என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொங்கல் விளையாட்டு போட்டி
    X

    விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிவா எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டிய காட்சி.

    பொங்கல் விளையாட்டு போட்டி

    • அன்னம் மகளிர் நல்வாழ்வு சங்கம் இணைந்து நடத்தும் 2-ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த கொம்பாக்கம் துர்கா நகர், செட்டிகளம் நகர், சச்சின் நகர், முத்துலட்சுமி நகர் மற்றும் அன்னம் மகளிர் நல்வாழ்வு சங்கம் இணைந்து நடத்தும் 2-ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது. இதில் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, மாணவர்களுக்கான வாலிபால் மற்றும் கிரிக்கெட் போட்டி, பெண்களுக்கான சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் உரியடி, ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், நடன போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் அன்னம் மகளிர் நல்வாழ்வு சங்கத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×