என் மலர்
புதுச்சேரி
- திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் பா.ஜனதா வானூர் ஒன்றிய சக்தி கேந்திரா ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- வானூர் தொகுதியில் விவசாயிகள், தொழி லாளர்கள், மீனவர்களுக்கு உள்ள நீண்டகால பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் பா.ஜனதா வானூர் ஒன்றிய சக்தி கேந்திரா ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தனியார் திருமண மண்டபத்தில் நடந்த சக்தி கேந்திரா கூட்டத்தில் பா.ஜனதா மாவட்ட பொது செயலாளர் ஜி.கே ராஜன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகம் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட தலைவர் ஏ.டி ராஜேந்திரன், பொதுச் செயலாளர் எத்திராஜ், ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் கலந்து கொண்டார். இதில், 50 ஆண்டுகளுக்கு மேலாக தனித் தொகுதியாக இருக்கும் வானூர் சட்டமன்ற தொகுதியை பொதுத் தொகுதியாக மாற்ற மத்திய அரசின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்வது.
வானூர் தொகுதியில் விவசாயிகள், தொழி லாளர்கள், மீனவர்களுக்கு உள்ள நீண்டகால பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வானூர் தொகுதி மக்கள் பிரச்சினைகள் பா.ஜனதா தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அழுத்தம் தந்து வானூர் தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்ப்படும் என மீனாட்சி நித்திய சுந்தர் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் செந்தில், முருகன், ஏழுமலை, சவுரிராஜன், பிரகலாதன் மற்றும் பா.ஜனதா கேந்திர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
- மக்களின் வரிப்பணத்தில் சம்பாதித்த ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. இதனை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவையை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்களுக்கு கடுகளவு நல்லது செய்துவிட்டு, முழு பூசணிக்காயை மறைக்கும் அளவுக்கு ஊழலை அரங்கேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
மக்களின் வரிப்பணத்தில் சம்பாதித்த ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. இதனை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. ஆனால் மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் அனைத்து முயற்சி களையும் முதல்-அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
தொழிலாளர்களின் எண்ணத்திற்கு விரோதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சொல்லி க்கொண்டே, தனியார்மய வேலைகள் தொடங்கி டெண்டர் விடப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு உள்ளதால் தனியார்மய டெண்டர் திறக்கப்படாமல் உள்ளது.
விரைவில் இதற்கு தீர்வு கண்டு தனியாரிடம் மின்துறையை அரசு ஒப்படைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.இந்த நிலையில் மாபெரும் இமாலய ஊழலுக்கு முதல்-அமைச்சரும், மின்துறை அமைச்சரும் கைகோர்த்துள்ளனர். மத்திய அரசிடம் சுமார் ரூ.251 கோடி கடனாக பெற்று முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டிய பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணிக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த தொகையை புதுவை மக்கள் வரிப்பணத்திலிருந்து வரும்காலத்தில் அரசே திருப்பி செலுத்த உள்ளது. மின்துறையை தனியாரிடம் ஒப் படைக்க முடிவெடுத்துவிட்டு, அவசரகதியில் மக்கள் வரிப்பணத்தில் மீட்டரை மாற்ற ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் என்ன? வரவிருக்கும் மின்துறை தனியார் நிறுவன முதலாளிக்காகவே மக்கள் வரிப்பணம் ரூ.251 கோடி செலவிடப்படுகிறது.
இந்த நிதி மாற்று வழியில் இணைந்த கைகளுக்குத்தான் திரும்பும் என அரசு பதவியில் உள்ள உயர் அதிகாரிகளே வேதனை தெரிவிக்கின்றனர். விஞ்ஞா னரீதியில் மாபெரும் ஊழலுக்கு வழி வகுக்கும் இத்திட்டத்தை உடனடியாக முதல்-அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்சி த்தலைமை அனுமதி பெற்று சட்ட போராட்டங்களை அ.தி.மு.க. முன்னெடுக்கும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார்.
- வாய்க்காலை தூர்வாரி, கொசு மருந்து அடிக்காததால், அப்பகுதி மக்கள் பல்ேவறு நோய்களால் பாதிக்க ப்பட்டு வருகின்றனர்.இது தொடர்பாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மலேரியா துணை இயக்குனர் வசந்தகுமாரியை சந்தித்து முறையிட்டார்.
