என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • உப்பளம் தொகுதி க்குட்பட்ட உடையார் தோட்டத்தில் உயர் மின்கம்பிகள் பொதுமக்கள் வசிக்கும் வீட்டிற்க்கு மேலே தாழ்வான நிலையில் தளர்ந்து இருப்பததால் 2 பேர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
    • 2 நாட்களில் தாழ்வான மின்கம்பிகளை சரிசெய்து தருவதாக செயற்பொறியாளர் உத்தரவாதம் அளித்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி க்குட்பட்ட உடையார் தோட்டத்தில் உயர் மின்கம்பிகள் பொதுமக்கள் வசிக்கும் வீட்டிற்க்கு மேலே தாழ்வான நிலையில் தளர்ந்து இருப்பததால் 2 பேர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் தெரியப்படுத்தினர். அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் மின் துறை செயற்பொறியாளர் கனி யமுதனிடம் செல்போனில் தெரியப்படுத்தினார். இதை தொடர்ந்து உதவி பொறியாளர் ஜில்பட் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். 2 நாட்களில் தாழ்வான மின்கம்பிகளை சரிசெய்து தருவதாக செயற்பொறியாளர் உத்தரவாதம் அளித்தார். அதை தொடர்ந்து அப்பகுதி எரியாமல் உள்ள அனைத்து மின்விளக்ககளையும் சரிசெய்து தருவதாக இளநிலை பொறியாளர் எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார்.

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி) கோவை ஷ்யூர்டி ஐ.எம்.எப். நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • பின் குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் ஆகிய சுற்றுகளாக முகாம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி) கோவை ஷ்யூர்டி ஐ.எம்.எப். நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    கல்லூரி தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார்.

    கோலை ஷ்யூர்டி ஐ.எம்.எப். நிறுவன மனிதவள துறை மேலாளர் சக்திவேல் மற்றும் குழுவினர், நிறுவன விபரங்கள் இங்கு பணிபுரிவோருக்கான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், ஊதியம் பற்றி கூறினர்.

    பின் குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் ஆகிய சுற்றுகளாக முகாம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், மேலாண்மை மற்றும் பொறியியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.

    • சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
    • கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார்.

    புதுச்சேரி:

    ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீ நிவாஸ் அசோக் தனது தொகுதியில் நலத்திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராாட்டம் நடத்தி வந்தார்.

    அவரது உண்ணாவிரத போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேசுவதற்காக புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் ஏனாம் புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் சந்தித்தனர். அப்போது கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் நள்ளிரவில் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

    • வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
    • வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை பாலாஜி தியேட்டர் எதிரே உள்ள சாந்திநகர் விரிவு 2-வது குறுக்கு தெருவில் நேற்றிரவு 9.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்திருந்தது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த வாகனத்தின் அருகே கூழாங்கற்கள் சில சிதறி கிடந்தது. வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். அந்த இடத்தில் கூழாங்கற்கள் மற்றும் பட்டாசு வெடிமருந்தை தவிர வேறு எதுவும் இல்லாததால் வெடிக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டா என்பதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்த 8 கேமராக்களை சோதனையிட்டதில் 6 சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் வேகமாக ஓடுவதும், சிறிது தூரம் சென்று நடந்து சென்றதும் பதிவாகி இருந்தது.

    இதனையடுத்து அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான 6 சிறுவர்களின் அடையாளங்களை கொண்டு போலீசார் கோவிந்தசாலை, திடீர் நகர் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இறுதியில் அவர்கள், கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களில் 4 பேரை போலீசார் நேற்று இரவே மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. வீட்டில் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் மீதம் இருந்தபோது, அதை வேறு விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என யூடியூப் பார்த்துள்ளனர்.

    அதில் சிறிய ரக வெடிகுண்டு தயாரிக்கலாம் என வந்துள்ளது. உடனே அதை பார்த்து அதில் கூழாங்கற்கள், வெடிமருந்து, துணிகள் சுற்றி 2 வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். ஒரு வெடிகுண்டை அவர்கள் வீசி பார்த்தபோது சத்தம் வராமல் வெளிச்சம் மட்டும் வந்துள்ளது. மற்றோரு வெடிகுண்டை வீசியபோது தான் சத்தத்துடன் வெடித்துள்ளது.

