என் மலர்
புதுச்சேரி
- புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
- புதுவை மாநில ஏழை எளிய மாணவ-மாணவிகள் எல்.டி.சி., யூ.டி.சி., ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கான போட்டி தேர்வினை பயமின்றி எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு தேவையான பயிற்சியை வழங்க அனுபவமிக்க ஆசிரியர் இங்கு வந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதனை விவேகானந்தா கல்வி அறக்கட்டளை தலைவர், தாளாளர் செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்து பேசியதாவது:-
புதுவை மாநில ஏழை எளிய மாணவ-மாணவிகள் எல்.டி.சி., யூ.டி.சி., ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கான போட்டி தேர்வினை பயமின்றி எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு தேவையான பயிற்சியை வழங்க அனுபவமிக்க ஆசிரியர் இங்கு வந்துள்ளனர்.
இந்த பயிற்சி 45 நாட்கள் நடைபெற உள்ளது.காலை மாலை 2 பிரிவுகளாக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாடு முழுவதும் மாநில காங்கிரசார் பாதயாத்திரை நடத்த ராகுல்காந்தி எம்.பி. அறிவுறுத்தியுள்ளார். இதன்படி பாதயாத்திரை நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சார்பில் நடந்தது.
- பாதயாத்திரை வாயிலாக மக்கள் குறைகளை ராகுல்காந்தி கேட்டு வருகிறார். வடமாநில ங்களில் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு இடையே கலவரத்தை உருவாக்கி நாட்டை பிரிக்கும் வேலை நடந்து வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் மாநில காங்கிரசார் பாதயாத்திரை நடத்த ராகுல்காந்தி எம்.பி. அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி பாதயாத்திரை நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சார்பில் நடந்தது.கூட்டத்திற்கு வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், நிர்வாகிகள் அய்யப்பன், நந்தா கலைவாணன், ராஜா, கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
பாதயாத்திரை வாயிலாக மக்கள் குறைகளை ராகுல்காந்தி கேட்டு வருகிறார். வடமாநில ங்களில் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு இடையே கலவரத்தை உருவாக்கி நாட்டை பிரிக்கும் வேலை நடந்து வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கும்போது சகோதரத்துவம், தனிமனித சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தினார். இவை தவிடுபொடியாகி வருகிறது.
மத்திய பா.ஜனதா அரசு தங்களுக்கென தனி சட்டத்தை வகுத்துள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு அரசியல்தலைவர்களை பழிவாங்குகிறது. நாமும் பாதயாத்திரை சென்று மக்களை சந்திக்க வேண்டும். மாநில அந்தஸ்து வேண்டும் என முதல்-அமைச்சர் கூறுகிறார், பா.ஜனதா மாநில தலைவர் வேண்டாம் என்கிறார்.
மத்திய அமைச்சர் நிர்மலாசீத்தாராமன், சிறப்பு மாநில அந்தஸ்து போதும் என்கிறார்.
ஆளும் கூட்டணி கட்சிகளிடையே முரண்பாடு உள்ளது. ஊழல் நிறைந்த ரங்கசாமி ஆட்சியை இப்போதுதான் பார்க்கிறோம். அனைத்து முக்கிய சாலைகளிலும் மதுக்கடைகளை திறக்கின்றனர். புதுவை கலாச்சாரத்தையே ரங்கசாமி அழித்து வருகிறார்.
காவல்துறை வேலைவாய்ப்பில் லஞ்சம், பத்திரப்பதிவில் லஞ்சம் என எல்லா இடத்திலும் லஞ்சம் தாண்ட வமாடுகிறது.
ரேஷன்கடைகளை திறக்கவில்லை. பஞ்சாலைகள், கூட்டுறவு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. மக்களை பற்றி கவலைப்படாத முதல்-அமைச்சராக ரங்கசாமி உள்ளார். லாஸ்பேட்டை தொகுதியில் 2 நாட்கள் பாதயாத்திரையை சிறப்பாக நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் மாநாடுகள், கருத்தரங்குகள் நடக்கிறது. புதுவையில் வருகிற 29ம் தேதி முதல் 31-ந் தேதி வரை மாநாடு நடக்கிறது.
- கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் செல்வம் தலைமை வகித்து, போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார்.
புதுச்சேரி:
ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது.
இதையொட்டி நாடு முழுவதும் மாநாடுகள், கருத்தரங்குகள் நடக்கிறது. புதுவையில் வருகிற 29ம் தேதி முதல் 31-ந் தேதி வரை மாநாடு நடக்கிறது. இதில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
மத்திய அரசு ஜி20 மாநாடு சின்னத்தை வெளி யிட்டுள்ளது. இந்த சின்னத்தை பொது மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பெண்களுக்கு கோலப்போட்டி, மாணவ- மாணவிகளுக்கு வர்ணம் தீர்ட்டுதல், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் செல்வம் தலைமை வகித்து, போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார். சிறந்த கோலம் வரைந்த 10 பெண்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கலை பண் பாட்டுத்துறை இயக்குனர் கந்தன் தலைமையில் துறை அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
- திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இடையஞ்சாவடி செல்லும் வழியில் அவிநாசியில் இருந்து கொண்டு வரப்பட்டு பஞ்சலோக கருங்கற்களால் திருப்பணி செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது.
