என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.18 லட்சத்தில்  சாலை அமைக்கும் பணி
    X

    பாகூரில் சாலை அமைக்க பூமி பூஜையை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ரூ.18 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

    • கிருஷ்ணா நகர் பகுதியில் சாலை பள்ளமாக இருப்பதால் அடிக்கடி மழை நீர் தேங்கி அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
    • இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் புதிய சாலை வசதி ஏற்படுத்தி தர செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதி மேற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கணபதி நகர், கிருஷ்ணா நகர் பகுதியில் சாலை பள்ளமாக இருப்பதால் அடிக்கடி மழை நீர் தேங்கி அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் புதிய சாலை வசதி ஏற்படுத்தி தர செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக செம்மண் சாலை ரூ.18 லட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், 100 நாள் வேலையில் ஈடுபடும் பெண்களிடம் பேசுவையில் கூடுதல் நாட்கள் தொடர்ந்து வேலை கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், உதவி பொறியாளர் ராமன் மற்றும் துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×