என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நகராட்சி அதிகாரிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. ஆலோசனை
    X

    உதவி பொறியாளர் பிரபாகரனை சந்தித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்திய காட்சி.

    நகராட்சி அதிகாரிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. ஆலோசனை

    • உப்பளம் தொகுதிக்கு ட்பட்ட வம்பா கீரப்பாளையம் பகுதியில் தெப்பக்குளம் வீதியில் எம்-வடிவ வாய்க்கால் கட்டுவதற்கான பணி, நேதாஜி நகர், பாரதிதாசன் வீதி மற்றும் தாமரை நகர் பகுதிகளில் சாலை மற்றும் எல்-வடிவ வாய்க்கால் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இப்பணிகளை விரைவுப்படுத்துமாறு உதவி பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு ட்பட்ட வம்பா கீரப்பாளையம் பகுதியில் தெப்பக்குளம் வீதியில் எம்-வடிவ வாய்க்கால் கட்டுவதற்கான பணி, நேதாஜி நகர், பாரதிதாசன் வீதி மற்றும் தாமரை நகர் பகுதிகளில் சாலை மற்றும் எல்-வடிவ வாய்க்கால் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஆங்காங்கே பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் உள்ளது. இப்பணிகளை விரைவுப்படுத்துமாறு உதவி பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து வாண ரப்பேட்டை பகுதி சேர்ந்த நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதியில் ப-வடிவ வடிகால் அமைக்கும் பணி, சாலைகளை சீரமைத்தல் பணிகள், பெரிய பள்ளி வார்டு பகுதிகளில் சைடு வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

    இந்த சந்திப்பின்போது தொகுதி செயலாளர் சக்திவேல், இளைஞர் அணி ராஜீ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசீர், கிளைச் செயாளலர் லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×