- இதுகுறித்து பொதுப்பணி மற்றும் நகராட்சி துறையுடன் இணைந்து வாய்க்காலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதியில் உப்பனாறு வாய்க்கால் மற்றும் பெரிய வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால்களால் நேதாஜி நகர், அவ்வை நகர், உடையார்தோட்டம், வம்பாகீரப்பாளையம், திப்புராயபேட்டை, வாண ரப்பேட்டை பகுதிகளை சுற்றிலும் கழிவுநீர் சூழ்ந்துள்ளது.
வாய்க்காலை தூர்வாரி, கொசு மருந்து அடிக்காததால், அப்பகுதி மக்கள் பல்ேவறு நோய்களால் பாதிக்க ப்பட்டு வருகின்றனர்.இது தொடர்பாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மலேரியா துணை இயக்குனர் வசந்தகுமாரியை சந்தித்து முறையிட்டார்.
அப்போது எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்ற துணை இயக்குனர் இதுகுறித்து பொதுப்பணி மற்றும் நகராட்சி துறையுடன் இணைந்து வாய்க்காலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதில் தி.மு.க. அவைத் தலைவர் ரவி, சந்துரு, கிளை செயலா ளர்கள் ராகேஷ் கவுதமன், லாரன்ஸ் கலந்து கொண்டனர்.
- பால் கொள்முதல் விலையை ரூ.45 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
- போராட்டத்தின்போது தரையில் பாலை கொட்டி கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுவை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆம்பூர் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு பால் உற்பத்தியாளர் சங்க சிறப்பு தலைவர் கீதநாதன், பொதுச்செயலாளர் பெருமாள், தலைவர் ராமகிருஷ்ணன், தொகுதி செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் வீரப்பன், ஆனந்தன், பாண்டுரங்கன், கணேசன், சுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பால் கொள்முதல் விலையை ரூ.45 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.5 வழங்க வேண்டும். இலவச கறவை பசு, கால்நடை தீவனம் வழங்க வேண்டும். முகவர்களுக்கு சரியான நேரத்தில் தட்டுப்பாடின்றி பால் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
போராட்டத்தின்போது தரையில் பாலை கொட்டி கோஷம் எழுப்பினர்.
- காவல்துறையின் பல்வேறு பிரிவினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடக்கிறது.
- அரசு துறைகளின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடக்கிறது.
புதுச்சேரி:
நாட்டின் குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது.
புதுவை அரசின் சார்பில் கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக அங்கு கொடிக்கம்பத்துடன் மேடை, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சட்டசபை, கவர்னர் மாளிகை, பாரதி பூங்கா, ஆயிமண்டபம், தலைமை செயலகம் ஆகியவை வண்ணவிளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9.30 மணிக்கு குடியரசு தினவிழா தொடங்குகிறது. 9.25 மணிக்கு கவர்னர் தமிழிசை கடற்கரை சாலைக்கு வருகிறார். மேடைக்கு செல்லும் அவர் தேசியக்கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து அவர் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார். மேடைக்கு திரும்பும் அவர் சாதனை படைத்த போலீசாருக்கு விருது, பதக்கம், பாராட்டு சான்றிதழ், பரிசுகளை வழங்குகிறார்.
தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு பிரிவினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடக்கிறது. தொடர்ந்து அரசு துறைகளின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடக்கிறது. இதை தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.
குடியரசு தின விழாவையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறியதாவது:-
வடக்கு பகுதி வழியாக விழா வரும் முக்கிய பிரமுகர்கள், பங்கேற்பாளர்கள் அனுமதி பெற்றவர்கள் பழைய சாராய ஆலை, பிரமனைடு வழியாக வந்து விழா பந்தலின் வடக்கு பகுதியில் கடற்கரை ரோட்டில் கிழக்கு பகுதியில் நிறுத்த வேண்டும்.
