என் மலர்
புதுச்சேரி
- புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.
- மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பால் விலை உயர்வை முதல்-அமைச்சர் ரங்கசாமி மறுபரிசீலினை செய்து குறைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புதுவையில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை உடனடியாக அரசும், கவர்னரும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள பொது விநியோக திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கி, ரேஷன் கடைகளை திறந்து அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய், மிளகாய், மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீண்டும் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.
மேலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 50 மாத சம்பள பாக்கியை வழங்கவேண்டும். மக்கள் நலன் சார்ந்த இப்பிரச்சனையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கட்சித்தலைமை அனுமதி பெற்று அ.தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்தும்.
பால் விலையேற்றத்தினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பால் விலை உயர்வை முதல்-அமைச்சர் ரங்கசாமி மறுபரிசீலினை செய்து குறைக்க வேண்டும். மின் ஒழுங்கு முறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு பரிந்துரையை அரசு ஏற்கக்கூடாது
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான முன்னாள் மாநில செயலாளர் நடராசன், ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில துணை தலைவர் ராஜாராமன் மற்றும் மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, மகாதேவி , கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள், எம்.ஏ.கே. கருணாநிதி, குணசேகரன், கணேசன்,விகே மூர்த்தி, காந்தி, நாகமணி,ஜெய.சேரன், குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ .மேற்கு மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
- அரசு கல்லூரிகளில் மத்திய தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து பணியாற்றும் துணை பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக பதவி உயர்வு வழங்கவில்லை.
- எனவே பதவிஉயர்வு, நிலுவைத்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு கல்லூரி பேராசிரியர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அரசு கல்லூரிகளில் மத்திய தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து பணியாற்றும் துணை பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக பதவி உயர்வு வழங்கவில்லை. சம்பள நிலுவைத்தொகை, வீட்டு வாடகைப்படி நிலுவையும் வழங்கவில்லை.
அடிப்படை ஊதியத்தில் ஒரு படி நிலை உயர்வு மட்டுமே வழங்க ஆணை உள்ளது. எனவே பதவிஉயர்வு, நிலுவைத்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை பெற்ற அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை சார்புசெயலர், இயக்குனரை அழைத்து விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
- புதுவை இந்து அறநிலையத்துறை மூலம் முத்தியால் பேட்டை தொகுதியில் உள்ள 5 கோவில்களின் ஒருகால பூஜைக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடைபெற்றது.
- பெரியபாளையத்தம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்திற்கா ன காசோலைகளை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை இந்து அறநிலையத்துறை மூலம் முத்தியால் பேட்டை தொகுதியில் உள்ள 5 கோவில்களின் ஒருகால பூஜை க்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் பிரகா ஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பா ரதி வீதி முத்தா லம்மன் கோவில், பெல்கிஸ் வீதி முத்தா லம்மன் கோவில், பெரியபாளையத்தம்மன் கோவில், காட்டா மணிகுப்பம் மாரியம்மன் கோவில், பெருமாள் பேட்டை வீதி பெரியபாளை யத்தம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்திற்கா ன காசோலைகளை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
- அதிகபட்சம் 40 ஆயிரம் ஏழை பெண்கள் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அரசின் உதவி பெறாத பெண் பயனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வறுமைக்கோட்டுக்கு கீழ் அரசு திட்டங்களில் எந்த நிதியுதவியும் பெறாத ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
பொங்கல் பண்டிகைக்குள் இந்த மாத உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கான கோப்பு கவர்னர் தமிழிசையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் தமிழிசை இந்த கோப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த தகவலை கவர்னர் தமிழிசை உறுதி செய்தார். இதை அரசாணையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்களே இருந்தாலும் இத்திட்டத்தை உடனடியாக தொடங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தகவலை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தெரிவித்தார்.
அரசின் மாத உதவித்தொகை பெறாத ஏழை பெண்கள் 17 ஆயிரம் பேரை கண்டறிந்துள்ளோம். இவர்களுக்கு அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மாத உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து அரசின் உதவி பெறாத பெண் பயனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.
