என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வேளாண் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்
    X

    தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்ட காட்சி.

    வேளாண் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்

    • டி.என். பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி டி.என்.பாளையம் மற்றும் அபிஷேகப்பாக்கம் விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் இந்த கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது.
    • அப்பொழுது பேச்சு வார்த்தை அடிப்படையில் அடுத்த முறை பணியமர்த்தும் பொழுது உங்கள் பகுதி மக்களுக்கு வேலைவாய்பு கொடுக்கின்றோம் என உறுதியளித்து இருந்தனர்.

    புதுச்சேரி:

    டி.என். பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி டி.என்.பாளையம் மற்றும் அபிஷேகப்பாக்கம் விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் இந்த கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்து வங்கியில் உள்ள வேலை வாய்ப்பை நிர்வாகமே பணியமர்த்தி கொள்கிறது.

    ஆனால் இந்த வங்கி 4 கிராமமக்களுக்கும் பொதுவானது. எனவே அனால் ஒரு தரப்பை சார்ந்தவர்களுக்கே வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடந்தது.

    அப்பொழுது பேச்சு வார்த்தை அடிப்படையில் அடுத்த முறை பணியமர்த்தும் பொழுது உங்கள் பகுதி மக்களுக்கு வேலைவாய்பு கொடுக்கின்றோம் என உறுதியளித்து இருந்தனர்.

    இந்த நிலையில் கூட்டுறவு வங்கி நிர்வாகம் மீண்டும் வேறு ஒரு நபரை நியமித்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் டி. பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த முற்றுகை போராட்டத்திற்கு ஆதிதி ராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரோக அருள்தாஸ் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ வேலு, குணசேகர், குமார், வீரபாலன், ராஜா, பவுல்ஆண்டனி மற்றும் பொதுமக்கள் பலர் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களை அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், தவளகுப்பம் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    தற்பொழுது பணியமர்த்திய வரை நீக்கி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

    இந்த போராட்டத்தல் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    Next Story
    ×