என் மலர்
நீங்கள் தேடியது "Handicraft"
- புதுவை தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழில் மையம் இணைந்து கடற்கரை சாலை காந்தி திடலில் நடத்திய கைவினை பொருள் கண்காட்சியை 14 நாட்கள் நடந்தது.
- கண்காட்சி நிறைவு விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கைவினை கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
புதுச்சேரி:
புதுவை தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழில் மையம் இணைந்து கடற்கரை சாலை காந்தி திடலில் நடத்திய கைவினை பொருள் கண்காட்சியை 14 நாட்கள் நடந்தது.
இதில் கலைஞர்களின் பொம்மை கள், தோல் பொருட்கள், மரப்பொ ருட்கள் என ரூ.84 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகியுள்ளன.
கண்காட்சி நிறைவு விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கைவினை கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
தொழில்துறை இயக்கு னர் யாசம்ரெட்டி வரவேற்றார். துணை இயக்குனர் மோகன்குமார் நன்றிகூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட தொழில் மைய துணை இயக்க மேலாளர் அரங்கநாதன், ஜெயராமன், உதவி இயக்குனர்கள் முத்துகிருஷ்ணன், தனகோவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
- லோக்மானியாவில் இருந்து கோவை செல்லும் குர்லா ரெயிலில் குட்க கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
- சோதனை செய்தபோது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களில் 12 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சேலம்:
லோக்மானியாவில் இருந்து கோவை செல்லும் குர்லா ரெயிலில் குட்க கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சரவணன், கண்ணன், சாய் அரசு ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் உள்ள புளூ கலர் சொல்டர் பேக்கை சோதனை செய்தபோது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களில் 12 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலையை பறிமுதல் செய்து கடத்தி வந்த இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (37) என்பது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளையோர் முதல் 72 வயது முதிய பெண்மணி வரை பயிற்சி பெற்று வருகிறார்கள்.
- தயார்படுத்தப்பட்ட நாரின் மூலம் மணிபர்ஸ், டேபிள் மேட், கர்ட்டன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூர்:
மேலாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இ-சேவை மையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஆகாய தாமரை கைவினை பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி முகாமை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.
ஆகாய தாமரையின் அடிப்பகுதி மற்றும் இலைகளை அகற்றி தண்டு பகுதியை நன்றாக கழுவி 3 நாட்கள் தண்ணீரில் ஊற வைக்கப்பட்டு அடுத்த 3 நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். 5 முதல் 6 நாட்கள் வரை நன்றாக காய்ந்த தண்டுகள் வாழை நாரை போன்ற பக்குவத்தில் தண்டில் இருந்து தேவையான அளவுகளில் நார் பிரித்தெடுக்கப்படுகிறது.
பின்னர் பிரித்தெடுக்கப்பட்ட நாரினை எந்திரம் மூலம் தயார்படுத்தப்படுகிறது.
தயார்படுத்தப்பட்ட நாரின் மூலம் மணிபர்ஸ், பல விதமான கூடைகள், பைகள், அழகு பொருட்கள், சமையலறை பொருட்கள் வைப்பதற்கான உபகரணங்கள், டேபிள் மேட், கர்ட்டன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடந்து முடிந்த நெய்தல் திருவிழாவில் கண்காட்சி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இக்கண்காட்சி விரிவடையும் விதமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்காட்சி அமைக்கப்படும். பொருட்களை சந்தைப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் இளையோர் முதல் 72 வயது முதிய பெண்மணி வரையும் பயிற்சி பெற்று வருகிறார்கள். இப்பயிற்சியானது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விரிவுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இதில் மகளிர் திட்ட மாவட்ட அதிகாரி வீரபத்ரன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ புகாரி, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், மேலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், துணைத் தலைவர் பக்கீர் முகைதீன் செயலாளர் சுமதி, கிரியேடிவ் பீ பயிற்சியாளர் ரமணாதேவி, பணித்தள பொறுப்பாளர் சுதா, ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன்,சுய உதவிகுழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.






