என் மலர்
புதுச்சேரி
- உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் வாய்மை இயக்கம் மூலம் வாய்மை விருதுகள் வழங்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு பள்ளியில் இருந்து மாணவர்களுக்கு தனித்திறமையை ஊக்கப்படுத்தும் விதத்தில் பல போட்டிகள் நடைபெற்றது.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் வாய்மை இயக்கம் மூலம் வாய்மை விருதுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு பள்ளியில் இருந்து மாணவர்களுக்கு தனித்திறமையை ஊக்கப்படுத்தும் விதத்தில் பல போட்டிகள் நடைபெற்றது.
ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி ,நடனப் போட்டிகளும் சிறந்த சமூக சேவைக்கான விருது, கலை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றார்கள், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .
மேலும் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களை வாழ்த்தி பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், மணிமாறன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முதல் மாநிலமாக புதுவை உள்ளது.
- இந்தியாவிலேயே பெண்களுக்கு உதவித்தொகை கொடுக்கும் முதல் அரசாக புதுவை அரசு விளங்கிக் கொண்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடும்ப தலைவிக்கான ரூ.1000 வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.
விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
பெண்களின் கையில் பணம் இருந்தால் அது குடும்பத்திற்கு தான் பயன்படும். அதுதான் நம் தேசத்தின் பண்பாடு. அதை உணர்ந்து அரசு இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
பிரதமரின் நிதி ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவிலேயே வாழ்வாதாரம், சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் முதல் மாநிலமாக புதுவை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மாநிலத்திற்கு பெருமை. மற்றொரு ஆய்வில் 10-ம் இடத்தில் இருந்த புதுவை ஒரே ஆண்டிற்குள் 6-ம் இடத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முதல் மாநிலமாக புதுவை உள்ளது. இதை நானாக கூறவில்லை. அதிகாரப்பூர்வமான ஆய்வுகள் சொல்கின்றன. அப்படி என்றால் புதுவை நிச்சயமாக முன்னேறி வருகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
குடும்ப தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை பட்ஜெட்டில் குறிப்பிடாமல் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார் இந்த அரசு அறிவிக்காததை செய்கிறது. சில அரசு அறிவித்தும் செய்யவில்லை. அதை நம் பார்த்துக்கொண்டுள்ளோம்.
இந்தியாவிலேயே பெண்களுக்கு உதவித்தொகை கொடுக்கும் முதல் அரசாக புதுவை அரசு விளங்கிக் கொண்டுள்ளது.
இன்னும் பல திட்டங்கள் மக்களுக்காக வர உள்ளது.
இவ்வாறு கவர்னர் பேசினார்.
- எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாதா கோவில் அருகில் நடந்தது.
- மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாதா கோவில் அருகில் நடந்தது.
மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். அவைதலைவர் அன்பானந்தம், ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் கோவிந்தசாமி, தலைமை கழக பேச்சாளர்கள் பாத்திமா பாபு. சின்னராஜீ ஆகியோர் ஏழைகளுக்கு மின்விசிறி, சில்வர் குடம், சேலை வழங்கினர்.
கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
புதுவையில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை தனது சதித்திட்டத்தின் மூலம் தி.மு.க. தடுத்து நிறுத்தியது. மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி நடத்திய பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்த தி.மு.க. பலரையும் தூண்டிவிட்டது.
உச்சகட்டமாக காவல்துறை டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து புகார் அளித்தது. ஆனாலும் பந்த் போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்தனர். ஒரு அ.தி.மு.க. தொண்டனின் செயல்பாட்டை கூட தி.மு.க.வால் தடுத்து நிறுத்திட முடியாது.
இதன் மூலம் மாநில அந்தஸ்து பிரச்சனையில் தி.மு.க.வின் இரட்டை வேஷம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.மாநில அந்தஸ்துக்கு எதிரான கட்சி தி.மு.க. என்பதை மக்கள் உணர வேண்டும்.
கடந்த தி.மு.க.- காங்கிரஸ் ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என கூறி நாம் ஆட்சிக்கு வந்தோம். அந்த அடிப்படையில் நிறுத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலை அரசு நடத்த வேண்டும். மூடப்பட்ட பஞ்சாலைகளையும், ரேஷன் கடைகளையும் அரசு உடனடியான திறக்க வேண்டும். பொது வினியோக திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து குறைந்த விலையில் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசினார்.
