என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை மின்துறை வீட்டு உபயோக கட்டணத்தை யூனிட்டுக்கு சராசரியாக ரூ.45 பைசா உயர்த்தியுள்ளது. வழக்கமாக அரசு பரிந்துரை செய்யும் கட்டணம், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் ஏற்கப்படும்.
    • இதுனால் அன்றாட கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மின்துறை வீட்டு உபயோக கட்டணத்தை யூனிட்டுக்கு சராசரியாக ரூ.45 பைசா உயர்த்தியுள்ளது. வழக்கமாக அரசு பரிந்துரை செய்யும் கட்டணம், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் ஏற்கப்படும். பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டாலும், திட்டமிட்டபடி கட்டணத்தை மின்துறை உயர்த்துவதுதான் வாடிக்கை.

    இந்த கட்டண உயர்வால் புதுவையில் அனைத்து பொருட்களின் விலையும் உயரும். புதுவை மக்கள் மாதந்தோறும் செலுத்தும் மின்கட்டணம் சுமார் ரூ.500 வரை கணிசமாக உயரும். இந்த கட்டண உயர்வை புதுவை மக்களால் ஏற்க முடியாது.

    புதுவையில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட பல தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை. புதிய தொழிற்சாலை களை கொண்டுவர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுனால் அன்றாட கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.

    படித்த இளைஞர்கள் அண்டை மாநிலங்களுக்கு கொத்தடிமைகள் போல கிடைத்த வேலைக்கு சொற்ப சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். புதுவை இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை, வேலைவாய்ப்பை அளிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களில் கண்துடைப்புக்காக ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதால் எந்தவித மாற்றமும் ஏற்படாது. இத்தகைய சூழலில் புதுவை மாநில மக்களுக்கு பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும் மின் கட்டண உயர்வை பொங்கல் பரிசாக அரசு அறிவித்துள்ளதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் பரிந்துரை செய்த வீட்டு உபயோக கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். மின் கட்டணம், குப்பை வரி, வீட்டுவரி, குடிநீர் வரி என தனித்தனியே வரி விதித்துவிட்டு, ஆண்டு தோறும் வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்வதாக போலி கபட நாடகம் ஆடுவதை முதல்-அமைச்சர் நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுச்சேரி மாநில அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி லாஸ்பேட்டையில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
    • இந்த கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிர்வாகிகள் டாக்டர் உதயச்சந்திரன், ஸ்ரீதேவி, பீமாராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி லாஸ்பேட்டையில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    இந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஏம்பம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியி வி.பி. ராமலிங்கம் தாகூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சத்திகாந்த தாஸ், பா.ஜனதா கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் வெற்றி செல்வம், விஷ்வ ஹிந்து பரிஷத் வேல்முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இந்த கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிர்வாகிகள் டாக்டர் உதயச்சந்திரன், ஸ்ரீதேவி, பீமாராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • இந்திய அளவில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மத்திய மனித வள மேம்பாட்டு துறை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் இணைந்து கலா உத்சவ் போட்டிகளை நடத்துகிறது.
    • பிளஸ்-2 மாணவி பிரியத ர்ஷினி மாணவிகள் பிரிவில் வேற்றுமையில் ஒற்றுைம என்பதை விளக்கும் வகையில் பொய்க்கால் குதிரையாட்டம், காவடி, கரகம், மான் கொம்பு, தெம்மாங்கு ஆகிய நடனங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

    புதுச்சேரி:

    இந்திய அளவில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மத்திய மனித வள மேம்பாட்டு துறை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் இணைந்து கலா உத்சவ் போட்டிகளை நடத்துகிறது.

    இந்தாண்டு நடந்த போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 733மாணவர்கள் பங்கேற்றனர்.

    இதில் புதுவை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவன் ஹஷ்வின் குமார், மாணவர்கள் பிரவில் பாரம்பரிய கிராம நடனத்தில் விவசாயம் தான நாட்டின் முதுகெலும்பு, நாட்டின் உயிர் மூச்சு என்பதை விளக்கும் வகையில் கனியன் கூத்து, காவடியாட்டம், கரகம், சிலம்பம் ஆகிய நடனங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

    பிளஸ்-2 மாணவி பிரியத ர்ஷினி மாணவிகள் பிரிவில் வேற்றுமையில் ஒற்றுைம என்பதை விளக்கும் வகையில் பொய்க்கால் குதிரையாட்டம், காவடி, கரகம், மான் கொம்பு, தெம்மாங்கு ஆகிய நடனங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

