என் மலர்
புதுச்சேரி
- பருவநிலை மாற்றம் பொருளாதார மந்த நிலை அதிகரித்து வரும் பயங்கரவாதம் ஆகியவைகள் குறித்து உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது என்பது 65 சதவீத இளைய சமுதாயத்தை கொண்ட இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
- அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்து பகுதிகளிலும் சம அளவு கொண்டதாக இருக்க வேண்டும்.
புதுச்சேரி:
என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தன சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
பருவநிலை மாற்றம் பொருளாதார மந்த நிலை அதிகரித்து வரும் பயங்கரவாதம் ஆகியவைகள் குறித்து உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது என்பது 65 சதவீத இளைய சமுதாயத்தை கொண்ட இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
இதை ஒவ்வொரு இந்தியரும் கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு. வல்லரசு நாடுகள் எல்லாம் வளைந்து நெளிந்து கொண்டிருக்கையில் தன்னுடைய ஆழமான சமூக பொருளாதார கட்டமைப்பால் இன்று நாம் நிமிர்ந்து நிற்கின்றோம் என்றால் அது 75 ஆண்டுகால சுதந்திரம் நமக்கு கொடுத்த வெகுமதியே.
அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்து பகுதிகளிலும் சம அளவு கொண்டதாக இருக்க வேண்டும். அதுதான் மக்கள் ஜனநாயகத்தின் சிறப்பு. அதை விடுத்து பின் தங்கிய நிலையில் இருப்பது எப்படி சம வளர்ச்சியாக இருக்கும். யூனியன் பிரதேசங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருந்தாலும், மத்திய அரசின் அதிகார ஆளுமையால் இங்கு உயர் அதிகாரிகளின் செல்வாக்கே ஓங்கி நிற்கிறது.
இதனால் மாநில அரசு மக்கள் நலன், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதோடு ஒவ்வொரு முறையும் புதிய திட்டங்களுக்கு அனுமதி பெற காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலையே தொடர்கிறது.
இதனால் கடந்த கால கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு தான் மாநில அந்தஸ்து என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து மத்தியில் ஆளும் அரசோடு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு மாநில அளவில் அதை வழிநடத்தி வருகின்றார் முதல்-அமைச்சர் ரங்கசாமி.
மாநில அந்தஸ்து குறித்து எந்த அடிப்படை தெளிவும் இல்லாத எதிர்க் கட்சிகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
அவற்றை எல்லாம் தன்னுடைய சாதுரிய அரசியல் நடவ டிக்கையா ளும், அணுகுமுறையாளும் முறியடித்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு வெகு விரைவில் மாநில அந்தஸ்தை பெற்றுக் கொடுக்கும் தகுதியும் திறமையும் முதல்-அமைச்சர் ரங்கசாமியால் மட்டும்தான் அது சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- பள்ளி மாணவ-மாணவியர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு வழிகாட்டியாக வும் சிறந்த வழிமுறைகளையும் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற நூலில் எழுதி பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ளார்.
- இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
பள்ளி மாணவ-மாணவியர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு வழிகாட்டியாக வும் சிறந்த வழிமுறைகளையும் 'எக்ஸாம் வாரியர்ஸ்' என்ற நூலில் எழுதி பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு மந்திரமாக தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மணவெளி ராதா ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது.
இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பரமானந்தம், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, ெதாகுதி தலைவர் லட்சுமிகாந்தன், நிர்வாகிகள் கலை வாணன், எஸ்.வி.எஸ்.குமரன், தங்கதுரை , இளஞ்செ ழியன், செந்தில் முருகன், சசி வெங்கடேசன், முருகன், மதியழகன், சிவப்பிரகாசம், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- தாத்தா போல் பள்ளத்தில் மற்றவர்கள் யாரும் விழுந்து அடிப்படக் கூடாது, ஏதேனும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்று எண்ணி சாலையை சீரமைக்கும் பணியில் மாணவன் ஈடுபட்டான்.
- மாணவனின் செயலை பார்த்த வாகன ஓட்டிகள் சிறுவனை பாராட்டிவிட்டு சென்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலையில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்ல ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.
