என் மலர்
புதுச்சேரி
- தாவீதுபேட்டில் நகராட்சி துப்புரவு பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை உப்பளம் தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது50).
- அப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு பாத்திமாமேரி சென்று விட்டார். அந்த நேரத்தில் ஆறுமுகத்துக்கு நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
புதுச்சேரி:
தாவீதுபேட்டில் நகராட்சி துப்புரவு பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை உப்பளம் தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது50). இவர் புதுவை நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பாத்திமா மேரி என்ற மனைவியும், மணிவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.
மணிவண்ணனுக்கு திருமணமாகி அவர் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
இதற்கிடையே ஆறுமுகம் நீரழிவு நோய் மற்றும் தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இந்த நிலையில் ஆறுமுகம் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பினார். அப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு பாத்திமாமேரி சென்று விட்டார். அந்த நேரத்தில் ஆறுமுகத்துக்கு நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் மின் விசிறியில் நைலான் கயிற்றால் அவர் தூக்கு போட்டு தொங்கினார். நிகழ்ச்சி முடிந்து பாத்திமா மேரி வீடு திரும்பிய போது அங்கு கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆறுமுகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி பாத்திமாமேரி கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற பல்வேறு அமைப்புகள் இணைந்து தனி மாநில அந்தஸ்துக்கான கூட்ட மைப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
- இதன் ஒரு அங்கமாக அனைத்துக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், என அனைவரையும் சந்தித்து தனி மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு ஆதரவு கேட்க முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற பல்வேறு அமைப்புகள் இணைந்து தனி மாநில அந்தஸ்துக்கான கூட்ட மைப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
போராட்ட குழுவினர் மாநில அந்தஸ்து பெற தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக அனைத்துக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், என அனைவரையும் சந்தித்து தனி மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு ஆதரவு கேட்க முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக முன்னாள் எம்.பி. ராமதாசை அவரது இல்லத்தில் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்.நேரு தலைமையில் சுகுமாரன், அழகர், ராஜா, அசோக்ராஜ், பரகத்துல்லா, சரத் பாஷா, ஆகியோர் சந்தித்து ஆதரவு கோரும் கடிதத்தை வழங்கினர்.
- புதுவை அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலை கழகம் மூலம் ரூ.36 லட்சம் மதிப்பில் மணவெளி தொகுதி என்.ஆர். நகரில் கழிவுநீர் வடிகால் வசதியுடன் கூடிய சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலை கழகம் மூலம் ரூ.36 லட்சம் மதிப்பில் மணவெளி தொகுதி என்.ஆர். நகரில் கழிவுநீர் வடிகால் வசதியுடன் கூடிய சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் கொருக்கமேடு முதல் கிழக்கு கடற்கரைசாலைவரை 2 கி.மீ.க்கு ரூ.61 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொகுதியின் முக்கிய பிரமுகர் கிருஷ்ண மூர்த்தி, கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் சக்திவேல், ராகவன், கோவிந்தராஜ், செந்தில், சகாயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- உப்பளம் தொகுதி க்குட்பட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, கொசு மருந்து அடிக்கும் பணியை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்து தீவிரமாக செயல்படுத்திக் வருகிறார்.
- இதுமட்டுமின்றி அனைத்து வார்டுகளில் உள்ள வீதிகளில்,வீதி வீதியாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியை நேரில் சென்று தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொள்கிறார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி க்குட்பட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, கொசு மருந்து அடிக்கும் பணியை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்து தீவிரமாக செயல்படுத்திக் வருகிறார்.
கொசுக்களால் மக்களுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்க நகராட்சி மற்றும் பொதுப்பணி துறை நிர்வாகிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எம்.எல்.ஏ. மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தெருக்கள் மற்றும் தொட்டிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை நகராட்சி ஊழியர்கள் அகற்ற வேண்டுமென்று அதிகாரியிடம் அறிவுறுத்தி இருக்கிறார்.
இதுமட்டுமின்றி அனைத்து வார்டுகளில் உள்ள வீதிகளில்,வீதி வீதியாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியை நேரில் சென்று தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொள்கிறார்.
அதன் தொடர்ச்சியாக வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு, தாவீதுபேட்டை ஆகிய பகுதிகளில் கொசு மருந்து அடிகும் பணியை தி.மு.க. நிர்வாகிகளுடன் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இப்பணியில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, கிளை செயலாளர் காலப்பன் , லாரன்ஸ், ரகுமான், தமிழ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
- இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.மேலும், தற்போதுள்ள ஒரு மின் விளக்கு திட்டம், இலவச மின்சார திட்டங்கள் பாதிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மின் துறை தனியார் மய டெண்டர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பிரீபெய்டு மின் கட்டண திட்டத்திற்காக சுமார் ரூ.251.10 கோடிக்கு புதிய மீட்டர்களை மாற்ற அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
பிரீபெய்டு முறையில் மின் உயோகத்திற்கு முன் கூட்டியே பணம் செலுத்த வேண்டும்.