அதிகபட்சம் 40 ஆயிரம் ஏழை பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு இத்திட்டத்தை தொடங்கிவைக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோஜூரியோ கராத்தே சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருளையன்பேட்டை நகர பகுதியில் புதுவை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு புடவை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் சேவை இயக்கம் இளைஞர்கள் செங்குட்டுவன்,பாக்கியராஜ்,செழியன் ரஞ்சித்,அப்துல், மணி ,ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கோஜூரியோ கராத்தே சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருளையன்பேட்டை நகர பகுதியில் புதுவை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு புடவை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக மனித நேய மக்கள் சேவை இயக்க நிறுவனரும், உருளை யன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நேரு புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து பொன்னாடை போர்த்தி அவர்களுக்கு புடவை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் சேவை இயக்கம் இளைஞர்கள் செங்குட்டுவன்,பாக்கியராஜ்,செழியன் ரஞ்சித்,அப்துல், மணி ,ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உருளையன்பேட்டை இளை ஞர்கள் செய்திருந்தனர்.
- தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முதல்நாள் வரும் போகி பண் டிகை பழைய பொருட்களை எரித்து புகையை உண்டாக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
- போகி பண்டிகை நாளில் பிளாஸ்டிக் மற்றும் டயர் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
புதுச்சேரி:
என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முதல்நாள் வரும் போகி பண் டிகை பழைய பொருட்களை எரித்து புகையை உண்டாக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். சிகரெட் புகை மட்டும் தீங்கானது அல்ல போகிப் பண்டி கையின் பொழுது எரிக்கப்படும் அனைத்து பொருட்களில் இருந்து வருகின்ற புகையும் மனித உடலுக்கு பகைதான். இது குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், மாணவர் கள் தங்கள் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதற்கு பதி லாக அந்த பொருட்களை துப்புரவு தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
போகி பண்டிகை நாளில் பிளாஸ்டிக் மற்றும் டயர் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். இதனால் ஏற்படும் புகை மண்டலங்கள் வாகன விபத்துகளும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவும் வழி வகுக்கிறது. எனவே போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்காமல் சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கவர்னர் தமிழிசை மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தார்.
- கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கட்டைக்கால் நடனம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காலை 8 மணியளவில் கவர்னர் தமிழிசை மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தார்.
தொடர்ந்து கவர்னர் உறியடித்தார். தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கட்டைக்கால் நடனம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதை கவர்னர் தமிழிசை கண்டுகளித்து கலைஞர்களை பாராட்டினார். மாட்டு வண்டி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பொங்கல் விநாயகருக்கு படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், சிவசங்கர், அங்காளன், வி.பி.ராமலிங்கம், என்ஆர்.காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், தலைமை செயலர் ராஜீவ்வர்மா, டி.ஜி.பி. மனோஜ்குமார்லால் மற்றும் அரசு துறை செயலர்கள், உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
விழாவில் சிறுதானிய விருந்து அளிக்கப்பட்டது. இதில் கம்பு லட்டு, ராகி சேமியா, சிறுதானிய இட்லி, வடை, சாமை பணியாரம், இனிப்பு பொங்கல், சிறுதானிய தோசை, குதிரைவால் பொங்கல், சாம்பார், பல வகை சட்னிகள் வைக்கப்பட்டிருந்தது.
பொங்கல் விழாவுக்கு வந்த தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசு செயலாளர்கள் உதயகுமார், அபிஜித்விஜய் சவூத்திரி, ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தனர்.
காலை 8 மணிக்கு விழா தொடங்கினாலும் முதலமைச்சர் ரங்கசாமி காலை 10.30 மணிக்கு வந்தார். இதனால் கவர்னர் தமிழிசை 2½ மணி நேரம் காத்திருந்தார். முதலமைச்சர் ரங்கசாமி வந்த பிறகே விநாயகருக்கு பொங்கல் படைக்கப்பட்டது.