கடந்த 7 ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாததால் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும்-குழியுமாக மாறியுள்ளது. சில இடங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் சாலை பள்ளத்தில் விழுந்து ரத்தக் காயங்களுடன் செல்கின்றனர்.
இந்த நிலையில் சேந்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60). தனது மோட்டார் சைக்கிளில் இந்த சாலையில் சென்ற போது பள்ளத்தில் விழுந்த போது பிரேக் போட்டுள்ளார்.
அப்போது பின்பக்கம் வந்த மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேகரின் பேரன் மாசிலாமணி (13). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தனது தாத்தா போல் பள்ளத்தில் மற்றவர்கள் யாரும் விழுந்து அடிப்படக் கூடாது, ஏதேனும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்று எண்ணி இன்று காலை சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டான்.
எத்தனையோ பணக்காரர்கள், அரசியல்வாதிகள் சென்றுவரும் இந்த சாலையில் ஒரு சிறுவன் தனி ஆளாக நின்று ஆங்காங்கே கிடக்கும் சிமெண்ட் கற்கல், சாலையோரம் உள்ள மணல் ஆகியவற்றை போட்டு சுத்தியால் தட்டி தண்ணீர் ஊற்றி மட்டம் செய்து சாலையை சீரமைத்துள்ளார்.
மாணவனின் இச்செயலை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சிறுவனை பாராட்டிவிட்டு சென்றனர்.
- புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), சென்னை ஓப்போ - ப்ரோ மொபைல் டிரேடிங் நிறுவனம் சார்பில் மேலாண்மை துறை மாணவர்களுக்கான பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
- ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), சென்னை ஓப்போ - ப்ரோ மொபைல் டிரேடிங் நிறுவனம் சார்பில் மேலாண்மை துறை மாணவர்களுக்கான பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் ஹரிஷ், மனிதவள துறை நிர்வாகி காயத்ரி மற்றும் குழுவினர், அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மயிலம் பொறியியல் கல்லூரி மற்றும் கிறிஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளில் இருந்து மேலாண்மை துறை இறுதி ஆண்டு மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர் வைத்தீஸ்வரன் செய்து இருந்தனர்.
- புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்தது.
- இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளித்த அகில இந்திய, மாநில தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
புதுச்சேரி:
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளித்த அகில இந்திய, மாநில தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விரைவில் பதவி ஏற்று கட்சியை வலுப்படுத்த பணியாற்றுவது.
புதிய நிர்வாகிகளுக்கு அரசியல் பயிற்சி அளிக்க முகாம்கள் நடத்துவது. என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சியால் புதுவை மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் பால் விலையை உயர்த்தியது. ஏழை மக்களின் அன்றாட நடவடிக்கையை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. அதோடு ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த அரசு பரிந்துரை செய்துள்ளது.
இது ஏழை மக்களை கடும் துன்பத்திற்கு உள்ளாக்கும். எனவே, அரசு பால் விலை உயர்வை திரும்ப பெற்று, மின் கட்டணத்தை உயர்த்துவதை மறுபரீசிலனை செய்ய வேண்டும். இல்லையெனில் கட்சி தலைமையின் அனுமதியோடு போராட்டம் நடத்துவது.
விலைவாசி உயர்வால் ஏற்கனவே புதுவை மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் பிரிபெய்டு மின் கட்டண திட்டத்தை அமுல்படுத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக அமையும். எனவே, பிரிபெய்டு மின் கட்டண திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- புதுவை மாநில ஒருங்கிணைந்த தற்காப்பு கலை பயிற்சியாளர்களின் ஆலோசனை கூட்டம் மாநில அலுவலகத்தில் சேர்மன் கராத்தே வளவன் தலைமையில் நடந்தது.
- சங்கத்தின் தொழில்நுட்ப இயக்குனர் சந்தோஷ் சங்கத்தின் வளர்ச்சிப் பணியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை கூறினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில ஒருங்கிணைந்த தற்காப்பு கலை பயிற்சியாளர்களின் ஆலோசனை கூட்டம் மாநில அலுவலகத்தில் சேர்மன் கராத்தே வளவன் தலைமையில் நடந்தது.