கட்டிய பணத்திற்கு கூடுதலாக உபயோகப்படுத்த முடியாது. தானாக மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.மேலும், தற்போதுள்ள ஒரு மின் விளக்கு திட்டம், இலவச மின்சார திட்டங்கள் பாதிக்கப்படும்.
அரசு துறைகள் பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் தெரு விளக்குகள், குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். அரசு கட்டிடம், மற்றும் மருத்துவ மனைகளில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும்.
எனவே, முதல்-அமைச்சர், மின்துறை அமைச்சர் ஆகியோர் ஏழை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரீபெய்டு திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் ஆகியோர் இருந்தனர்.
- புதுவையில் 13-வது தேசிய வாக்காளர் தின விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு புதுவைத் தலைமை செயலாளர் ராஜூவ் வர்மா, தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தலைமை வகித்தார்.
- தேர்தலுக்குத் தேர்தல் புதுவையில் வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெருமையாக உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 13-வது தேசிய வாக்காளர் தின விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.
விழாவுக்கு புதுவைத் தலைமை செயலாளர் ராஜூவ் வர்மா, தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தலைமை வகித்தார். புதுவை மாவட்டத் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான வல்லவன், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி குமார், துணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி தில்லை மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் தலைமைச்செயலர் ராஜீவ் வர்மா பேசியதாவது:-
தேர்தலுக்குத் தேர்தல் புதுவையில் வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெருமையாக உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் வாக்காளித்தோர் எண்ணிக்கை 67 சதவீதமாக இருந்தபோது, புதுவையில் 81.19 சதவீதமாக இருந்தது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாக்களித்தோர் எண்ணிக்கை 83 சதவீதமாக உயர்ந்துள்ளது. புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி களில் வாக்காளர் சேர்க்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளிகளில் மட்டும் 227 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் புதுவை யில் தற்போது 18 வயது பூர்த்தியடைந்தவர்களில் புதிய வாக்காளர்களாக 4 ஆயிரத்து 440 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய வாக்காளர்களாக அடையாள அட்டை பெற்றவர்கள், தேர்தலின் போது வாக்களிப்பது முக்கியமாகும்.
வாக்கு தோட்டாவை விட வலிமையானது என மறைந்த அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார். ஆகவே, நாம் ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் வகையில் வாக்களிப்பது அவசியம்.
இவ்வாறு ராஜீவ்வர்மா பேசினார்.
வாக்காளர் உறுதி மொழியை தலைமைச் செயலாளர் ராஜீவ்வமா வாசிக்க அதை அங்கிருந்தோர் திரும்பக் கூறி ஏற்றனர்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவகாமி (வயது 65). இவருடை ய குடிசை வீடு தீயில் எரிந்து சேதமடை ந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் ரூ.9,700-ம், தனது சொந்த செலவில் ரூ.5 ஆயிரமும் சபாநாயகர் செல்வம் வழங்கினார். மேலும் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் பிரேம் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கதலை வர் தட்சிணாமூர்த்தி, பா.ஜனதா நிர்வாகிகள் குமாரசாமி, சக்திபாலன், லட்சுமி காந்தன், ஆறுமுகம், ராஜகுரு, தமிழ், பிரபாகரன், ஆனந்தன், திருஞானம், முனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை கவுண்டன்பா ளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு நல பணித்திட்டம் மற்றும் சமுதாய நலப்பணி திட்டம் மாணவர்கள் இணைந்து 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
- வாக்காளர் தினம்விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி முன்னேற்பாடாக மாணவர்கள் ஓவியப் போட்டிகள் நடைபெற்று காட்சிப்படுத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன்பா ளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு நல பணித்திட்டம் மற்றும் சமுதாய நலப்பணி திட்டம் மாணவர்கள் இணைந்து 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். வாக்காளர் தினம்விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி முன்னேற்பாடாக மாணவர்கள் ஓவியப் போட்டிகள் நடைபெற்று காட்சிப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்ட அலுவலர் ஜெயந்தி, சமுதாய நலத்திட்ட அலுவலர் முகிலரசி மற்றும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் செய்திருந்தனர்.
- 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்பொழுது பொதுத்தேர்வு வர உள்ளது இதனால் மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத தேர்வு பயத்தை போக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு வருகின்ற 27-ம் தேதி மாணவர்களிடையே நேரலையில் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.
- நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளமதிழகன் பொறுப்பாசிரியர் தேவி ஆசிரியர் சரவணமூர்த்தி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்பொழுது பொதுத்தேர்வு வர உள்ளது இதனால் மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத தேர்வு பயத்தை போக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு வருகின்ற 27-ம் தேதி மாணவர்களிடையே நேரலையில் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.
