என் மலர்
புதுச்சேரி
- புதுவை காவல்துறையில் தலைமை அலுவலக சூப்பிரண்டு பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஐ.ஆர்.சி.மோகன். கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வுபெற்ற மோகன்.
- தனது ஓய்வுக்கு பிறகு அண்ணாநகரில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்தார்.
புதுச்சேரி:
புதுவை காவல்துறையில் தலைமை அலுவலக சூப்பிரண்டு பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஐ.ஆர்.சி.மோகன். கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வுபெற்ற மோகன்.
தனது ஓய்வுக்கு பிறகு அண்ணாநகரில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்தார். இதில் கீரை, தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய், பச்சை பட்டாணி உள்ளிட்ட காய்கறிகளையும், திராட்சை, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளையும், மலர் செடிகளையும் அமைத்துள்ளார்.
சொட்டு நீர் பாசனம் மூலம் இதை பயிரிட்டார். இந்த தோட்டம் அவர் வீட்டுக்கு மட்டுமின்றி, உறவினர்கள், சுற்றுப்புறத்தை சேர்ந்த வர்களுக்கும் உதவிகரமாக உள்ளது. ஓய்வுகாலத்தில் நேரத்தை செடி, கொடிகளில் செலவிடுவது மன நிம்மதியையும், நிறைவையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆர்வம் காட்டுவதால் அரசின் விவசாய துறையும் மாடி தோட்டம் அமைக்க உறுதுணையாக இருப்பதாக ஐ.ஆர்.சி. மோகன் தெரிவித்தார்.
- தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
- கண்காட்சி யினை பள்ளி கல்விதுறை முதன்மைக் கல்வி அதிகாரி தனசெல்வம்நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி யினை பள்ளி கல்விதுறை முதன்மைக் கல்வி அதிகாரி தனசெல்வம்நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளிப் பொறுப்பாசிரியர் ஜோசப் தலைமை தாங்கினார்.
நுண்கலை ஆசிரியர் தனராஜா வழிகாட்டலின் படி சங்கு, கிளிஞ்சல்கள், உபயோகமற்ற பொருட்கள், காகிதங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி உருவாக்கிய 200-க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.
பள்ளி மேலா ண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கண்காட்சி யினை பார்வையிட்டனர்.
இந்த கைவினைக் கண்காட்சி க்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஜார்ஜியஸ், அமுதன், ஆசிரியைகள் ராஜஜித்தேந்திரி, ரேணுகாதேவி, தனவந்தினி, புவனேஸ்வரி, ஹேமலதா, அருள்ஜோதி, ஜெயந்தி, வள்ளி மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.
- மாணவிகளுக்கு விழிப்புணர்வு மராத்தான் போட்டியை நடத்தியது.
- சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.
புதுச்சேரி:
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் மற்றும் புதுவையில் ஜி 20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு விவேகானந்தர் சேவை மையம் சார்பில் முதலியார் போட்டை அர்ஜூனன் சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் உழந்தை கீரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு மராத்தான் போட்டியை நடத்தியது.
போட்டியில் வெற்றி பெற்ற சீனியர், ஜூனியர் மாணவ- மாணவிகளுக்கும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாரி தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ( பெண்கள்) சிவராம ரெட்டி, டாக்டர் வெற்றி செல்வம், ஜோதி சிலம்பம் சத்ரிய குருகுலம் நிறுவனர் டாக்டர் ஜோதி செந்தில் கண்ணன், பாத சிகிச்சை வல்லுனர் டாக்டர் கருணாகரன், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை அதிகாரி ரவி, புதுவை தொழில் நுட்ப கல்லூரி பேராசிரியர் ஆனந்த நடராஜன், மையத்தின் செயலாளர் செல்வம், பொருளாளர் கார்த்திகேயன் துணை தலைவர் இன்ப சேகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை வாழ்த்தி பரிசுகள் வழங்கினார்கள்.
விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு விவேகானந்தர் பிறந்த நாளை யொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.
தேசிய நல் ஆசிரியர் விருது பெற்ற அரவிந்தராஜா நன்றி கூறினார்.
