என் மலர்
புதுச்சேரி

ஓவியப்போட்டியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.
ராதா ஆங்கிலப்பள்ளியில் ஓவியப்போட்டி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- பள்ளி மாணவ-மாணவியர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு வழிகாட்டியாக வும் சிறந்த வழிமுறைகளையும் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற நூலில் எழுதி பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ளார்.
- இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
பள்ளி மாணவ-மாணவியர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு வழிகாட்டியாக வும் சிறந்த வழிமுறைகளையும் 'எக்ஸாம் வாரியர்ஸ்' என்ற நூலில் எழுதி பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு மந்திரமாக தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மணவெளி ராதா ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது.
இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பரமானந்தம், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, ெதாகுதி தலைவர் லட்சுமிகாந்தன், நிர்வாகிகள் கலை வாணன், எஸ்.வி.எஸ்.குமரன், தங்கதுரை , இளஞ்செ ழியன், செந்தில் முருகன், சசி வெங்கடேசன், முருகன், மதியழகன், சிவப்பிரகாசம், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






