என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை டி.வி.எஸ்., சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில் இறுதி ஆண்டு படிக்கும் மின் மற்றும் மின்னணுவியல், இயந்திரவியல் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • புதுவையை சுற்றியுள்ள பல என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை டி.வி.எஸ்., சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில் இறுதி ஆண்டு படிக்கும் மின் மற்றும் மின்னணுவியல், இயந்திரவியல் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    அந்நிறுவனத்தின் மனித வளத்துறை மேலாளர் அன்பரசன், சுரேஷ் மற்றும் சபரி நாதன் ஆகியோர் அந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பு குறித்து அனைத்து விபரங்களையும் விளக்கி கூறினர்.

    மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் தலைவர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கல்லூரி முதல்வர் மலர்கண் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் எம்.ஐ.டி., மற்றும் புதுவையை சுற்றியுள்ள பல என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட பொதுப் பணித் துறையின் பராமரிப்பில் உள்ள பாதாள வடிகால் வாய்க்கால் களையும், நகராட்சி யையும் மற்றும் ப-வடிவ வாய்க்கால்களையும் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி ஆய்வு மேற்கொண்டார்.
    • தொடர்ந்து வாணரப் பேட்டை அலன் வீதி, கஸ்தூரிபாய் வீதிகளில் வாய்க்கால்களை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட பொதுப் பணித் துறையின் பராமரிப்பில் உள்ள பாதாள வடிகால் வாய்க்கால் களையும், நகராட்சி யையும் மற்றும் ப-வடிவ வாய்க்கால்களையும் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி ஆய்வு மேற்கொண்டார்.

    பொதுமக்களிடம் இருந்து புகார் வராத வண்ணம் முன்கூட்டியே தொடர்ந்து ஆய்வு செய்து சீர்படுத்த வேண்டும் என அதிகாரிகளை எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.

    மேலும் நகராட்சி அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்ட அனைத்து வாய்க்கால்களும் சீர்செய்ய வலியுறுத்தினார்.

    தொடர்ந்து வாணரப் பேட்டை அலன் வீதி, கஸ்தூரிபாய் வீதிகளில் வாய்க்கால்களை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    அப்போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், மீனவரணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி கிளை செயலாளர்கள் செல்வம், காலப்பன், அசோக், ராகேஷ், கவுதமன், ராஜா, பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கிறது.
    • விமான நிலையம், அக்கார்டு, ரெசிடன்சி, ரேடிசன் ஓட்டல்கள், சுகன்யா கன்வென்சன் சென்டர் ஆகிய 5 இடத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஜி20 மாநாடு வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வல்லவன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதன்பின் கலெக்டர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கிறது.

    புதுவையில் வருகிற 30, 31-ந் தேதிகளில் ஜி20 கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க பல நாட்டு பிரநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டை சிறப்பாக நடத்த புதுவை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 30-ந் தேதி புதுவை மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கருத்தரங்கு நடக்கிறது.

    மாநாட்டையொட்டி ஜி 20 சின்னத்தை மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி20 மைய கருத்தை முன்வைத்து பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. பல கலைநிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    புதுவை நகர பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். புதுவை பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகையிலும், சுற்றுலா தலமாக வெளிப்படுத்தும் வகையிலும் நகரம் பொலிவுபடுத்தப்படும். மாநாடு வெற்றிகரமாக நடைபெற புதுவையின் அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    சுற்றுலா பயணிகளுக்கு தடை என தவறான வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30-ந் தேதி இந்தோனேஷியா, இந்தியா, பிரேசில் விஞ்ஞானிகள் இணைந்து புதுவையில் நடைபெறும் கூட்டத்தை வழிநடத்துகின்றனர். 31-ந் தேதி ஆரோவில் சென்று பல இடங்களை பார்வையிடுகின்றனர்.

    புதுவை மாநாட்டில் 75 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும். டி.ஐ.ஜி. தலைமையில் 37 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம், அக்கார்டு, ரெசிடன்சி, ரேடிசன் ஓட்டல்கள், சுகன்யா கன்வென்சன் சென்டர் ஆகிய 5 இடத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.