- மங்கலம் அரசு உயர்நிலை பள்ளியில் சுவாமி விவேகானந்தர் 160-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
- தலைமை ஆசிரியர் சீனு. மோகன்தாஸ் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
மங்கலம் அரசு உயர்நிலை பள்ளியில் சுவாமி விவேகானந்தர் 160-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் சீனு. மோகன்தாஸ் தலைமை தாங்கினார்.
அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தர் உருவப்ப டத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செய்தனர்.
சுவாமி விவேகானந்தர் பற்றி பள்ளி மாணவர்கள் கவிதைகள் வாசித்தனர்.நுண்கலை ஆசிரியர் வேலாயுதம் விவேகானந்தர் குறித்து சிறப்புரை யாற்றினார்.
ஆசிரியை சாந்தகுமாரி விவேகானந்தரின் பொன் மொழிகளை மாணவ ர்களிடம் கூறி உறுதிமொழி ஏற்க செய்தார்.
- கணக்கெடுப்பு முடிந்தவுடன் அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
- புதுவையில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.
புதுச்சேரி:
புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
இதற்கான அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை. இது அரசியல் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் சிவா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டில் அரசு உறுதியளித்ததுபோல ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைத்தது.
இந்த கமிஷன் பிற்படுத்தப்பட்டோர் குறித்த தகவல், புள்ளிவிபரங்கள், ஆவணங்களை சேகரித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. அனைத்து ஆய்வு பணிகளையும் முடித்த தனிநபர் கமிஷன் உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி. பிரிவுக்கு இடஒதுக்கீடு செய்ய வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்துள்ளது.
இந்த கணக்கெடுப்பு நடத்த கவர்னர் தமிழிசையும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் விரைவில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் வார்டு வாரியாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.
இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இதனால் புதுவையில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.
எனவே உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப்போகிறது.
- புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கப்பட்டால் இந்தியாவிற்கே தவறான எடுத்து காட்டாக அமைந்துவிடும்.
- ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
எஸ்.ராமச்சந்திரனின் புதுவை செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன் என்ற நூல் வெளியீட்டு விழா புதுவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
விழாவிற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நூலை வெளியிட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுவை துணைத்தலைவர் லீலாவதி, இந்திய மாணவர் சங்கத்தின் புதுவை செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் பெற்றனர்.
விழாவில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்து வரும் பா.ஜனதா இன்றைக்கு சோதனைகூடமாக புதுவையை மாற்றி வருகிறது. பா.ஜனதா ஆட்சி நடத்தும் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களிலேயே மின்துறையை தனியார் மயமாக்கும் வேலையை மக்கள் போராட்டங்களால் பின்னுக்கு தள்ளப்பட்டது.
ஆனால் புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கப்பட்டால் இந்தியாவிற்கே தவறான எடுத்து காட்டாக அமைந்துவிடும்.எனவே அனைத்து பகுதி மக்களையும் பாதிக்ககூடிய மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து ஒன்றுபட்டு போராட வேண்டும்.
இன்றைக்கு அரசியல் சாசனத்தை மீறும் வேலையாக பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. அரசியல் சட்டம் என்பது கேள்விகுறியாகியுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பாதுகாத்த அரசியல் சாசனத்தை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவினர் சிதைத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தான் தமிழ்நாட்டு கவர்னரின் சட்டமன்ற நடவடிக்கை அமைந்தது.
அதேபோல் நடைபெற்று முடிந்த இமாச்சல் மாநில சட்டமன்ற தேர்தலிலும்,டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் பா.ஜனதாதூக்கி வீசப்பட்டுள்ளது. எனவே தான் பா.ஜனதா தோற்கடிக்கபடக்கூடிய கட்சி தான் என்பதால் வரக்கூடிய தேர்தலில் அதற்கான பணியில் நாம் முழு வீச்சாக ஈடுபட வேண்டும்.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
- முதலியார் பேட்டையில் கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- இதையடுத்து போலீசார் கத்தியை பறிமுதல் செய்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
முதலியார் பேட்டையில் கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் முதலியார் பேட்டை அனிதா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாலிபர் கத்தி ஒன்று மறைத்து வைத்திருந்ததை கண்டனர்.