- புதுவையில் இருந்து கடலூர் நோக்கி இன்று பிற்பகலில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.
- இதில் குடும்பத்துடன் வந்த 2 பேரில் பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவையில் இருந்து கடலூர் நோக்கி இன்று பிற்பகலில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.
அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பு பாலத்தில் வந்து கொண்டிருந்த அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்திருந்த மோட்டார் சைக்கிளை மோதியது. இதில் குடும்பத்துடன் வந்த 2 பேரில் பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
அந்த பெண் சுண்ணாம்பாற்றின் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகனத்தில் சென்றவர்கள் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அங்கு இருந்தவர்களே ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவருக்கு கடந்த3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
- ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார்.
புதுச்சேரி:-
புதுவை தேங்காய்திட்டு திலகர் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமரன்(வயது26). கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். முத்து குமரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் இவருக்கு அல்சர் நோயும் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முத்துகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது மனைவி ஐஸ்வர்யா உறவினர்கள் உதவியுடன் கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முத்துகுமரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி ஐஸ்வர்யா கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பிரீபெய்டு மின்சார மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு புதுவை அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதை புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
- புதுவை அரசு மக்கள் விரோத அரசு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
புதுச்சேரி:
புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
பிரீபெய்டு மின்சார மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு புதுவை அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதை புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே புதுவை மாநில மின் ஊழியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு கட்சிகள், பல்வேறு சமுதாய நல அமைப்புகள் மின்துறை தனியார் மயமாக்கலை வைத்து பல கட்ட போராட்ட ங்களை நடத்தி இந்த புதுவை மாநில அரசிற்கு வன்மையாக கண்டனங்களை தெரிவித்துள்ளன.
மீண்டும் இதுபோன்று மக்கள் விரோத பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை நடை முறைப்படுத்த துடிக்கும் இந்த புதுவை அரசு மக்கள் விரோத அரசு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
ஏதோ சில தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்ப தற்காக மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையின் அறிகுறியாக இந்த திட்டம் உள்ளது. எந்த ஒரு தனி மனிதனும், தனியார் நிறுவன ங்களும் பெரும்பாலும் மின்கட்டண பாக்கிகள் வைப்பது கிடையாது.
ஆனால் புதுவை அரசும் அதை சார்ந்த அரசு நிறுவனங்களும் தான் பல கோடி கணக்கில் மின்சார பாக்கி வைத்துள்ளனர். ஆனால் புதுவை மாநில மக்கள் ஏதோ மின் கட்டண பாக்கி வைத்துள்ளதால் தான் நஷ்டத்தில் மின்சார த்துறை இயங்குவது போல் ஒரு மாயமான தோற்ற த்தை உருவாக்க இந்த புதுவை அரசு முயற்சி வருகிறது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே பெட்ரோல் பொருட்கள் வரி உயர்வு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு அதனுடன் சேர்ந்து குப்பை வரி, ஜி.எஸ்.டி. வரி போன்ற எண்ணற்ற வரிச் சுமைகளை மக்கள் சுமந்து வருகின்றனர்.