    தேசிய அளவிலான நடன போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவன் ஹஷ்வின் குமார் தங்க பதக்கத்தையும் மாணவி பிரியதர்ஷினி வெள்ளி பதக்கத்தையும் வென்று அரசுக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

    இந்த மாணவர்களை பள்ளி நிறுவனர் மற்றும் முதுநிலை முதல்வர் லூர்துசாமி, பாராட்டி மாணவன் ஹஷ்வின் குமாருக்கு 4 கிராம் தங்க காசும், மாணவி பிரியதர்ஷினிக்கு 2 கிராம் தங்க காசும் பரிசாக வழங்கினார்.

    இந்த பள்ளி தேசிய கலா உத்சவ் போட்டிகளில் தொடர்ந்து 4-வது முறையாக வென்று பதக்கம் பெறுவது குறிப்பிடத் தக்கது.

    • வில்லியனூரில் சி.பி.சி.ஐ.டி. ஏட்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கடந்த 19 ஆண்டு காவல்துறையில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய சக்திவேலுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் சி.பி.சி.ஐ.டி. ஏட்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுவை காவல்துறை சி.பி.சி.ஐ.டி. பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் வில்லியனூர் ஜி.என் பாளையத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

    இவருக்கு வள்ளி என்ற மனைவி, வெங்கடேசன் என்ற மகன், பிரதீபா என்ற மகள் உள்ளனர். பிரதீபா மற்றும் வெங்கடேசன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 19 ஆண்டு காவல்துறையில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய சக்திவேலுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. சிறுநீரகத்தில் கல் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடி க்கப்பட்டது.

    இந்நிலையில், நோய் குணமடைய தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களாக விடுமுறையில் வீட்டிலிருந்த சக்திவேல் வீட்டுக்குள் மாடிக்குச் செல்லும் படிக்கட்டு இரும்பு தூணில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சக்திவேல் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    சக்திவேல் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சி.பி.சி.ஐ.டி. ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் (எம்.ஐ.டி) , சென்னை வோல்டெக் குரூப் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் (எம்.ஐ.டி) , சென்னை வோல்டெக் குரூப் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    இந்த முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் பாலமுருகன் , தவமணி மற்றும் குழுவினர், நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர்.

    தொழில்நுட்ப கலந்துரையாடல் மற்றும் மனிதவள நேர்காணல் ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    முகாமை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த எம்.ஐ.டி. கல்லூரி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மயிலம் பொறியியல் கல்லூரி மற்றும் மின் மற்றும் மின்னணுவியல் துறை இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் 200-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தின் பணி நியமன ஆணை பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் சண்முகசுந்தரம் செய்து இருந்தனர்.

    • ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
    • ரசிகர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    அஜித் குமார் நடித்து பொங்கல் திரை விருந்தாக துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 2 மணிக்கு வெளியானது.

    புதுவையில் 13 திரையரங்குகள் இருந்தாலும் முன் அனுமதி பெற்ற திரையரங்குகளில் மட்டும் அதிகாலையில் படம் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் புதுவையில் சண்முகா, ரத்னா ஆகிய 2 திரையரங்குகளில் மட்டுமே படம் திரையிடப்பட்டது.

    முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறைந்த அளவிலேயே இருக்கைகள் கொண்ட சண்முகா திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடியதால் காவல்துறையினர் டிக்கெட்டை பரிசோதித்து உள்ளே அனுப்பினர்.

    டிக்கெட் இன்றி உள்ளே வந்த ரசிகர்களை போலீசார் கட்டாயத்துடன் குண்டுகட்டாக வெளியேற்றினார்கள். அப்போது ரசிகர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது.

    இதையும் மீறி டிக்கெட் இல்லாமல் உள்ளே வர முயன்றவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். திரையரங்கு வெளியே நின்று கோஷமிட்டவர்களை போலீசார் கட்டாயப்படுத்தி துரத்தினர்.

    முன்னதாக திரையரங்கில் வெளியே வைக்கப்பட்டிருந்த அஜீத் பேனர் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். ரத்னா திரையரங்கின் வெளியே பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

    • புதுவை மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது.
    • பால் விலை உயா்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பாண்லே சார்பில் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.

