்னர் அங்கிருந்து வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது.
பேரணியை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி தொடங்கி வைத்தார். இதில் மாநில குழு உறுப்பினர் அந்துவான், மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் வில்லியனூர் ஆணையர் ஆறுமுகத்திடம், கஸ்தூரிபாய் காந்தி மண்டபத்தை உடனடியாக புனரமைத்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடும்படி கேட்டுக் கொண்டனர். இதற்கு பதில் அளித்த ஆணையர் ஆறுமுகம், இந்த கட்டிடத்தை இடிப்பதற்கு அரசு முடிவு செய்து விட்டதாகவும். விரைவில் புதிய கட்டிடம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்துப் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கணேசன், பாலதண்டாயுதம், ராஜலட்சுமி, பாத்திமா, நாசர், சரவணன், கண்ணன், செல்வம், சிவபெருமான், தில்லைநாயகம், சுரேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணா நகர் பகுதியில் சாலை பள்ளமாக இருப்பதால் அடிக்கடி மழை நீர் தேங்கி அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
- இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் புதிய சாலை வசதி ஏற்படுத்தி தர செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி:
பாகூர் தொகுதி மேற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கணபதி நகர், கிருஷ்ணா நகர் பகுதியில் சாலை பள்ளமாக இருப்பதால் அடிக்கடி மழை நீர் தேங்கி அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் புதிய சாலை வசதி ஏற்படுத்தி தர செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக செம்மண் சாலை ரூ.18 லட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், 100 நாள் வேலையில் ஈடுபடும் பெண்களிடம் பேசுவையில் கூடுதல் நாட்கள் தொடர்ந்து வேலை கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், உதவி பொறியாளர் ராமன் மற்றும் துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- லேசார் கோவில் வீதியில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.
- அனிபால் கென்னடியை சந்தித்து பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 3, அகத்தியர் நகர் விரிவாக்கம், திருவள்ளுவர் வீதி, மற்றும் திப்புராயப்பேட்டையில் உள்ள லேசார் கோவில் வீதியில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியை சந்தித்து பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பொதுப்ப ணித்துறை தலைமை பொறியாளர் சத்திய மூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர் முருகா னந்தம் உள்ளிட்டோரிடம் பாதாள சாக்கடை அமைத்து தர கோரி கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
அதன் பேரில் தற்போது அப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அப்போது தொகுதி செயலாளர் சக்தி வேல், அவைத்தலைவர் ரவி, ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர்கள் மணிகண்டன், செல்வம், காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- கர்ப்பிணி பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து சடங்குகள் செய்த பெண்களுக்கு பூ பழங்களுடன் தட்டு வரிசையும் வழங்கப்பட்டது.
- கர்ப்பிணிக்கு சக வியாபாரிகள் வளைகாப்பு செய்து வைத்து சம்பவம் புதுவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
டெல்லியைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் புதுவை கடற்கரை சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக கடற்கரைக்கு வரும் மக்களை நம்பி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரிடம் அடிக்கடி வந்து பொருள் வாங்கிய புதுவை லாஸ்பேட்டை சேர்ந்த பவித்ரா என்ற இளம் பெண்ணுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது.
இதனை அடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பவித்ராவை கணேஷ் திருமணம் செய்து கொண்டார்.தற்போது பவித்ரா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். ஆதரவற்ற இவர்களுக்கு உதவி செய்ய வேறு யாரும் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் ஏழ்மை நிலையில் இவர்கள் வாடி வருகின்றனர்.
இதனை அறிந்த கடற்கரையில் வியாபாரம் செய்யும் சக வியாபாரிகள் பவித்ராவுக்கு வளைகாப்பு செய்ய முடிவு செய்து அந்த வளைகாப்பை கடலோர சாலையில் சிறப்பாக நடத்தினார்கள்.
மேலும் வளைகாப்பின் போது ஒரு பெண்ணிற்கு தாய் வீட்டில் இருந்து என்னென்ன சீதனங்கள் செய்வார்களோ அந்த சீதனங்களான பூ, பழம், வெற்றிலை, பாக்கு, கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம், மற்றும் எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், என 9 வகையான சாதங்களுடன் பவித்ராவுக்கு வளைகாப்பை சக வியாபாரிகள் செய்து வைத்தனர்.