இதையடுத்து போலீசார் கத்தியை பறிமுதல் செய்து அந்த வாலிபரிடம் விசா ரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சுமன்ராஜ் (19) என்பது குற்றம் செய்யும் நோக்கில் அவர் கத்தியுடன் திரிந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இது போல் முதலியார் பேட்டை போலீசார் தேங்காய் திட்டு துறைமுகம் பகுதியில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது ஒரு வாலிபர் குடிபோதையில் நின்று கொண்டு பொது மக்களுக்கு இடையூறாக ஆபாச வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டதை கண்டனர்.
இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முருங்கப்பாக்கம் துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (39) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- புதுவை மாநிலம் மணவெளி ெதாகுதிக்குட்பட்ட டி.என்.பாளையம் மற்றும் பூரணாங்குப்பம் பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஊறுதி திட்டத்தின் மூலம் டி.என்.பாளையம் வரதராஜ பெருமாள் நகரில் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 400 செலவில் மண் சாலை அமைத்தல் பணி நடைபெற்றது.
- ரூ.12 லட்சத்து 39 ஆயிரத்து 400-க்கான பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் மணவெளிதொகுதிக்குட்பட்ட டி.என்.பாளையம் மற்றும் பூரணாங்குப்பம் பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஊறுதி திட்டத்தின் மூலம் டி.என்.பாளையம் வரதராஜ பெருமாள் நகரில் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 400 செலவில் மண் சாலை அமைத்தல் மற்றும் பூரணாங்குப்பம் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட சந்திரகுளத்தை ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் செலவில் ஆழப்படுத்துதல், காட்டுவா குட்டையில் ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் செலவில் பராமரிப்பு செய்தால் என மொத்தம் ரூ.12 லட்சத்து 39 ஆயிரத்து 400-க்கான பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். பா.ஜனதா விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், வேளாண் கடன் வழங்கும் சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் பால சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் நற்குணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இலக்கிய தறை சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழர் விழா என்ற தலைப்பில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் தமிழர் பெருமையை போற்றும் வகையில் தமிழர் கோவில் வழிபாடு, தமிழர் அரவை, தமிழர் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இலக்கிய தறை சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழர் விழா என்ற தலைப்பில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி ேகசவன் ஆகியோர் வாழ்த்துக்களுடன் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி தலைமை தாங்கி குத்து விளக்கேற்றினார். கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார்.
பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், ஆராய்ச்சி டீன் கைலாசம், வேளாண் கல்லூரி டீன் முகமது யாசின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழர் பெருமையை போற்றும் வகையில் தமிழர் கோவில் வழிபாடு, தமிழர் அரவை, தமிழர் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் பல்வேறு தலைப்புகளில் அமைக்கப்பட்டிருந்த 14 அரங்குகளில் முதல் 3 இடங்களை பிடித்த அரங்குகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து ெகாண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் இளமாறன், ராஜேந்திரன், வனிதா ஆகியோர் செய்திருந்தனர்.
- புதுவையில் வீடு வாடகைக்கு வருவதாக கூறி ராணுவ வீரரிடம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்வர் பாட்ஷா வழக்குப்பதிவு செய்து பணமோசடி செய்த மர்மநபரை தேடி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை ராஜாஜி நகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன். அவரது மனைவி யசோதா (வயது 66). இவர்களது மகன்கள் அனந்த கிருஷ்ணன், கார்த்திகேயன் ஆகியோர் இந்திய ராணுவத்தில் கடற்படை பிரிவில் சென்னை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
யசோதா தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட விரும்பினார். இதை தனது மகனிடம் தெரிவித்தார். அவர் இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கார்த்திகேயன் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தான் ராணுவத்தில் பணி செய்து வருவதாகவும், லாஸ்பேட்டை என்.சி.சி. அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் கிடைத்துள்ளது என்றும், அந்த வீட்டை வாடகைக்கு தருமாறும் கேட்டுள்ளார்.
