search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆரோவில் நகரத்திற்குள் வர பொதுமக்களுக்கு தடை
    X

    மொரட்டாண்டி டோல்கேட் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகளை மண்டல துணை தாசில்தார் அருள்மொழி தலைமையில் போலீசார் அகற்றிய போது எடுத்த படம்.

    ஆரோவில் நகரத்திற்குள் வர பொதுமக்களுக்கு தடை

    • புதுவையில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்று விட்டு ஆரோவில் சர்வதேச நகரத்தை உலக தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்றி பார்க்க வருவதால் பாதுகாப்பு வளையத்திற்குள் ஆரோவில் கொண்டுவரப்பட்டுள்ளது.
    • மேலும் 30-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஆரோவில் எல்லைக்குள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகனங்கள் பாதுகாப்பு கருதி உள்ளே வர போலீசார் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்று விட்டு ஆரோவில் சர்வதேச நகரத்தை உலக தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்றி பார்க்க வருவதால் பாதுகாப்பு வளையத்திற்குள் ஆரோவில் கொண்டுவரப்பட்டுள்ளது.

    31-ந் தேதி ஆரோவிலை சுற்றி பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.புதுவையில் வருகின்ற 30 மற்றும் 31-ந் தேதிகளில் ஜி-20 மாநாடு மரப்பாலம் அருகே உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இந்த ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    31-ந் தேதி மாநாட்டில் பங்கேற்று விட்டு மதியம் ஆரோவில் சர்வதேச நகரத்தை சுற்றி பார்க்க சிறப்பு விருந்தினர்கள் வரும் நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னதாக இன்று மண்டல துணை தாசில்தார் அருள்மொழி தலைமையில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் கோரிமேடு பிள்ளையிலிருந்து ஆரோவில் வரை சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    மேலும் 30-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஆரோவில் எல்லைக்குள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகனங்கள் பாதுகாப்பு கருதி உள்ளே வர போலீசார் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் ஆரோவில் மாத்திர் மந்திரில் பொதுமக்களுக்கு தியானமும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×