மேலும் வளைகாப்பின் போது கர்ப்பிணி பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து சடங்குகள் செய்த பெண்களுக்கு பூ பழங்களுடன் தட்டு வரிசையும் வழங்கப்பட்டது.
ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்த சாலையோர வியாபார நிறைமாத கர்ப்பிணிக்கு சக வியாபாரிகள் வளைகாப்பு செய்து வைத்து சம்பவம் புதுவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பல்நோக்கு திறன்களை வளர்க்கும் விதமாக மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் வாரந்தோறும் 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- சதுர துளையிடும் எந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரி ங்கல்லூரியில் என்ஜினீயரிங் பாடத்திட்டத்துடன் பல்நோக்கு திறன்களை வளர்க்கும் விதமாக மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் வாரந்தோறும் 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் எந்திரவியல் துறையை சேர்ந்த இறுதி யாண்டு மாணவ ர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையின் கீழ் புதிய கண்டுபிடிப்பாக சதுர துளையிடும் எந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பை பற்றிய செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மயிலம் கல்வி குழுமத்தின் இயக்குனர் செந்தில், கல்லூரியின் முதல்வர் ராஜப்பன், எந்திரவியல் துறை தலைவி வண்டார்குழலி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவ ர்களை வாழ்த்தினார்.
இக்கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், துணை த்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.
இந்த புதிய கண்டுபிடி ப்பினை எந்திரவியல் துறையின் இறுதியாண்டு மாணவர்கள் மகாதேவன், ரகுராம், புகழேந்தி மற்றும் ஜெயகணேஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த எந்திரமானது மரம் சார்ந்த கட்டுமான மற்றும் எந்திர பணிகளுக்கு சதுர வடிவில் துளையிடும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டது.
- முத்தியால் பேட்டை தொகுதி, சோலை நகர் வீதியில் உள்ள தனலட்சுமி கார்டன் மற்றும் அதன் வரிவாக்கம் பகுதியில் சாலை அமைக்க பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
- பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
முத்தியால் பேட்டை தொகுதி, சோலை நகர் வீதியில் உள்ள தனலட்சுமி கார்டன் மற்றும் அதன் வரிவாக்கம் பகுதியில் சாலை அமைக்க பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து புதுவை நகராட்சி சார்பில் புதிய சாலை அமைக்கும் பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் புதுவை நகராட்சி செயற்பொ றியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் ’ஜி20 சின்னம் காட்சிப்படுத்துதல்’ நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
- ஜி20 மாநாடு பிரதமரின் கனவு திட்டம். மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்ற நிலை வந்த போது, டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அனைவரும் நினைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 'ஜி20 சின்னம் காட்சிப்படுத்துதல்' நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து 'ஜி20 செல்பி மையத்தை' திறந்து வைத்தார். பின்னர். வெளிப்புற விளம்பர பதாகைகள், ஜி20 அடையாள வில்லை, சுவரொட்டி ஆகியவற்றை வெளியிட்டார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், சிவசங்கரன், தலைமைச்செயலர் ராஜிவ் வர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது: -
ஜி20 மாநாடு பிரதமரின் கனவு திட்டம். மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்ற நிலை வந்த போது, டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் அத்தனை மாநிலங்களுக்கும், அதற்கான வாய்ப்பை அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
மற்ற நாடுகளில் மாநாடு நடைபெறும்போது அந்தந்த தலைநகரங்களில் தான் நடக்கும். ஆனால், தொடக்க நிலையின் முதல்மாநாடு புதுவையில் நடைபெற உள்ளது. உலகிற்கு நாம் குருவாக இருக்க வேண்டும் என் பதுதான் நம்நாட்டிற்கு உழைத்த அத்தனை தலைவர்களின் ஆசை.
இப்போது வளர்ந்து வரும் நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது.
