என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது
    X

    கோப்பு படம்.

    கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

    • முதலியார் பேட்டையில் கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • இதையடுத்து போலீசார் கத்தியை பறிமுதல் செய்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    முதலியார் பேட்டையில் கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் முதலியார் பேட்டை அனிதா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாலிபர் கத்தி ஒன்று மறைத்து வைத்திருந்ததை கண்டனர்.

    இதையடுத்து போலீசார் கத்தியை பறிமுதல் செய்து அந்த வாலிபரிடம் விசா ரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சுமன்ராஜ் (19) என்பது குற்றம் செய்யும் நோக்கில் அவர் கத்தியுடன் திரிந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இது போல் முதலியார் பேட்டை போலீசார் தேங்காய் திட்டு துறைமுகம் பகுதியில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது ஒரு வாலிபர் குடிபோதையில் நின்று கொண்டு பொது மக்களுக்கு இடையூறாக ஆபாச வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டதை கண்டனர்.

    இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முருங்கப்பாக்கம் துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (39) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×