என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எதிர் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி-என்.ஆர். இலக்கிய பேரவை குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    எதிர் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி-என்.ஆர். இலக்கிய பேரவை குற்றச்சாட்டு

    • பருவநிலை மாற்றம் பொருளாதார மந்த நிலை அதிகரித்து வரும் பயங்கரவாதம் ஆகியவைகள் குறித்து உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது என்பது 65 சதவீத இளைய சமுதாயத்தை கொண்ட இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
    • அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்து பகுதிகளிலும் சம அளவு கொண்டதாக இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தன சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    பருவநிலை மாற்றம் பொருளாதார மந்த நிலை அதிகரித்து வரும் பயங்கரவாதம் ஆகியவைகள் குறித்து உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது என்பது 65 சதவீத இளைய சமுதாயத்தை கொண்ட இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

    இதை ஒவ்வொரு இந்தியரும் கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு. வல்லரசு நாடுகள் எல்லாம் வளைந்து நெளிந்து கொண்டிருக்கையில் தன்னுடைய ஆழமான சமூக பொருளாதார கட்டமைப்பால் இன்று நாம் நிமிர்ந்து நிற்கின்றோம் என்றால் அது 75 ஆண்டுகால சுதந்திரம் நமக்கு கொடுத்த வெகுமதியே.

    அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்து பகுதிகளிலும் சம அளவு கொண்டதாக இருக்க வேண்டும். அதுதான் மக்கள் ஜனநாயகத்தின் சிறப்பு. அதை விடுத்து பின் தங்கிய நிலையில் இருப்பது எப்படி சம வளர்ச்சியாக இருக்கும். யூனியன் பிரதேசங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருந்தாலும், மத்திய அரசின் அதிகார ஆளுமையால் இங்கு உயர் அதிகாரிகளின் செல்வாக்கே ஓங்கி நிற்கிறது.

    இதனால் மாநில அரசு மக்கள் நலன், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதோடு ஒவ்வொரு முறையும் புதிய திட்டங்களுக்கு அனுமதி பெற காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலையே தொடர்கிறது.

    இதனால் கடந்த கால கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு தான் மாநில அந்தஸ்து என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து மத்தியில் ஆளும் அரசோடு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு மாநில அளவில் அதை வழிநடத்தி வருகின்றார் முதல்-அமைச்சர் ரங்கசாமி.

    மாநில அந்தஸ்து குறித்து எந்த அடிப்படை தெளிவும் இல்லாத எதிர்க் கட்சிகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

    அவற்றை எல்லாம் தன்னுடைய சாதுரிய அரசியல் நடவ டிக்கையா ளும், அணுகுமுறையாளும் முறியடித்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு வெகு விரைவில் மாநில அந்தஸ்தை பெற்றுக் கொடுக்கும் தகுதியும் திறமையும் முதல்-அமைச்சர் ரங்கசாமியால் மட்டும்தான் அது சாத்தியமாகும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×