ஆனால் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக புதுவையில் உள்ள அனைத்து சாலைகளையும் தரமற்ற முறையில் மோசமான நிலையில் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில் மிகவும் அத்தியாவசியமான அடிப்படையான மின்சார தேவையை அனைத்து மக்களும் எளிமையான முறையில் முன்பு இருந்தது போல் பெற்று பயனடைய வேண்டும். எனவே இந்த பிரீபெய்டு மின் கட்டணத் திட்டத்தை உடனடியாக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- புதுவை அருகே லிங்காரெட்டிபாளையத்தில் சாராயக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
- திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெ ட்டிபாளையத்தில் சாராயக்கடை செயல்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவை அருகே லிங்காரெட்டிபாளையத்தில் சாராயக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெ ட்டிபாளையத்தில் சாராயக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் ஏற்பாட்டின்பேரில் அமாவாசையை முன்னிட்டு அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் உள்ளூர் இளைஞர்கள் சிலர் அன்னதானம் சாப்பிட சென்றனர். அப்போது அங்கு உணவு தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இருதரப்பு இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை அங்கு இருந்த பெரியவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சாராயக்கடையில் வேலை செய்யும் இளைஞர் களுக்கும், உள்ளூர் இளைஞர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது சாராயக்கடையில் வேலை செய்யும் இளைஞர்கள் சிலர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த லிங்காரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள சாராயக்கடை அருகில் ஒன்று திரண்டனர். அவர்கள் திடீரென்று சாராயக்கடை க்குள் புகுந்து அங்கிருந்த நாற்காலி, மேஜை, கண்காணிப்பு கேமரா, சாராயகேன்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
அப்போது அங்கு சாராயம் குடித்துக்கொண்டு இருந்தவர்கள் இதனை பார்த்தவுடன் ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் அந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சாராயக்கடையை இங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்தவுடன் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் ஆறுமுகம், காட்டேரிக்குப்பம் சப்-இன்ஸ்பெ க்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரை ந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, சாராயம் குடிக்க வருபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், எனவே சாராயக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.
இது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதன் பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் லிங்காரெட்டிபாளையத்தை சேர்ந்த ராஜவேலு காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் சந்தை புது குப்பத்தை சேர்ந்த ரகுபதி, விஷ்னு, விக்ரம், தேவநாதன் ஆகியோர் வீடு புகுந்து தன்னையும் தனது தாயாரையும் உறவினர்களையும் தடியாலும் இரும்பு கம்பியாலும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சந்தை புது குப்பத்தை சேர்ந்த தேவநாதன், விஷ்ணு, ரகுபதி, விக்ரம் ஆகியோர் மீது காட்டேரிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- ரங்கசாமி சட்டைபையில் இருந்து பணத்தை எடுத்து தமிழக நோயாளியிடம் கொடுத்தார்.
- திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நோயாளி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியம் சாமிக்கு திலாசுப்பேட்டை அருகில் கோவில் எழுப்பி உள்ளார்.
இங்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை செய்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கடந்த சனிக்கிழமை பூஜை முடித்து அன்னதானம் செய்ய சென்ற முதலமைச்சரை அங்கே அமர்ந்திருந்த ஒரு முதியவர் கைகூப்பி வணங்கினார்.
மேலும் தன் கையில் இருந்த ஒரு மருந்து சீட்டை காண்பித்து 'மருந்து வாங்க காசு இல்லை' என்றும் கூறினார். உடனடியாக முதல்-அமைச்சர் தனது சட்டைபையில் இருந்து பணத்தை எடுத்து தமிழக நோயாளியிடம் கொடுத்தார். அவர் யார் என்பது குறித்து அங்கு இருந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நோயாளியான அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2 கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவிலில் அன்னதானம் நடைபெறுவது கேள்விப்பட்டு வந்ததாகவும் தெரியவந்தது.
அவருக்கு அன்னதானம் வழங்கி காவலர்கள் பஸ்சில் ஏற்றி அனுப்பினர். முதலமைச்சர் திருவண்ணாமலை நோயாளிக்கு எவ்வளவு தொகை கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. புதுவை முதலமைச்சரிடம் தமிழக நோயாளி பண உதவி பெறும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- அன்னம் மகளிர் நல்வாழ்வு சங்கம் இணைந்து நடத்தும் 2-ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது.
- போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த கொம்பாக்கம் துர்கா நகர், செட்டிகளம் நகர், சச்சின் நகர், முத்துலட்சுமி நகர் மற்றும் அன்னம் மகளிர் நல்வாழ்வு சங்கம் இணைந்து நடத்தும் 2-ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது. இதில் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, மாணவர்களுக்கான வாலிபால் மற்றும் கிரிக்கெட் போட்டி, பெண்களுக்கான சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் உரியடி, ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், நடன போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் அன்னம் மகளிர் நல்வாழ்வு சங்கத்தினர் செய்திருந்தனர்.