மற்றவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை கொம்பாங்கி வீதி, செயின்மார்ட்டின் வீதி, லாதி லோரிஸ்தான் வீதியில் நிறுத்தி நடந்து வர வேண்டும். தெற்கு பகுதி பிரமுகர்கள் புஸ்சி வீதி வழியாக வந்து பந்தலின் தெற்கு பகுதியில் கடற்கரை ரோட்டில் நிறுத்த வேண்டும். மற்ற வாகனங்கள் சுய்ப்ரேன் வீதி வர்த்தக சபை அருகில் நிறுத்த வேண்டும்.
அணிவகுப்பில் பங்கேற்பவர்கள் வாகனங்களை ரோமன்ரோலண்ட் வீதி, கஸ்ரேன் வீதி, குர்கூப் வீதி, துமாஸ்வீதி, புஸ்சி வீதியில் தெற்கு நோக்கி பழைய துறைமுகம் வரை நிறுத்தலாம். பிற பகுதிகளில் எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
- கவர்னர் தமிழிசை தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் காலை 9.30 மணிக்கு கவர்னர் தமிழிசை தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தொடர்ந்து அலங்கார வாகனங்கள் ஊர்வலம், மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
குடியரசு தின விழா பாதுகாப்பு பணியில் 400 போலீசாரும், அணி வகுப்பில் 300 போலீசாரும் பங்கேற்கின்றனர்.
இன்று காலை இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. ஒத்திகையில் சித்தரிக்கப்பட்ட கவர்னர் முன்பு போலீசார், மாணவர்கள் அணிவகுப்பு நடத்தினர்.
உள்துறை அமை ச்சகத்தின் எச்சரி க்கையை தொடர்ந்து புதுவை முழுவதும் உள்ள விடுதிகள், பஸ்நிலையம், வணிக வளாகம், ரெயில்நிலை யத்தில் போலீசார் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின்பேரில் தீவிர வாகன சோதனையும் நடக்கிறது.
- புதுவை செட்டித்தெருவில் டெய்லர் கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை கைது செய்தனர்.
- 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் வந்தது.
புதுச்சேரி:
புதுவை செட்டித்தெருவில் டெய்லர் கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை கைது செய்தனர்.
புதுவை செட்டித்தெருவில் உள்ள ஒரு டெய்லர் கடையில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அந்த டெய்லர் கடையில் 2 பேர் ஒரு பேப்பரில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பிள்ளைத்தோட்டம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மூலக்குளம் கோபாலன்கடை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பதும், இவர்கள் டெய்லர் கடையில் ரகசியமாக 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்று வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.26 ஆயிரத்து 500 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
ஆரோவில் அருகே குயிலா பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு என்ற ரிலையன்ஸ் பாபு. தொழிலதிபர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு அவரது மகளை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வரும் போது குயிலாப்பாளையம் தாதா மணிகண்டன் தரப்பி னர் பாபுவை கொலை செய்தனர்.
அடுத்த சில நாளில் காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகரான ஜோசப் பொம்மையார்பாளையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த 2 கொலை வழக்கு களிலும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட புதுவை பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த சங்கர்கணேஷ் (வயது 32) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சங்கர் கணேஷ் அதன்பிறகு 2 கொலை வழக்கு விசாரணை யிலும் ஆஜராகாமல் 3 ஆண்டுகளாக தலைமறை வாக இருந்து வந்தார்.
இதையடுத்து வானூர் கோர்ட்டு சங்கர் கணேசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு சங்கர் கணேஷை தேடி வந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த சங்கர் கணேஷ் சென்னை, கொடைக்கானல், ஊட்டி, உள்ளிட்ட பல இடங்களில் தஞ்சமடைந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை ரவுடி சங்கர் கணேசை சுற்றி வளைத்த சிறப்பு தனிப்படை போலீசார் அவரை ஆரோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சங்கர் கணேஷை கைது செய்த ஆரோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- பயனாளிகளுக்கு உதவித் தொகை பெறும் அங்கீகார அடையாள அட்டையை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 17 புதிய பயனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலம் மாற்றுத்தி றனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித் தொகை பெறும் அங்கீகார அடையாள அட்டையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி கலிய மூர்த்தி, தொகுதி துணை செயலாளர் அங்காளன், தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ராஜி, ரமணன், தர்மராஜ், சபரி, முத்துப்பாண்டி, தங்கராசு, ஜெகன்மோகன், ஜனா, கேவி.ஆர். ஏழுமலை, பழனிசாமி, கந்தன், தட்சிணாமூர்த்தி, ஏழுமலை, ஹரி கிருஷ்ணன், அன்பு, திலகர், மிலிட்டரி முருகன், கார்த்தி, ராஜா முகமது, நாதன் , அன்பு நிதி, முருகேசன், ரகு, பாலு, தனகொடி, சேகர் நடராசன், பார்த்திபன், மோகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
- புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மூடப்பட்டுள்ள ஏ.எப்.டி., சுதேதி, பாரதி மில்களை உடனடியாக திறந்து நடத்த வேண்டும்.
- இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிபடுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மூடப்பட்டுள்ள ஏ.எப்.டி., சுதேதி, பாரதி மில்களை உடனடியாக திறந்து நடத்த வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிபடுத்த வேண்டும். மாநில பொருளாதாரத்தை நிலை நாட்ட என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றம் அருகே ஆம்பூர் சாலை சந்திப்பில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. பஞ்சாலை சங்க தலைவர் அபிஷேகம் தலைமை வகித்தார். செயலா ளர் மூர்த்தி, பொருளாளர் பூபதி முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
போராட்டத்தில் பஞ்சாலை சங்க நிர்வாகிகள் ரவி, தேசிகன், சுப்பையா, இளங்கோ, பச்சையப்பன், முனியாண்டி, ஏழுமலை, திருஞானமூர்த்தி, ராஜூ, முருகன், ஜெயசதீஷ், ஏ.ஐ.டி.யூ.சி. பொருளாளர் அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மூட்பபட்ட மில்களை திறக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து நிர்வாகிகள் சட்டசபைக்கு சென்று முதல்-அமைச்சரிடம் மில்களை திறக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
- புதுவையில் உள்ள சாய் விளையாட்டு கழகத்தில் கைப்பந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
- இவரிடம் புதுவை பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் கைப்பந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி:
பாகூர் பழைய காமராஜ் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57). இவர் புதுவையில் உள்ள சாய் விளையாட்டு கழகத்தில் கைப்பந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இவரிடம் புதுவை பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் கைப்பந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவை கிராம பகுதியில் இருந்து வந்த மாணவிக்கு செல்போன் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கிராம பகுதியைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் பாகூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர்.
பள்ளி மாணவி பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகுமார் போக்சோ வழக்கு பதிவு செய்து மேலும் பள்ளி மாணவிக்கு குறுந்தகவல் அனுப்பி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட கைப்பந்து பயிற்சியாளர் சண்முகத்தை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் புகார் அளித்து 4 நாட்கள் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாததை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் இன்று பாகூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டனர். பின்னர் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாக குழு உறுப்பினர் அமுதா, இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவர் தசரதா, துணைச் செயலாளர் சரோஜா, பாகூர் மக்கள் நல இயக்க பொன்னம்மாள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர்.
இதைபோல் நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பாகூர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளரை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.
இதில் மாநில செயலாளர் இளவரசி, பாகூர் கொம்யூன் தலைவர் பரிமளா, செயலாளர் வதனி, பொருளாளர் வளர்மதி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன், மாநில குழு உறுப்பினர் கலியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- புதுவை சட்டசபையில் 12 ஆண்டுகாளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.
- அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை அக்டோபர் மாதம் கூடியது. கூட்டத்தில் கவர்னர் தமிழிசை உரை நிகழ்த்தினார்.
பின்னர் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுவை சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந்தேதி கூடுகிறது. இத்தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.
புதுவை சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தலைமை செயலாளர் ராஜூவ் வர்மா தடுத்துவருகிறார்.
தலைமைச்செயலாளருடன் இணைந்து அதிகாரிகளும் மத்திய அரசின் திட்டங்களை தடுத்து வருகிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் திருப்பி அனுப்புவதற்கு அதிகாரிகளே காரணம் இத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை சட்டசபையில் 12 ஆண்டுகாளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.