    இதனையடுத்து 4 பேரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமனின் 82-வது பிறந்தநாளையொட்டி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மகாலில் பொதுமக்களுக்கு ரூ.5 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார் முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு, தி.மு.க. மாநில, தொகுதி அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமனின் 82-வது பிறந்தநாளையொட்டி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மகாலில் பொதுமக்களுக்கு ரூ.5 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஜானகிராமன் மகன் சரவணன் என்ற ஆறுமுகம் முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் நடராஜன் உட்பட நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். விழா முடிந்ததும் வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை உணவு விருந்தளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார் முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு, தி.மு.க. மாநில, தொகுதி அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆம்பூர் சாலையில் உள்ள முன்னாள் முதல்- அமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் வீட்டில் அலங்கரிக்கப்பட்ட அவரின் படத்திற்கு மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வி.ஜா. சரவணன் என்கின்ற ஆறுமுகம், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் கைலாஷ் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    மேலும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார், நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. ரிச்சசர்ட், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மறைந்த ஜானகிராமன் குடும்பத்தார் விஜயலட்சுமி, சாந்தாபாய், சரவணன், சந்திரேஷ் குமார், அசோக்குமார், மருத்துவரணி மாநில செயலாளர் டாக்டர் கைலாஷ்,என்ஜினீயர் மனோஜ் குமார் மற்றும் என்ஜினீயர் அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • டி.என். பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி டி.என்.பாளையம் மற்றும் அபிஷேகப்பாக்கம் விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் இந்த கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது.
    • அப்பொழுது பேச்சு வார்த்தை அடிப்படையில் அடுத்த முறை பணியமர்த்தும் பொழுது உங்கள் பகுதி மக்களுக்கு வேலைவாய்பு கொடுக்கின்றோம் என உறுதியளித்து இருந்தனர்.

    புதுச்சேரி:

    டி.என். பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி டி.என்.பாளையம் மற்றும் அபிஷேகப்பாக்கம் விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் இந்த கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்து வங்கியில் உள்ள வேலை வாய்ப்பை நிர்வாகமே பணியமர்த்தி கொள்கிறது.

    ஆனால் இந்த வங்கி 4 கிராமமக்களுக்கும் பொதுவானது. எனவே அனால் ஒரு தரப்பை சார்ந்தவர்களுக்கே வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடந்தது.

    அப்பொழுது பேச்சு வார்த்தை அடிப்படையில் அடுத்த முறை பணியமர்த்தும் பொழுது உங்கள் பகுதி மக்களுக்கு வேலைவாய்பு கொடுக்கின்றோம் என உறுதியளித்து இருந்தனர்.

    இந்த நிலையில் கூட்டுறவு வங்கி நிர்வாகம் மீண்டும் வேறு ஒரு நபரை நியமித்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் டி. பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த முற்றுகை போராட்டத்திற்கு ஆதிதி ராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரோக அருள்தாஸ் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ வேலு, குணசேகர், குமார், வீரபாலன், ராஜா, பவுல்ஆண்டனி மற்றும் பொதுமக்கள் பலர் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களை அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், தவளகுப்பம் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    தற்பொழுது பணியமர்த்திய வரை நீக்கி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

    இந்த போராட்டத்தல் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    • மங்கலம் தொகுதியில் ஏழை பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் 240 பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயபால், முன்னாள் வாரிய தலைவர்கள் பாலமுருகன், ரேவதி பற்குணன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதியில் ஏழை பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் 240 பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கினார்.