- சாராயக்கடையில் வேலை செய்யும் இளைஞர்கள் சிலர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
- சாராயம் குடிக்க வருபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், எனவே சாராயக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிபாளையத்தில் சாராயக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் ஏற்பாட்டின்பேரில் அமாவாசையை முன்னிட்டு அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் உள்ளூர் இளைஞர்கள் சிலர் அன்னதானம் சாப்பிட சென்றனர். அப்போது அங்கு உணவு தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இருதரப்பு இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை அங்கு இருந்த பெரியவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சாராயக்கடையில் வேலைசெய்யும் இளைஞர்களுக்கும், உள்ளூர் இளைஞர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது சாராயக்கடையில் வேலை செய்யும் இளைஞர்கள் சிலர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த லிங்காரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள சாராயக்கடை அருகில் ஒன்று திரண்டனர். அவர்கள் திடீரென்று சாராயக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த நாற்காலி, மேஜை, கண்காணிப்பு கேமரா, சாராய கேன்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
அப்போது அங்கு சாராயம் குடித்துக்கொண்டு இருந்தவர்கள் இதனை பார்த்தவுடன் ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் அந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சாராயக்கடையை இங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் ஆறுமுகம், காட்டேரிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சாராயம் குடிக்க வருபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், எனவே சாராயக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.
இது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதன் பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். சாராயக்கடையை பெண்கள் அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- புதுவை -கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பில் இன்று ஒரு நாள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் அனுப்பப்பட்டது.
- புதுவை-கடலூர் சாலையில் மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் செல்ல பேரிகார்டு, டிரம் கொண்டு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை -கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பில் இன்று ஒரு நாள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் அனுப்பப்பட்டது.
மின்துறையின் சேதமடை ந்த உயர் மின் அழுத்த கேபிள் ரோடு கிராசிங் குழாயை புதிதாக மாற்றி அமைக்கும் பணி நடந்தது. இதனால் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடலூர் செல்லும் பஸ்கள் மாற்றுபாதையில் அனுப்பப்பட்டது.
புதுவை-கடலூர் சாலையில் மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் செல்ல பேரிகார்டு, டிரம் கொண்டு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் வெங்கடசுப்பாரெட்டியார் சதுக்கம் வழியாக இந்திரா காந்தி சிலை, வில்லியனூர், கரிக்கலாம்பாக்கம், அபிஷேகபாக்கம், தவளகுப்பம், நல்லவாடு ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி கடலூர் சாலையில் சென்றது.
கடலூரில் இருந்து வரும் வாகனங்கள் தவளகுப்பம் சந்திப்பில் திரும்பி வில்லியனூர் சென்று அரும்பார்த்தபுரம் வழியாக புதுவை பஸ் நிலையம் வந்து சென்றது. இதர வாகனங்கள் முருங்க ப்பாக்கம், மரப்பாலம் சந்திப்பில் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.
- புதுவை அகரம் ஸ்ரீலட்சுமி நாரா யணா மருத்துவ கல்லூரியில் ஆர்த் ரோஸ்கோபி மற்றும் ஸ்போர்ட்ஸ் மெடிசின் பிரிவில், ‘‘விளையாட்டு காயம் தடுப்பு மற்றும் சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள்’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
- தாமதமான சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, விளையாட்டுக் காயங்களை சரியான நோயறிதல் மற்றும் ஆரம்பகால மூட்டுவலி சிகிச்சையின் எலும்பு பற்றி மூட்டு மருத்துவப் பேராசிரியரும் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டு மருத்துவத்தின் தலைவருமான டாக்டர் சசீந்தர் வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை அகரம் ஸ்ரீலட்சுமி நாரா யணா மருத்துவ கல்லூரியில் ஆர்த் ரோஸ்கோபி மற்றும் ஸ்போர்ட்ஸ் மெடிசின் பிரிவில், ''விளையாட்டு காயம் தடுப்பு மற்றும் சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
ஆர்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சாமுண்டீஸ்வரி பங்கேற்று தொழில்முறை மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு காயங்களைத் தடுப்பதற்கு தகுந்த திட்டமிடல் மற்றும் பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தாமதமான சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, விளையாட்டுக் காயங்களை சரியான நோயறிதல் மற்றும் ஆரம்பகால மூட்டுவலி சிகிச்சையின் எலும்பு பற்றி மூட்டு மருத்துவப் பேராசிரியரும் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டு மருத்துவத்தின் தலைவருமான டாக்டர் சசீந்தர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.