இதில் தலைவர் ராஜ், செயலாளர் செந்தில், பொருளாளர் சுபாஷ், மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணி, ஆறுமுகம், அசோக் ,வெங்கடேஷ், செல்வம், செந்தில், வெங்கடாஜலபதி, சுரேஷ், கோபி ,செல்வம், உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் தொழில்நுட்ப இயக்குனர் சந்தோஷ் சங்கத்தின் வளர்ச்சிப் பணியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை கூறினார். வருங்காலத்தில் நடைபெற உள்ள மாநில மற்றும் தேசிய போட்டி குறித்து விவாதிக்கப்பட்டது.
முடிவில் சீனியர் பயிற்சியாளர் செந்தில் நன்றி கூறினார்.
- உப்பளம் தொகுதிக்கு ட்பட்ட வம்பா கீரப்பாளையம் பகுதியில் தெப்பக்குளம் வீதியில் எம்-வடிவ வாய்க்கால் கட்டுவதற்கான பணி, நேதாஜி நகர், பாரதிதாசன் வீதி மற்றும் தாமரை நகர் பகுதிகளில் சாலை மற்றும் எல்-வடிவ வாய்க்கால் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இப்பணிகளை விரைவுப்படுத்துமாறு உதவி பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு ட்பட்ட வம்பா கீரப்பாளையம் பகுதியில் தெப்பக்குளம் வீதியில் எம்-வடிவ வாய்க்கால் கட்டுவதற்கான பணி, நேதாஜி நகர், பாரதிதாசன் வீதி மற்றும் தாமரை நகர் பகுதிகளில் சாலை மற்றும் எல்-வடிவ வாய்க்கால் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆங்காங்கே பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் உள்ளது. இப்பணிகளை விரைவுப்படுத்துமாறு உதவி பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து வாண ரப்பேட்டை பகுதி சேர்ந்த நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதியில் ப-வடிவ வடிகால் அமைக்கும் பணி, சாலைகளை சீரமைத்தல் பணிகள், பெரிய பள்ளி வார்டு பகுதிகளில் சைடு வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது தொகுதி செயலாளர் சக்திவேல், இளைஞர் அணி ராஜீ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசீர், கிளைச் செயாளலர் லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தை அமாவாசையை முன்னிட்டு கடல் தீர்த்தவாரி நடந்தது. புதுவை கடற்கரையில் குடியரசு தினவிழாவுக்காக மேடைகள், தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
- அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசையையொட்டி புதுவை கடற்கரையில் பொது மக்கள் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
புதுச்சேரி:
தை அமாவாசையை முன்னிட்டு கடல் தீர்த்தவாரி நடந்தது.
புதுவை கடற்கரையில் குடியரசு தினவிழாவுக்காக மேடைகள், தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு தை அமாவாசை தீர்த்தவாரி தலைமை செயலகம் எதிரே நடந்தது.
வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், லாஸ்பேட்டை சிவ சுப்பிரமணியர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், சுந்தர சபரீஸ்வரர் கோவில், மணக்குளவிநாயகர், காமாட்சி அம்மன், சுந்தரவினாயகர், கவுசிக பாலசுப்பிரமணியர், தண்டுமுத்துமாரியம்மன், முல்லை நகர் உலகநாயகி அம்மன் உட்பட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டன.
அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசையையொட்டி புதுவை கடற்கரையில் பொது மக்கள் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்றிலும் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
- புதுவை லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நமோ கிரிக்கெட் 2023 போட்டி தொடங்கியது.
- முதல் பரிசு கோப்பையுடன் ரூ.50ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும், 2-ம் பரிசு கோப்பையுடன் ரூ.30ஆயிரம், 3-ம் பரிசு கோப்பையுடன் ரூ.20ஆயிரம், 4-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 5-ம் பரிசு ரூ.5ஆயிரம் முறையே வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நமோ கிரிக்கெட் 2023 போட்டி தொடங்கியது.