- மேலும் 48 நாட்களுக்கு மூலமந்திர ஹோமங்களுடன் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலில் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்ன தானங்கள் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இடையஞ்சாவடி செல்லும் வழியில் அவிநாசியில் இருந்து கொண்டு வரப்பட்டு பஞ்சலோக கருங்கற்களால் திருப்பணி செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் 9 நவஅக்னி குண்டங்களும், 12 பரிவார யாக குண்டங்களும் அமைக்கப்பட்டு கடந்த 23-ந் தேதி முதல் 8 கால விசேஷ ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. யாக பூஜையை அவிநாசி பிச்சை சிவாச்சாரியார் தொடங்கி வைத்தார்.
கஜ பூஜை, அஸ்வ பூஜை உடன் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையுடன் நடைபெற்றது. 9 மணி முதல் 10.30 மணி வரை அம்மா புவனாம்பிகா முன்னிலையில், சர்வ சாதகம் சிவாகம பூசணம் கணேச சிவாச்சாரியார் தலைமையில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் விநாயகர், சுப்பிரமணியர், சிவலிங்கம், மகாமேரு, சூரியன், சந்திரன், சப்தமாதா, லட்சுமி நாராயணன், சண்டிகேஸ்வரி உள்ளிட்ட பரிவாரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று மதியம் 12 மணிக்கு மகா தீபம் நடந்தது.
மாலை உற்சவர் உட்பிரகார வீதி உலாவும் நடக்க உள்ளது.
மேலும் 48 நாட்களுக்கு மூலமந்திர ஹோமங்களுடன் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலில் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்ன தானங்கள் நடைபெற்று வருகிறது.
- புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், பொதுச்செயலாளர் கதிர்வேலு, பொருளாளர் லட்சுமிநாராயணன் ஆகி யோர் தலைமையில் வக்கீல்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
- வக்கீல்கள் போராட்டம் காரணமாக கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டது. வழக்குகள் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், பொதுச்செயலாளர் கதிர்வேலு, பொருளாளர் லட்சுமிநாராயணன் ஆகி யோர் தலைமையில் வக்கீல்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தமிழக, புதுவை வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு முடிவின்படி இந்த போராட்டம் நடந்தது. தர்மபுரி வக்கீல் சிவக்குமார் கொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
மதுரை வக்கீல்களை தாக்கிய போலீசாரை கண்டித்தும், வக்கீல்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு சட்டத்தை தாமதமின்றி மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.
வக்கீல்கள் போராட்டம் காரணமாக கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டது. வழக்குகள் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- புதுவை நகர கிராம அமைப்புத்துறை தேசிய தகவலியல் மையத்தடன் இணைந்து நில உபயோகத்தை மாற்றுவதற்கான ஆன்லைன் சேவையை தொடங்கியுள்ளது.
- நகர அமைப்பு செயலர் கேசவன் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
புதுவை நகர கிராம அமைப்புத்துறை தேசிய தகவலியல் மையத்தடன் இணைந்து நில உபயோகத்தை மாற்றுவதற்கான ஆன்லைன் சேவையை தொடங்கியுள்ளது.
இந்த ஆன்லைன் சேவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நகர அமைப்பு செயலர் கேசவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தலைமை நகர அமைப்பாளர் மகாலிங்கம், தேசிய தகவலியல் மைய அதிகாரி ராஜசேகரன், நகரமைப்பு உறுப்பினர்செயலர் கந்தர்செல்வன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
- திருக்கனூரில் முதியவர் தவறி விழுந்து இறந்து போனார். திருக்கனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயராகவன். இவருக்கு பூரணி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
- அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
புதுச்சேரி:
திருக்கனூரில் முதியவர் தவறி விழுந்து இறந்து போனார்.
திருக்கனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 83). இவருக்கு பூரணி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். விஜயராகவன் அப்பகுதியில் உள்ள அங்கன் வாடிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் காலில் அணிந்திருந்த காலணி வழுக்கியதால் தடுமாறி கிழே விழுந்தார்.
உடனே அவரை அதே பகுதியில் வசிக்கும் அவரது மருமகன் மற்றும் உறவினர்கள் மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலநின்றி விஜயராகவன் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து அவரது மருமகன் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நிரந்தர வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை சொக்கநாதன் பேட்டை இந்திராநகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி கட்டிட தொழிலாளி இவரது மகன் குகன்.
- இந்த நிலையில் முனுசாமியும் அவரது மனைவியும் வடமங்கலத்தில் நடந்த உறவினரின் கிரகபிரவேக நிகழ்ச்சிக்கு சென்றனர்.
புதுச்சேரி:
நிரந்தர வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை சொக்கநாதன் பேட்டை இந்திராநகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி கட்டிட தொழிலாளி இவரது மகன் குகன். இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு புதுவையில் உள்ள ஒரு தனியார் பார்சல் கம்பெனியில் வேலை செய்துவந்தார்.
