என் மலர்
புதுச்சேரி

ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணை படத்தில் காணலாம்.
கார் மோதியதில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட பெண்
- புதுவையில் இருந்து கடலூர் நோக்கி இன்று பிற்பகலில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.
- இதில் குடும்பத்துடன் வந்த 2 பேரில் பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவையில் இருந்து கடலூர் நோக்கி இன்று பிற்பகலில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.
அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பு பாலத்தில் வந்து கொண்டிருந்த அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்திருந்த மோட்டார் சைக்கிளை மோதியது. இதில் குடும்பத்துடன் வந்த 2 பேரில் பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
அந்த பெண் சுண்ணாம்பாற்றின் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகனத்தில் சென்றவர்கள் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அங்கு இருந்தவர்களே ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






