என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம்-வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டு
- புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
- மக்களின் வரிப்பணத்தில் சம்பாதித்த ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. இதனை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவையை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்களுக்கு கடுகளவு நல்லது செய்துவிட்டு, முழு பூசணிக்காயை மறைக்கும் அளவுக்கு ஊழலை அரங்கேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
மக்களின் வரிப்பணத்தில் சம்பாதித்த ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. இதனை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. ஆனால் மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் அனைத்து முயற்சி களையும் முதல்-அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
தொழிலாளர்களின் எண்ணத்திற்கு விரோதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சொல்லி க்கொண்டே, தனியார்மய வேலைகள் தொடங்கி டெண்டர் விடப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு உள்ளதால் தனியார்மய டெண்டர் திறக்கப்படாமல் உள்ளது.
விரைவில் இதற்கு தீர்வு கண்டு தனியாரிடம் மின்துறையை அரசு ஒப்படைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.இந்த நிலையில் மாபெரும் இமாலய ஊழலுக்கு முதல்-அமைச்சரும், மின்துறை அமைச்சரும் கைகோர்த்துள்ளனர். மத்திய அரசிடம் சுமார் ரூ.251 கோடி கடனாக பெற்று முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டிய பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணிக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த தொகையை புதுவை மக்கள் வரிப்பணத்திலிருந்து வரும்காலத்தில் அரசே திருப்பி செலுத்த உள்ளது. மின்துறையை தனியாரிடம் ஒப் படைக்க முடிவெடுத்துவிட்டு, அவசரகதியில் மக்கள் வரிப்பணத்தில் மீட்டரை மாற்ற ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் என்ன? வரவிருக்கும் மின்துறை தனியார் நிறுவன முதலாளிக்காகவே மக்கள் வரிப்பணம் ரூ.251 கோடி செலவிடப்படுகிறது.
இந்த நிதி மாற்று வழியில் இணைந்த கைகளுக்குத்தான் திரும்பும் என அரசு பதவியில் உள்ள உயர் அதிகாரிகளே வேதனை தெரிவிக்கின்றனர். விஞ்ஞா னரீதியில் மாபெரும் ஊழலுக்கு வழி வகுக்கும் இத்திட்டத்தை உடனடியாக முதல்-அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்சி த்தலைமை அனுமதி பெற்று சட்ட போராட்டங்களை அ.தி.மு.க. முன்னெடுக்கும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார்.