- பொங்கல் பண்டிகையையொட்டி மணவெளி தொகுதி யில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது. பயனாளி களுக்கு கரும்புகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
- வேளாண் கடன் வழங்கும் சங்க தலை வர் தட்சிணா மூர்த்தி, இயக்குனர் சக்தி வேல், ஞானசேகர், ராஜா, மாயகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகையையொட்டி மணவெளி தொகுதி யில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது. பயனாளி களுக்கு கரும்புகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறு ப் ப ா ள ர்
ர ா மு , பொதுச்செயலாளர் சக்தி பாலன், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், கிருஷ்ண மூ ர் த் தி
ரெ ட் டி ய ா ர், வேளாண் கடன் வழங்கும் சங்க தலை வர் தட்சிணா மூர்த்தி, இயக்குனர் சக்தி வேல், ஞானசேகர், ராஜா, மாயகிருஷ்ணன், எஸ்.வி.எஸ். குமரன், ரமேஷ், கலைவாணன், தர்மன், வீரபாலன், செந்தில், தங்கதுரை, முரளி, அருள்ராஜ், விஜய், கோபு, செழியன், மோதிலால் ரமேஷ், வேலாயுதம், சக்தி, சசி, நாகமுத்து, ஆறுமுகம், ரமேஷ், குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை சாரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது.
- குரங்கு அதே பகுதியில் சுற்றி திரிவதால் கூண்டு வைத்து பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை சாரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது.
அதன் 2 கைகளிலும் வெட்டு காயங்கள் காணப்படுகிறது. இந்த குரங்கை அப்பகுதி மக்கள் அனுதாபத்துடன் பார்த்து உணவு வழங்கி வருகின்றனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் குரங்குக்கு பழத்தில் மயக்க மருந்து கொடுத்து பிடிக்க முயற்சித்தனர்.
ஆனால் குரங்கு மருந்து இருப்பதை அறிந்து பழத்தை தூக்கி எறிந்து விட்டது. குரங்கு அதே பகுதியில் சுற்றி திரிவதால் கூண்டு வைத்து பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
- இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சமூக மருத்துவத்துறை சார்பில் கூட்டு மாநில மாநாடு நடத்தியது.
- மாநாட்டில் பட்டமேற்படிப்பு பட்டதாரிகளுக்கு வினாடிவினா, கட்டுரை எழுதும் போட்டிகளும் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சமூக மருத்துவத்துறை சார்பில் கூட்டு மாநில மாநாடு நடத்தியது.
கொரோனாவுக்கு பிந்தையாக காலத்தில் விரிவான ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் மாநாடு நடந்தது. மாநாட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., அரசு செயலர் உதயகுமார், பேராசிரியை கவிதா வாசுதேவன், உதவி பேராசிரியர் சுரேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுவை, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், மருத்துவ அலுவலர்கள், சர்வதேச நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். காசநோய், தட்டம்மை ஒழிப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, தொற்றாத நோய்கள், புகையிலை கட்டுப்பாடு, நோய்தடுப்பு சிகிச்சை உட்பல பல தலைப்புகளில் விவாதம் நடத்தப்பட்டது. மாநாட்டில் பட்டமேற்படிப்பு பட்டதாரிகளுக்கு வினாடிவினா, கட்டுரை எழுதும் போட்டிகளும் நடத்தப்பட்டது. மாநாடை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
காய்ச்சல், தலைவலி என மருத்துவமனைக்கு செல்வோருக்கு அறுவை சிகிச்சை, விபத்து பிரிவு என பிரபலமான மருத்துவ பிரிவுகள் மட்டும்தான் தெரியும். ஆனால் சமூக மருத்துவம் என்ற பிரிவை பற்றி தெரியாது. இதற்காக மாநாடு நடத்துவது பாராட்டுக்குரியது.
நோய் வரும் முன் பாதுகாப்பதுதான் சமூக மருத்துவத்தின் முக்கிய பணி. நாடு முழுவதும் 50 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. புதுவையில் 4 ஆயிரம் பேருக்கு ஒன்று உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணிகள் இன்றியமையாதது. சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது, வீடுதேடி டாக்டர்கள் செல்ல வேண்டும் என கூறியிருந்தேன். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வீதி, வீதியாக டாக்டர்களை நடக்கவிடுவதா? என கேட்டனர். மருத்துவம் என்பது சேவை.
சேவை செய்யத்தான் வந்துள்ளோம் என்பதை டாக்டர்கள் அறிந்துகொள்ள வேண்டும். வீடு, வீடாக மருத்துவம் செய்வதால் குறைந்துவிட மாட்டீர்கள்.