இந்தியா 2030-க்குள் உயர்ந்த பொருளாதார நிலையை அடையவேண்டும். நாம் கடுமையான இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி பயணிக்க வேண்டும். அந்த பயணம் நிச்சயம் வெற்றியை தரும். புதுவை நிச்சயமாக பல வளர்ச்சிகளை பெறும். புதுவைக்கு வரும் வெளிமாநிலத் தலைவர்கள், மறுபடியும் புதுவைக்கு வரவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
ஜி20 மாநாட்டை இந்தியாவிற்கு கொண்டு வந்ததற்கும், உலக அளவில் இந்தியாவை சிறந்தநாடாக உருவாக்கியதற்காகவும், அதனுடைய பிரதிநிதிகள் கூட்டத்தினை புதுவையில் நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உலகில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கின்ற ஒரு மாநாடு ஆகும்.
இது போன்ற மாநாடு நமது நாட்டில் நடைபெறுமா என்ற எண்ணம் இருந்தது. இந்த மாநாட்டை நடத்த முடியும் என்ற நம் பிக்கையை உருவாக்கி நடத்துவதற்கான நிலையை கொண்டு வந்ததற்காக மீண்டும் பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநாட்டை நடத்துவதுடன் தலைமை பொறுப்பை ஏற்கும் நிலையில் இருக்கின்றோம். எந்த முடிவை எடுத்தாலும் இ ந்தியாவை கேட்டு எடுக்க வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகி இருப்பது பெருமைக்குரியது. பருவநிலை மாற்றம், உலகின் பல நாடுகளில் ஏற்படும் குழப்பங்கள், பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள், அதனால் ஏற்படும் போர் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சினைகளை சரி செய்வதற்காக நமது ஆலோசனையை கேட்கும் நிலை தற்போது இருக்கிறது.
ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம், சமமான வாழ்க்கை இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பிரதமர் உருவாக்கியுள்ளார். புதுவை பல சித்தர்கள் வாழ்ந்த ஆன்மீக பூமியாகும். இதனாலேயே பல்வேறு புகழ் புதுவைக்கு கிடைக்கின்றன.இங்கே எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் நல்ல முடிவாக இருக்கும்.
மத்திய அமைச்சர்கள் புதுவைக்கு அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர். உலகம் புதுவையை உற்றுப் பார்க்கும் நிலை உள்ளது. ஜி20 மாநாடு பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதில் அரசு கவனமாக உள்ளது. புதுவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.
ஜி20 பிரதிநிதிகள் கூட்டமும் ஒன்றாக அமைந்துள்ளது. இதன் மூலம் புதுவையில் உள்ள கலாசாரம், பெருமையை அறிந்து கொண்டு, நம்மை நேசிக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவை நேரு வீதியில் நடைபெறும் வணிகத் திருவிழாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
- நேரு வீதியில் வியாபாரத்தை ஈர்க்கும் வகையில் வணிகத் திருவிழா நடத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை நேரு வீதியில் நடைபெறும் வணிகத் திருவிழாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுவையில் நேருவீதி வணிகர்கள் சங்கம் சார்பில் வணிகத் திருவிழா-2023 தொடங்கியது. இதன் தொடக்க விழா ராஜா தியேட்டர் சிக்னல் அருகில் நடந்தது. விழாவிற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். நேரு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு வணிகத் திருவிழாவை ரிப்பன் வெட்டியும், பரிசுக் கூப்பன்களை வெளியிட்டும் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நேரு வீதியில் வியாபாரத்தை ஈர்க்கும் வகையில் வணிகத் திருவிழா நடத்தப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட புதுவையில் எவ்வளவு மக்கள் குவிந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு காரணம் புதுவை யின் மீதுள்ள ஈர்ப்புதான்.
வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர்.
வியாபாரத்தை அதிகரிக்கும் வகையில் வணிகத் திருவிழா நடத்தப்படுகிறது.சுற்றுலா துறை சார்பில் புதுவை மாநிலம் முழுவதும் வணிகத் திருவிழா விரைவில் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். அப்போது தான் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் நேரு வீதி வணிகர் சங்க தலைவர் நமச்சிவாயம், துணை தலைவர்கள் இசைகலைவன், நடராஜன், கணேசன், செயல் துணை தலைவர் குகன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பழனி அடைக்கலம், இணை செயலாளர்கள் வெங்கடேஷ், செல்வகணபதி, மகேஷ், செல்வக்குமார், இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த வணிகத் திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த காலகட்டத்தில் நேரு வீதி கடைகளில் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்படும்.
- நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
- புதுவை, காரைக்கால், ஏனாமில் தலா ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
புதிய உருமாறிய கொரோனாவும் பரவ தொடங்கியுள்ளது. புதுவையில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்து வந்தது. இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு கொரோனா தொற்று மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.
புதுவையில் ஆயிரத்து 200 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 9, காரைக்காலில் ஒருவர் என 10 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுவையில் 22, காரைக்காலில் 3, ஏனாமில் 5 பேர் என மொத்தம் 30 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவை, காரைக்கால், ஏனாமில் தலா ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 90 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
பொது இடங்களில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
- புதுவை அரசை ஏமாற்றி ரூ.பல ஆயிரம் கோடி ஏமாற்றிய பெரிய மதுபான ஆலையை கிரண்பேடி பூட்டினார், அதை தமிழிசை திறந்து வைத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் கவர்னர் கிரண்பேடி, பெருகி வரும் மது கலாச்சாரத்தால் புதுவை அழிந்து வருகிறது, மதுக்கடைகள் தேவையில்லை என கூறியுள்ளார்.
இதை புதுவை மக்கள் வரவேற்க வேண்டும். வளமான புதுவையை உருவாக்க மதுகலாச்சாரம் வளரக்கூடாது என்ற அக்கறையில் அவர் கூறியுள்ளார்.
புதுவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மாநிலத்தை காப்போம் என உறுதிமொழி ஏற்ற முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அழிவை பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது. கவர்னராக கிரண்பேடி காப்பாற்றிய மக்களை தற்போதைய கவர்னர் தமிழிசை திண்டாட விடுகிறார். புதுவை அரசை ஏமாற்றி ரூ.பல ஆயிரம் கோடி ஏமாற்றிய பெரிய மதுபான ஆலையை கிரண்பேடி பூட்டினார், அதை தமிழிசை திறந்து வைத்துள்ளார்.
5 புதிய மதுபான ஆலைக்கு கவர்னர் தமிழிசை அனுமதியளித்து, நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக புதுவையை மாற்ற அனுமதித்துள்ளார்.
கவர்னர் தமிழிசை காலத்தில் ரெஸ்டோ பார்கள், பப் பார்கள் அதிகரி த்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை, அறங்காவலர் குழுவில் பெண்கள் நியமனம் என பல விஷயங்கள் கவர்னர் கிரண்பேடி சிறப்புடன் செயல்பட்டார். ஆனால் கவர்னர் தமிழிசை தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை.
புதுவையின் கலாச்சா ரத்தை காப்பாற்ற புதிதாக வழங்கப்பட்ட மதுபார் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நீரழிவு நோய் கொடுமையால் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதற்கிடையே அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் பாஷாவுக்கு நீரழிவு நோய் ஏற்பட்டது.
புதுச்சேரி:
நீரழிவு நோய் கொடுமையால் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உடையார் குடி கிராமத்தை சேர்ந்த பாஷா (வயது 52) இவருக்கு ஒரு மகனும் 2 மகளும் உள்ளனர். இவரது மனைவி கடந்த 1 வருடத்துக்கு முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். மனைவி இறந்த வேதனையில் பாஷா குடிபழக்கத்துக்கு ஆளானார்.
அவர் புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் தங்கி டிரைவர் வேலை செய்து வந்தார். அவ்வப்போது திருவண்டார் கோவிலில் உள்ள உறவினர் நூர் முகமது வீட்டுக்கு சென்றுவருவார்.
இதற்கிடையே அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் பாஷாவுக்கு நீரழிவு நோய் ஏற்பட்டது. இதனால் அவர் தினமும் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு பாஷாவுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பாஷா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நள்ளிரவில் கூரியர் நிறுவனத்தின் பின்புற முள்ள குடோனில் பாஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது உறவினர் நூர் முகமது கொடுத்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