போட்டியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏக்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கிரிக்கெட் போட்டி நேற்று இரவு தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் பரிசு கோப்பையுடன் ரூ.50ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும், 2-ம் பரிசு கோப்பையுடன் ரூ.30ஆயிரம், 3-ம் பரிசு கோப்பையுடன் ரூ.20ஆயிரம், 4-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 5-ம் பரிசு ரூ.5ஆயிரம் முறையே வழங்கப்பட உள்ளது. விளையாட்டில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கிரிக்கெட் தொடக்க விழா நிகழ்ச்சியில், பா.ஜனதா இளைஞரணி துணைத் தலைவர்கள் உமாசங்கர், ராக் பெடரிக், மாநில செயலாளர்கள் அஸ்வின்குமார், அமல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமரன் மாநில வணிகர் பிரிவு இணை அமைப்பாளர் சீனிவாசப்பெருமாள், ஓ.பி.சி. அணி மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், பிரண்ட்ஸ் மொபைல் சரவணன், ஆனந்த கண்ணன், பிரபுதாஸ், லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பாரதப் மோடி பொதுத் தேர்வுகள் எழுதப் போகும் மாணவர்கள் பயம் இல்லாமல் தேர்வுகளை சந்திப்பதற்காக கடந்த 2018 முதல் என்ற பரிக் ஷா பி சர்ச்சா என்கிற திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தைரியமும், ஊக்கமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும் வகையில் ஆலோசனைகளும், மந்திரங்களும் வழங்கி வருகிறார்.
- ஓவிய போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஓவியம் வரைய தேவையான உபகரணங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
பாரதப் மோடி பொதுத் தேர்வுகள் எழுதப் போகும் மாணவர்கள் பயம் இல்லாமல் தேர்வுகளை சந்திப்பதற்காக கடந்த 2018 முதல் என்ற பரிக் ஷா பி சர்ச்சா என்கிற திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தைரியமும், ஊக்கமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும் வகையில் ஆலோசனைகளும், மந்திரங்களும் வழங்கி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இந்த வருடம் நேற்று புதுவை மாநிலத்தில் தேர்வுகள் எழுதப் போகும் அனைத்து தொகுதிகளிலும் உள்ள பல்லாயிரம் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு "எக்ஸாம் வாரியர்ஸ்" என்ற தலைப்பில் மாநில, மாவட்ட தலைமையின் ஆலோசனையின் படி, செல்வகணபதி எம்.பி. ஏற்பாட்டில் நடைபெற்றது.
நகர மாவட்டம் உப்பளம் தொகுதியில் உள்ள அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த ஓவிய போட்டி, பள்ளி தலைமை அனுமதியுடன் தொகுதி பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், தொகுதி தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் அற்புதழகன், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கண்காணிப்பில் நடைபெற்றது. ஓவிய போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஓவியம் வரைய தேவையான உபகரணங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது.
- மூச்சு திணறல் ஏற்பட்டு 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்து போனார்.
- சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் மேட்டுதெருவை சேர்ந்தவர் சீனிவாசன். தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது சித்தி பரமேஸ்வரி. இவரது மகன் விசித்திரன் (வயது13). கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரமேஸ்வரி இறந்து விட்டார். அவரது கணவர் சுந்தரமூர்த்தியும் பிரிந்து சென்று விட்டதால் விசித்திரனை சீனிவாசன் தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார்.
விசித்திரன் ராம்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது. இதனால் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் காண்பித்த போது அந்த நோய்க்கான உபகரணங்கள் தற்போது ஆஸ்பத்திரியில் இல்லை என்றும், உபகரணங்கள் வந்த பின்னர் தகவல் தெரிவிப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விசித்திரனை சீனிவாசன் கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் விசித்திரன் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினான். சிறிது நேரத்தில் மூச்சு பேச்சியின்றி விசித்திரன் கிடப்பதை கண்டு சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விசித்திரனை நெட்டப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு விசித்திரன் வரும் வழிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது.
- சாப்பிட்டு விட்டு தூங்கிய சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.
புதுச்சேரி:
புதுச்சேரி நெட்டப்பாக்கம் மேட்டுதெருவை சேர்ந்தவர் சீனிவாசன். தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது சித்தி பரமேஸ்வரி. இவரது மகன் விசித்திரன்.
இவன் ராம்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது. இதனால் தூக்க மின்மையால் அவதிப்பட்டு வந்தான்.
நேற்று மதியம் விசித்திரன் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினான். சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.