    அதாவது நீலநிற பாக்கெட்டில் விற்பனையாகும் டோண்ட் மில்க் லிட்டர் ரூ.42-ல் இருந்து ரூ.46 ஆகவும், ஸ்பெஷல் டோண்ட் மில்க் (பச்சை நிற பாக்கெட்) லிட்டர் ரூ.44-ல் இருந்து ரூ.48 ஆகவும், ஸ்டாண்டர்டு மில்க் (ஆரஞ்சு நிற பாக்கெட்) ரூ.48-ல் இருந்து ரூ.52 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த பால் விலை உயா்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

    • புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், ஏனாமில் மக்கள் நலத்திட்டங்களுக்காக 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக்கை அவரின் வீட்டில் சந்தித்தார்.
    • தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் அனைத்து தொகுதிகளையும் பாரபட்சமின்றி கவனித்து, நலத்திட்டங்களை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், ஏனாமில் மக்கள் நலத்திட்டங்களுக்காக 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக்கை அவரின் வீட்டில் சந்தித்தார்.

    அப்போது அவர் நடத்திய போராட்டம், கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் வையாபுரி மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அசோக், பலமுறை அமைச்சராக இருந்தவரின் ஆதரவுடன் போட்டியிட்ட முதல்-அமைச்சரை வெற்றி பெற்றுள்ளார். இதற்கு ஏனாம் தொகுதி மக்கள் அசோக் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம். எம்.எல்.ஏ. தேர்தலோடு வெற்றி, தோல்வி முடிந்துவிட்டது.

    தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் அனைத்து தொகுதிகளையும் பாரபட்சமின்றி கவனித்து, நலத்திட்டங்களை வழங்க வேண்டும். ஏனாமில் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏவை செயல்படவிடாமல் அரசியல் செய்கின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏனாம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயங்குகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஏனாமிற்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாததற்கு புதுவைக்கு முழு அதிகாரம் இல்லாததுதான் காரணம் என தெரிவித்துள்ளார். முழு அதிகாரம் இல்லாவிட்டால் முதல்-அமைச்சர் பதவியில் ஏன் நீடிக்க வேண்டும்? மதுபான ஆலைகள், கவர்ச்சி நடன பார்களுக்கு அனுமதி வழங்க அதிகாரம் உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற அதிகாரம் இல்லையா?

    சூதாட்ட விடுதிகளே இருக்கக் கூடாது என்பதுதான் அரசின் எண்ணம் என ரங்கசாமி தெரிவித்துள்ளார். சட்டசபைக்கு அருகிலேயே மிகப் பெரும் சூதாட்ட கிளப் நடந்து வருகிறது. ஏனாமில் ஏழைகளின் வருமானத்தை சூதாட்ட கிளப் நடத்தி சுரண்டி வருகின்றனர். இவற்றை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற அசோக் எம்.எல்.ஏ. கோரிக்கை நியாயமானது.

    மக்களுக்காக நடைபெறும் போராட்டங்கள் என்றுமே தோல்வியை சந்தித்தது கிடையாது. எங்கள் போராட்டத்தை பற்றி மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சாமல் நாங்கள் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தமிழக கவர்னர் ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். தற்போது சட்டப்பேரவையில் அரசை அவமதித்துள்ளார்.
    • அப்போது மாநில அரசுகள் சுதந்திரமாக செயல்படுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மதசார்பற்ற அணிகள் ஒருங்கிணைக்கும் பணியை ராகுல் செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாரா யணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னர் ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். தற்போது சட்டப்பேரவையில் அரசை அவமதித்துள்ளார். சொந்த கருத்தை திணிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை. அத்துடன் தேசியகீதம் இசைக்கும் முன் வெளியேறி அவமதிப்பு செய்துள்ளார். அரசியலமைப்பை அவமதிப்பு செய்துள்ளதால் பதவியிலிருந்து ரவி விலகவேண்டும்.

    இல்லாவிட்டால் குடியரசுத்தலைவர் இதில் தலையிட்டு அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும். ஒரு நிமிடம் கூட கவர்னர் பதவியில் இருக்க ரவி தகுதியற்றவர். மோடி அரசு தூக்கி எறியப்படும். அப்போது மாநில அரசுகள் சுதந்திரமாக செயல்படுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மதசார்பற்ற அணிகள் ஒருங்கிணைக்கும் பணியை ராகுல் செய்து வருகிறார். அதுபோல் நிதிஷ்குமார், சரத்பவார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    கவர்னர் ரவியின் சட்டப்பேரவை செயல்பாடு தமிழகத்தின் கறுப்பு நாள். புதுவையில் சாராய ஆறு ஓடுகிறது. ரெஸ்டோபார், நடனநிகழ்வு போன்றவற்றால் கலாச்சாரம் சீரழிந்து மக்கள் அவதியறுகின்றனர். தொடர்ந்து போராடுவோம். நீதிமன்றமும் செல்வோம்.

    கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் சரளமாக கிடைக்கிறது. தடை செய்யப்பட்ட போதைப் பொருள், பள்ளி, பஸ்நிலையம், கல்லூரி அருகே கிடைக்கிறது. இதில் ஒன்றை சாப்பிட்டால் 2 மணி நேரம் போதையாக இருக்கும் சூழலால் இளம் சிறார்கள் அடிமையாகின்றனர்.

    போதைப்பொருளை ஒழிப்போம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மாநாடு நடத்துகிறார். புதுவையில் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸில் போதைப்பொருள் கலாச்சாரத்தை அமித்ஷாவால் தடுக்க முடியவில்லை. செயல்படாத ஊழல் அரசாக புதுவை அரசு உள்ளது.

    பா.ஜனதாவுக்கு சென்றவர்கள் நடுரோட்டில் நிற்கின்றனர். அதில் ஓர் உதாரணம் ஏனாம் எம்.எல்.ஏ. அசோக். ஆளுங்கட்சிக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போராட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் நடத்துகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி உள்ளது. முதல்-அமைச்சரை விமர்சித்திருந்தால், போலீஸ் துறையை வைத்திருக்கும் பா.ஜனதா அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்காமல் போலியாக வேஷம் போடுகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுவையில் நடந்த மாநில அளவிலான டான்ஸ் ஸ்போர்ட்ஸ் போட்டியில் திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் பங்கேற்று 24 தங்கப் பதக்கங்களையும் மற்றும் சான்றிதழை பெற்றனர்.
    • சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவையில் நடந்த மாநில அளவிலான டான்ஸ் ஸ்போர்ட்ஸ் போட்டியில் திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் பங்கேற்று 24 தங்கப் பதக்கங்களையும் மற்றும் சான்றிதழை பெற்றனர்.

    அதைத் தொடர்ந்து தேசிய அளவிலான நடன போட்டி ஆந்திராவில் நடைபெற்றது.

    அந்த நிகழ்ச்சியில் திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஷர்வன், தனீஷ், கனிஷ்கா, கார்த்திகா, தாருணிகா ஆகியோர் கலந்து கொண்டு தனிநடனம், ஜோடி நடனம், ஆகியவற்றில் பங்கு பெற்று தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்றனர்.

    சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் தனசெல்வம் தலைமை தாங்கி பாராட்டி பேசினார். திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் புதுவை சுயநிதி தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் ரங்கநாதன், புதுவை பீட்டாப்பர்ஸ் நடன அகாடமியின் மாஸ்டர் ஜான்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினர்.

    பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தனசெல்வம் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கல்லூரியோடு டி.சி.எஸ்., நிறுவன மாணவர்களுக்கு கட்டணமில்லாதிறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்ப தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் டி.சி.எஸ்., நிறுவன அதிகாரி சொப்ணா சக்ரவர்த்தி, உதவி பேராசிரியை ரத்னா பவானி, ஒருங்கிணை ப்பாளர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கல்லூரியோடு டி.சி.எஸ்., நிறுவன மாணவர்களுக்கு கட்டணமில்லாதிறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்ப தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.

    தவளக்குப்பம் ராஜிவ் காந்தி அரசு கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ருத்தரகவுடு, டி.சி.எஸ்., நிறுவனம் சார்பில் தாமஸ், பி.சாக்கோ ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

    முன்னதாக, கல்லூரி முதல்வர் ஹண்ணா மோனிஷா வரவேற்றார்.இதில் டி.சி.எஸ்., நிறுவன அதிகாரி சொப்ணா சக்ரவர்த்தி, உதவி பேராசிரியை ரத்னா பவானி, ஒருங்கிணை ப்பாளர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசு கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் சமகர சிக்‌ஷா மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • உடற்கல்வி ஆசிரியர் பால முருகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் சமகர சிக்ஷா மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கல்மண்டபம் அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கவுரி தலைமை தாங்கினார். கராத்தே மாஸ்டர்கள் ஞானசேகரன் முருகன் மற்றும் விஸ்வசுந்தரம் ஆகியோர் தற்காப்பு கலை பயிற்சி அளித்தனர்.

    ஆசிரியை அருண்மொழி வரவேற்றார்.

    உடற்கல்வி ஆசிரியர் பால முருகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×