மேலும் தான் ஏற்கனவே பணி செய்யும் இடத்தில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் புதுவை வருவதற்கு ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது. அதனை அனுப்பினால் நான் புதுவை வந்தவுடன் வீட்டு வாடகை முன்பணத்துடன் சேர்த்து தருவதாக கூறினார்.
ராணுவ வீரர் என்பதாலும், தானும் ராணுவத்தில் பணிபுரிவதால் இதை உண்மை என்று நம்பிய கார்த்திகேயன் தனது மற்றும் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 498 அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை. அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை கார்த்திக்கேயன் உணர்ந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்வர் பாட்ஷா வழக்குப்பதிவு செய்து பணமோசடி செய்த மர்மநபரை தேடி வருகிறார்.
- புதுவை அரசின் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் வில்லியனூரில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்ய பொங்கல் அங்காடி மற்றும் கிராம சந்தை தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- அதற்கு அதிகாரிகள் குழு சிறப்பானதொரு பயிற்சி அளிக்க வேண்டும். மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதை விளம்பரப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை அரசின் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் வில்லியனூரில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்ய பொங்கல் அங்காடி மற்றும் கிராம சந்தை தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட மகளிர் குழுவினருக்கு சான்றிதழ் வழங்கி ரூ. 92 லட்சத்திற்கான கடன் உதவியும் வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
புதுவையில் முதன் முறையாக அதுவும் கிராமப்புற மக்களின் தேவைகளுக்காக இதுபோன்ற மக்கள் அங்காடிகளை திறப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கின்ற பொருட்கள் குறைந்த விலையில் தரமானதாக இருக்க வேண்டும்.
அதற்கு அதிகாரிகள் குழு சிறப்பானதொரு பயிற்சி அளிக்க வேண்டும். மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதை விளம்பரப்படுத்த வேண்டும். மார்க்கெட்டில் கிடைக்காத பொருட்களை கண்டுபிடித்து அதனை மகளிர் குழுக்கள் தயாரிக்க வேண்டும்.
அதற்கு வங்கிகள் கடனுதவி அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை அரசே நேரிடையாக சந்தைப்படுத்துகின்ற வகையில் பண்டிகைகால சிறப்பு அங்காடி திறக்க வேண்டும்.
இவ்வாறு சிவா பேசினார்.
நிகழ்ச்சியில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி, வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், கிராம சேவக், சேவக், வட்டார அளவிலான கூட்ட மைப்பின் பொறுப்பா ளர்கள், பணியாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பொங்கல் அங்கன்வாடி மற்றும் கிராம சந்தை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை வரை செயல்படும். இதில் மண்பானை வகைகள், பொங்கல் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், பலகார மாவு வகைகள், மாட்டுத் தீவனம், வயர் கூடைகள், மரசாமான்கள், கைவினைப் பொருட்கள், மூலிகைச் செடிகள், அசைவப் பொருட்கள் உள்ளிட்ட 100–-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
- புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அரசு திட்டங்களில் எந்த நிதியுதவியும் பெறாத ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
- அரசின் மாத உதவித்தொகை பெறாத ஏழை பெண்கள் 17 ஆயிரம் பேரை கண்டறிந்துள்ளோம். இவர்களுக்கு அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மாத உதவித்தொகையாக ரூ.ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அரசு திட்டங்களில் எந்த நிதியுதவியும் பெறாத ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
பொங்கல் பண்டிகைக்குள் இந்த மாத உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதல்- அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கான கோப்பு கவர்னர் தமிழிசையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் தமிழிசை இந்த கோப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த தகவலை கவர்னர் தமிழிசை உறுதி செய்தார். இதை அரசாணையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்களே இருந்தாலும் இத்திட்டத்தை உடனடியாக தொடங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தகவலை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
அரசின் மாத உதவித்தொகை பெறாத ஏழை பெண்கள் 17 ஆயிரம் பேரை கண்டறிந்துள்ளோம். இவர்களுக்கு அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மாத உதவித்தொகையாக ரூ.ஆயிரம் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து அரசின் உதவி பெறாத பெண் பயனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.
அதிகபட்சம் 40 ஆயிரம் ஏழை பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு இத்திட்டத்தை தொடங்கிவைக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