ஆனால் இந்த வேலையில் போதிய வருமானம் இல்லை என்றும் நிரந்தர வேலை கிடைக்க வில்லை என்றும் குகன் தனது பெற்றோரிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தார்.
இந்த நிலையில் முனுசாமியும் அவரது மனைவியும் வடமங்கலத்தில் நடந்த உறவினரின் கிரகபிரவேக நிகழ்ச்சிக்கு சென்றனர்.
வீட்டில் குகன் மட்டும் தனியாக இருந்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து முனுசாமியும் அவரது மனைவியும் வீட்டுக்கு வந்த போது அங்கு மின் விசிறியில் குகன் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தின் உதவியுடன் குகனை தூக்கிலிருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது தந்தை முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த 180 புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி குருசுகுப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
- நிகழ்ச்சியில் துறை துணை இயக்குனர் அமுதா, தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் குமரன், குணா, சுந்தரபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த 180 புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி குருசுகுப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
முதியோர், விதவைகள், முதிர்கன்னி உட்பட பயனாளிகளுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் துறை துணை இயக்குனர் அமுதா, தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் குமரன், குணா, சுந்தரபால், நாராயணன், புவனேஸ்வரன், சந்துரு, அருண்குமார், நாராயண சாமி, சங்கர், குப்பன், நாகராஜ், எத்திராஜ், வினோத், சதீஷ், சரவணன், சிவா, அணிமாஷ், கணபதி, செல்லாவ, ராமதாஸ்நாயுடு, சங்கர், ரவி, கிருஷ்ண ராஜ், முரளிகுப்தா, கலைச்செ ல்வி, கலாவதி குப்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- குழந்தை சாஹவ் 31 விநாடிகளில் 7 உலக அதிசயங்களை கண்டறிந்து அதன் பெயரை சரியாக சொல்லி 359 பொருட்களின் பெயரை கண்டறிந்து சொல்லி உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.
- குழந்தையின் திறமையை பாராட்டி சான்றிதழ், ரொக்கப்பரிசும் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை சாலையில் நடந்த குடியரசு தினவிழாவில் அரசு மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் 2½ வயது குழந்தை சாஹவ்வுக்கு நினைவாற்றல் திறமைக்காக விருது வழங்கப்பட்டது. கவர்னர் தமிழிசை விருதை வழங்கினார்.
குழந்தை சாஹவ் 31 விநாடிகளில் 7 உலக அதிசயங்களை கண்டறிந்து அதன் பெயரை சரியாக சொல்லி 359 பொருட்களின் பெயரை கண்டறிந்து சொல்லி உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த குழந்தையின் திறமையை பாராட்டி சான்றிதழ், ரொக்கப்பரிசும் அளிக்கப்பட்டது.
பிராந்திய அளவில் மேல்நிலை பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த அட்டவணை, பழங்குடியின மாணவர்கள் ரோகித், அபிநயா, விஜய், பிரியங்கா ஆகியோருக்கு டாக்டர் அம்பேத்கர் நினைவுப்பரிசாக தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது.
புதுவை பகுதியில் சிறந்து விளங்கிய திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேக்கிழார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு பேராசிரியர் அம்பாடி நாராயணன் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
- புதுவை நகராட்சிக்குட்பட்ட ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குமரகுரு பள்ளத்தில் பல ஆண்டுக்கு முன் குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டது. இது குடியிருக்கும் தகுதியில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் இடிக்கப்பட்டது.
- இந்த திட்டத்திற்கான பூமி பூஜை விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை நகராட்சிக்குட்பட்ட ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குமரகுரு பள்ளத்தில் பல ஆண்டுக்கு முன் குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டது.
இது குடியிருக்கும் தகுதியில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் இடிக்கப்பட்டது. இதனால் அங்கு வசித்த மக்கள் வாடகை வீடுகளில் இன்னல்களோடு வசித்து வந்தனர்.
இந்நிலையில் அதே இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடியிருப்பு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுத்தது. தரை மற்றும் 12 தலங்களுடன் 216 குடியிருப்புகள் அடங்கிய 2 கட்டடங்கள் கட்ட ரூ.45.50 கோடியில் திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்திற்கான பூமி பூஜை விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் மற்றும் ஊர்பொதுமக்கள், என்ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- மதகடிப்பட்டு வார சந்தையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- வாரச்சந்தைக்கு சென்று கோதண்டராமன் காய்கறிகளை வாங்கிகொண்டு சந்தை எதிரே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு வார சந்தையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருபுவனை அருகே திருபுவனை பாளையம் சேது நகரை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது48). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வாரந்தோறும் மதகடிப்பட்டு சந்தைக்கு சென்று வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம்.
அதுபோல் வாரச்சந்தைக்கு சென்று கோதண்டராமன் காய்கறிகளை வாங்கிகொண்டு சந்தை எதிரே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென கோதண்டராமனிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கோதண்டராமன் அந்த வாலிபரை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினார். ஆனால் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் இருளில் சென்று தப்பியோடி விட்டார். இதனால் செல்போனை பறி கொடுத்த கோதண்டராமன் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.