    தொடர்ந்து மங்கலம் தொகுதியில் ஏழைகளுக்கு அரசு கொடுத்த மனைப்பட்டாவுக்கு புதிய வழிகாட்டு மதிப்பீடுடன் கூடிய மனைப்பட்டாவை 700 பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயபால், முன்னாள் வாரிய தலைவர்கள் பாலமுருகன், ரேவதி பற்குணன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அமைச்சரவையில் இருக்கும் 25 சதவீத அமைச்சர்கள் ஜெயலலிதாவால் பதவி சுகம் அனுபவித்த பின் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து சென்றவர்கள். அதில் ஒருவர்தான் அமைச்சர் ராமச்சந்திரன்.
    • மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்- அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் ெஜயலலிதாவை மரியாதையாக அம்மையார் என்றே அழைப்பார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அமைச்சரவையில் இருக்கும் 25 சதவீத அமைச்சர்கள் ஜெயலலிதாவால் பதவி சுகம் அனுபவித்த பின் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து சென்றவர்கள். அதில் ஒருவர்தான் அமைச்சர் ராமச்சந்திரன். முதலில் அமைச்சர் ராமச்சந்திரன் தனது பேச்சை திரும்ப பெற வேண்டும்.

    தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து மக்கள் இதயத்தில் இன்றளவும் வாழ்ந்து வரும் ஜெயலலிதா பற்றி யார் தரம் தாழ்ந்து பேசினாலும் எதிர் வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழக அமைச்சர்கள் தாங்கள் துறை சார்ந்த பணிகளை பாராமல் தங்கள் தலைமையை குளிர்விக்க பல்வேறு விஷயங்களை சர்ச்சையாக பேசி வருவது தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்- அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் ெஜயலலிதாவை மரியாதையாக அம்மையார் என்றே அழைப்பார்கள். ஜெயலலிதாவால் அரசியலில் அடையாளம் காட்டப்பட சிலர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசுவது ஏற்று கொள்ளதக்கதல்ல. எனவே அமைச்சர் ராமச்சந்திரன் உடனடியாக தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்.

    தனது அமைச்சர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் வாய்ப்பூட்டு போட வேண்டும். இல்லாவிட்டால் புதுவைக்கு தமிழக அமைச்சர்கள் வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுவை பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், மாநில மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி.யும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அசோக் சித்தார்த், மத்திய ஒருங்கிணைப்பாளர், நித்தின் சிங் தலைமையேற்று கலந்துகொண்டனர்.
    • நிகழ்ச்சியில் 200 இளைஞர்களுடன் சீஷப்பிள்ளை கட்சியில் இணைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், மாநில மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி.யும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அசோக் சித்தார்த், மத்திய ஒருங்கிணைப்பாளர், நித்தின் சிங் தலைமையேற்று கலந்துகொண்டனர்.

    அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின் 150 வாகனங்களில் 300 பேர்கள் யானைக்கொடியேந்தி பங்கேற்றனர்.

    அதனை தொடர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளராக பாவானி இளவேனிலை தேசிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்தனர். இளைஞர்கள் அனைவரும் ஜெய் பீம் முழக்கமிட்டனர்.

    அதனை தொடர்ந்து ஏற்புரை வழங்கிய மாநில ஒருங்கிணைப்பாளர் பவானி இளவேனில் புதுவையில் பாபாசாகேப் அம்பேத்கர் கொள்கையை வெற்றியடைய செய்வதே லட்சியம் என பேசினார்.

    நிகழ்ச்சியில் 200 இளைஞர்களுடன் சீஷப்பிள்ளை கட்சியில் இணைந்தனர். கூட்டத்தில் புதுவை மாநில தலைவர் மூர்த்தி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

    பறை இசை மற்றும் கொள்கை பாடலுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர்கள் கி.கோ.மதிவதணன் மற்றும் உதயகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர்.

    • தாம்பரத்தில் உள்ள கேசவன் என்பவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி கஞ்சா பொட்டலங்களை வாங்கி விற்று வந்ததாக தெரிவித்தனர்
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    சேதராப்பட்டு:

