என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மதுபார் உரிமையை ரத்து செய்யுங்கள்-முன்னாள் எம்.பி. கோரிக்கை
- புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
- புதுவை அரசை ஏமாற்றி ரூ.பல ஆயிரம் கோடி ஏமாற்றிய பெரிய மதுபான ஆலையை கிரண்பேடி பூட்டினார், அதை தமிழிசை திறந்து வைத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் கவர்னர் கிரண்பேடி, பெருகி வரும் மது கலாச்சாரத்தால் புதுவை அழிந்து வருகிறது, மதுக்கடைகள் தேவையில்லை என கூறியுள்ளார்.
இதை புதுவை மக்கள் வரவேற்க வேண்டும். வளமான புதுவையை உருவாக்க மதுகலாச்சாரம் வளரக்கூடாது என்ற அக்கறையில் அவர் கூறியுள்ளார்.
புதுவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மாநிலத்தை காப்போம் என உறுதிமொழி ஏற்ற முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அழிவை பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது. கவர்னராக கிரண்பேடி காப்பாற்றிய மக்களை தற்போதைய கவர்னர் தமிழிசை திண்டாட விடுகிறார். புதுவை அரசை ஏமாற்றி ரூ.பல ஆயிரம் கோடி ஏமாற்றிய பெரிய மதுபான ஆலையை கிரண்பேடி பூட்டினார், அதை தமிழிசை திறந்து வைத்துள்ளார்.
5 புதிய மதுபான ஆலைக்கு கவர்னர் தமிழிசை அனுமதியளித்து, நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக புதுவையை மாற்ற அனுமதித்துள்ளார்.
கவர்னர் தமிழிசை காலத்தில் ரெஸ்டோ பார்கள், பப் பார்கள் அதிகரி த்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை, அறங்காவலர் குழுவில் பெண்கள் நியமனம் என பல விஷயங்கள் கவர்னர் கிரண்பேடி சிறப்புடன் செயல்பட்டார். ஆனால் கவர்னர் தமிழிசை தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை.
புதுவையின் கலாச்சா ரத்தை காப்பாற்ற புதிதாக வழங்கப்பட்ட மதுபார் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