இந்நிகழ்ச்சியையொட்டி மதகடிப்பட்டு பாரத தேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 9-ம் மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் வரைவதற்கு தேவையான உபகரணங்களை வழங்கி பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கான பல்வேறு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளமதிழகன் பொறுப்பாசிரியர் தேவி ஆசிரியர் சரவணமூர்த்தி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- புதுவையில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்று விட்டு ஆரோவில் சர்வதேச நகரத்தை உலக தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்றி பார்க்க வருவதால் பாதுகாப்பு வளையத்திற்குள் ஆரோவில் கொண்டுவரப்பட்டுள்ளது.
- மேலும் 30-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஆரோவில் எல்லைக்குள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகனங்கள் பாதுகாப்பு கருதி உள்ளே வர போலீசார் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்று விட்டு ஆரோவில் சர்வதேச நகரத்தை உலக தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்றி பார்க்க வருவதால் பாதுகாப்பு வளையத்திற்குள் ஆரோவில் கொண்டுவரப்பட்டுள்ளது.
31-ந் தேதி ஆரோவிலை சுற்றி பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.புதுவையில் வருகின்ற 30 மற்றும் 31-ந் தேதிகளில் ஜி-20 மாநாடு மரப்பாலம் அருகே உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இந்த ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
31-ந் தேதி மாநாட்டில் பங்கேற்று விட்டு மதியம் ஆரோவில் சர்வதேச நகரத்தை சுற்றி பார்க்க சிறப்பு விருந்தினர்கள் வரும் நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக இன்று மண்டல துணை தாசில்தார் அருள்மொழி தலைமையில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் கோரிமேடு பிள்ளையிலிருந்து ஆரோவில் வரை சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
மேலும் 30-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஆரோவில் எல்லைக்குள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகனங்கள் பாதுகாப்பு கருதி உள்ளே வர போலீசார் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் ஆரோவில் மாத்திர் மந்திரில் பொதுமக்களுக்கு தியானமும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
- புதுவையில் மாதத்தில் முதல் நாள் பாரம்பரிய ஆடை தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
- பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு கண்டு, அதை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் துறைத் தலைவர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுவையில் மாதத்தில் முதல் நாள் பாரம்பரிய ஆடை தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த நாளில் அனைத்து அரசு ஊழியர்களும் பாரம்பரியமான கதராடைகளை அணிந்து, கைத்தறி தினமாக கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன் அரசுத்துறைகளுக்கு அனுப்பிய மற்றொரு உத்தரவில், "மாதம் தோறும் 15-ந் தேதி மக்கள் குறைகளைத் தீர்க்கும் வகையில் அனைத்துத் துறைகளிலும் மனுக்களைப் பெற வேண்டும்.
இந்த மனுக்களுக்கு தனியாக கோப்புகளைத் தயார் செய்து வைத்து, தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு கண்டு, அதை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற 60 சமூக மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து மாநில அந்தஸ்து போராட்ட குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
- தங்களது கூட்டணி ஆட்சி மற்றும் கட்சியில் இருப்பவர்கள் மாநில அந்தஸ்து சம்மந்தமாக பொது வெளியில் பேசுவது ஒத்த கருத்துடையதாக இருக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற 60 சமூக மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து மாநில அந்தஸ்து போராட்ட குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
மாநில அந்தஸ்து போராட்ட குழுவினர் ஒருங்கிணைப்பாளர் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற தங்களுக்கு உதவும் விதமாக மக்களிடம் எடுத்து சென்று போராடவும் உங்களோடு கைக்கோர்க்கவும் தயாராக இருக்கிறோம். ஆனால் தங்கள் கூட்டணியில் இருக்கும் பா.ஜனதா தலைவர் மாநில அந்தஸ்துக்கு எதிர் கருத்து கூறியிருப்பது மக்களை குழப்பும் விதமாக இருந்தது.
இதனை சரிசெய்ய கூட்டணி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். தங்களது கூட்டணி ஆட்சி மற்றும் கட்சியில் இருப்பவர்கள் மாநில அந்தஸ்து சம்மந்தமாக பொது வெளியில் பேசுவது ஒத்த கருத்துடையதாக இருக்க வேண்டும்.
அதேபோல அனைத்து கட்சி கூட்டம் மற்றும் அனைத்து பொதுநல அமைப்பு களையும் கூட்டத்தை கூட்டி மாநில அந்தஸ்துக்கான கோரிக்கை யை வலுப்பெற செய்ய வேண்டும்.மேலும், சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து சென்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்
எங்களது இந்த கோரிக்கைகளை காலதாம தப்படுத்துவதால் அரசியல் கட்சி தலைவர்கள் எங்களையும் சேர்த்து விமர்சனம் செய்கிறார்கள். ஆகையால் எங்களது கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்ற ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மனுவை பெற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி மார்ச் மாதம் தொடங்க உள்ள பட்ஜெட் கூட்ட தொடரில் ஏகமனதாக மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம் என்றும் விரைவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இருப்பதாகவும் உறுதி அளித்தார்.