    கோட்டக்குப்பம் பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகம் இருப்பதும் அதனை போலீசார் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில், கோட்டகுப்பம் ஜமீத் நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து கஞ்சா விற்ற புதுவை ஆட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் என்ற பாண்டியன் (வயது 22) என்பவரை கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர் பாக்கெட்டுகளில் வைத்திருந்த 9 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் சோலை நகரைச் சேர்ந்த அருண் (22) மற்றும் லாஸ்பேட்டையைச் சேர்ந்த அஜித்குமார் (24) ஆகியோர் தனக்கு கஞ்சா சப்ளை செய்ததாக தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் அருணையும் அஜித்குமாரையும் கோட்டக்குப்பம் போலீசார் மடக்கி பிடித்தனர். இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை தாம்பரத்தில் கேசவன் என்பவருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தி அங்கிருந்து அவர் மூலம் புதுவை பஸ் நிலையத்திற்கு ஒருவர் கஞ்சாவை கிலோ கணக்கில் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள் என்றும் இந்த கஞ்சா பொட்டலங்களை புதுவையிலும் கோட்டக் குப்பம் பகுதியிலும் விற்று வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களி டமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    • நெட்டப்பாக்கத்தில் எலக்ட்ரீஷியன் மயங்கி விழுந்து இறந்து போனார். நெட்டப்பாக்கம் போலீஸ் வீதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது50). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
    • உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கத்தில் எலக்ட்ரீஷியன் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    நெட்டப்பாக்கம் போலீஸ் வீதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது50). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    வழக்கும் போல் ஜெயச்சந்திரன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். இரவு சாப்பிட்டு விட்டு தூங்கினார். அவரது மனைவி லதா படுக்கை அறையில் பார்த்த போது அங்கு ஜெயச்சந்திரன் பேச்சு மூச்சின்றி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெயச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனை அருகே தமிழக பகுதியான குச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(52). விவசாயி. இவர் ஆண்டியார்பாளையத்தில் உள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடித்து விட்டு வீடு திரும்புவது வழக்கம்.

    அதுபோல் முருகன் ஆண்டியார்பாளையத்துக்கு சாராயம் குடிக்க சென்றார். ஆனால் அதன்பிறகு முருகன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் அஜித்குமார் சாராயக்கடைக்கு சென்ற போது அங்குள்ள இடிந்து போன கட்டிடத்தில் முருகன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அவர் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்ததால் நாக்கு வறண்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மகன் அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஏனாமில் 19-வது மக்கள் கலைவிழா 3 நாட்கள் நடந்தது. ஏனாமில் மக்கள் நலத்திட்டங்களை நிறை வேற்றாமல் கலைவிழா நடத்துவதை கண்டித்து, விழாவை புறக்கணித்து தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
    • இந்த நிலையில் ஏனாம் கலைவிழாவின் நிறைவுவிழா நடந்தது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏனாம் சென்றார்.

    புதுச்சேரி:

    ஏனாமில் 19-வது மக்கள் கலைவிழா 3 நாட்கள் நடந்தது. ஏனாமில் மக்கள் நலத்திட்டங்களை நிறை வேற்றாமல் கலைவிழா நடத்துவதை கண்டித்து, விழாவை புறக்கணித்து தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டமும் நடந்து வருகிறது.

    தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய எம்.எல்.ஏ. அசோக், முதல்-அமைச்சர் ஏனாம் வந்தால் அவருக்கு மக்கள் அவமரியாதை செய்வார்கள் என கூறியதாக தகவல் பரவியது. இது என்.ஆர்.காங்கிரசாரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புதுவைக்கு எம்.எல்.ஏ. வந்தால் அவரை சிறை பிடிப்போம் என தெரிவித்து, அவர் மீது போலீசில் புகாரும் அளித்தனர்.

    எம்.எல்.ஏ. அசோக், தனது கருத்தை தவறாக சித்தரித்துள்ளனர் என தெரிவித்ததால் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஏனாம் கலைவிழாவின் நிறைவுவிழா நடந்தது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏனாம் சென்றார்.

    அவரை டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ், நிர்வாகி முனுசாமி ஆகியோர் வரவேற்றனர். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தில் ஜி20 பிரநிதிநிதிகள் கூட்டத்தை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது மாநிலத்திற்குபெருமை தரக்கூடியது. மத்திய அரசிடம் அதிக நிதி பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில குறைகள் உள்ளது. இவற்றை விரைவாக சரிசெய்ய முடியாமல் இருக்கலாம். இதற்கு புதுவை முழு அதிகாரம் இல்லாத மாநிலமாக இருப்பதுதான் காரணம்.

    சிலநேரங்களில் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.மத்திய அரசின் உதவியோடு சிறப்பான நிலையை அடைய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். மாநில வளர்ச்சிக்கான எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கைகள், கருத்துக்களை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன், கே.எஸ்.பி ரமேஷ், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    ×