கிராமப்புறங்களில் பணியாற்றுவதை டாக்டர்கள் சங்கடமாக நினைக்கின்றனர்.
அதை யாரும் தவறாக நினைக்கக்கூடாது. கிராமப்புறங்களில் பணியாற்ற டாக்டர்கள் முன்வர வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுமையாக செயல்பட மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இங்கு 2 டாக்டர்கள், 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அங்கேயே சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும்.
இதற்காக அரசு அதிக அக்கறை எடுத்துள்ளது. இதேபோல மருத்துவக்கல்லூரி க்கு தேவையான பேராசிரி யர்களை நியமித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய, புதிய துறைகளை கல்லூரியில் தொடங்க முடியும். புதுவையில் மருத்துவ பல்கலைக்கழகம் அமையும்போது இதை எல்லோரும் பாராட்டு வார்கள். இந்தியளவில் மருத்துவ வசதி அதிகம் கிடைக்கும் இடமாக புதுவைக்கு விருது கிடைத்துள்ளது.
ஆனால் எனக்கு திருப்தியில்லை. இன்னும் சிறப்பான மருத்துவமும், வசதிகளும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவை அரசின் மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு மாதந்தார உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- விவசாயி களுக்கு வழங்கப்பட வேண்டிய மானியம், நிதியை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
புதுச்சேரி:
புதுவை அரசின் மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு மாதந்தார உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
புதிதாக முதியோர், விதவை உதவித்தொகை கேட்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு உதவி த்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்கான கோப்பு முதல்-அமைச்சர் பரிந்து ரையுடன் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
புதிதாக முதியோர், விதவை உதவித்தொகை விண்ணப்பித்துள்ள 16 ஆயிரத்து 769 பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான அனுமதி இன்னும் ஓரிருநாளில் வெளியாகும். விவசாயி களுக்கு வழங்கப்பட வேண்டிய மானியம், நிதியை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
2020-21-ல் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.13 கோடியே 21 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கும் நிதி வழங்கப்பட்டு விட்டது. கறவை, காளை மாடுகள் வாங்க 800 கால்நடை வளர்ப்போருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் பசுங்கன்றுக்கு ரூ.20 ஆயிரம், காளை கன்றுக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் துறை மூலம் பெறப்பட்டுள்ளது. ஊசுடு ஏரியில் தனியார் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் 2 கி.மீ. தூரத்துக்கு பூங்காவுடன் நடைபாதை அமைக்க உள்ளோம்.
இந்த பணி 6 மாதத்தில் முடிவடையும். இதன்பிறகு இயற்கை சூழலுடன் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். சேதராப்பட்டு கரசூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அரசு நிலத்தை கையகப்படுத்தியிருந்தது.
இந்த நிலத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாக புகார் எழுந்தது. வனத்துறை மூலம் நடவடிக்கை எடுத்தோம். 3 டன் மரமும், ஒரு டிராக்டரும் கையகப்படுத்தப்பட்டது. சாட்டிலைட் மூலம் மரம் வெட்டப்பட்டுள்ளதை கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளோம். கருவேலமரங்கள்தான் வெட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி 42 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்தது.
- அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன், நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் ஹோமத்தை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி 42 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்தது.
இதையடுத்து மணக்குள விநாயகர் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்தது. காலை 9 மணிமுதல் 12.30 மணி வரை கோவிலில் கணபதி ஹோமம் சாந்தி ஹோமம் நடைபெற்றது. யானை ஆன்மா சாந்தி அடையவும், புதுவை மக்களின் நன்மைக்காகவும் இந்த ஹோமம் செய்யப்பட்டது.
ஹோமத்தில் வைக்கப்பட்ட கலசநீர் யானை நின்றஇடம், கொட்டில், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன், நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் ஹோமத்தை நடத்தினர்.
யானையின் இறுதி சடங்கு செய்த போது அதன் தந்தம் அப்புறப்படுத்தப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல்-அமைச்சரின் பரிந்துரையின் பேரில் வனத்துறையிடம் இருந்த லட்சுமியின் தந்தத்தை வாங்கி பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