    இந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 1-ந் தேதி வரை அமலில் இருக்கும். பிரதிநிதிகள் பயணிக்கும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். வழக்கம்போல மதுக்கடை உட்பட அனைத்து கடைகளும் திறக்கலாம். மாநாட்டில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • புதுவை அரசு பள்ளி கல்வித்துறை இயக்ககம் விளையாட்டு மற்றும் இளைஞர் பணி சார்பில் கோரிமேடு காவல்துறை மைதானத்தில் மாநில அளவில் பள்ளிகளுக்கான தடகள போட்டிகள்தொடக்க விழா நடைபெற்றது.
    • இந்திய திருநாடு விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவ- மாணவியர்கள் விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்கும் வகையில் கேலோ இந்தியா என்ற திட்டத்தை துவக்கியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பள்ளி கல்வித்துறை இயக்ககம் விளையாட்டு மற்றும் இளைஞர் பணி சார்பில் கோரிமேடு காவல்துறை மைதானத்தில் மாநில அளவில் பள்ளிகளுக்கான தடகள போட்டிகள்தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த தடகளப் போட்டிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுமான ஏ.கே.டி. ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ருத்ர கவுடு வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசியதாவது:-

    இந்திய திருநாடு விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவ- மாணவியர்கள் விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்கும் வகையில் கேலோ இந்தியா என்ற திட்டத்தை துவக்கியுள்ளார்.

    அதன்படி இந்தியாவில் விளையாட்டில் ஆர்வ முள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் விளை யாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

    நேற்றைய தினம் கூட பாரத பிரதமர் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களிடையே தேர்வு குறித்த அச்சம் போக்கவும் அவர்கள் தேர்வினை பயமின்றி எதிர்கொள்ளவும் கலந்துரையாடினார்.

    புதுவை மாநிலத்திலும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதியை ஒதுக்கி பள்ளி மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.

    அதுமட்டுமல்லாமல் முதல்-அமைச்சர் அறிவித்த மாணவர்களுக்கான மடிக்கணினி, மிதிவண்டி உள்ளட்டவை விரைவில் வழங்கப்பட உள்ளது.

    இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்ள வந்திருக்கும் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை விளையாட்டில் செலுத்தி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசினார்.

    • அரியாங்குப்பம் ஒருங்கிணைந்த வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய அளவில் வடமாநிலங்களில் பாதயாத்திரை மேற் கொண்டு வரும் ராகுல் காந்தி எம்.பி.க்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில் அரியாங்குப்பம் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் ஒருங்கிணைந்த வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய அளவில் வடமாநிலங்களில் பாதயாத்திரை மேற் கொண்டு வரும் ராகுல் காந்தி எம்.பி.க்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில் அரியாங்குப்பம் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அரியாங்குப்பம் தொகுதி பொறுப்பாளருமான சங்கர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வட்டார கிழக்கு காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் (மேற்கு) சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் புதுவை புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அகில இந்தியமீனவர் காங்கிரஸ் செயலாளர் காங்கேயன் மாநில பி.சி.சி. செந்தில்குமரன், அன்புமணி செயலாளர் சூசைராஜ்மற்றும் அனைத்து கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நிர்வாகிகள் புதுவை மாநில அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கான ஏற்பாடுகளை வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் தலைமையில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து பஞ்சாயத்து ராஜ், அரியாங்குப்பம் தொகுதி தலைவர் சங்கர் பாபு மற்றும் தொகுதி பொருளாளர் பாபு, தொகுதி பொறுப்பாளர்கள் பாஸ்கர், கருணா, கர்ணன், கருணாகரன், சசிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    கூட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் 12 ஆண்டாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது.
    • கூட்டத்தில் நடப்பு நிதியாண்டில் துறைரீதியிலான நிதி ஒதுக்கீடு, செலவினங்கள், சம்பளம், ஓய்வூதியம் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 12 ஆண்டாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது. பட்ஜெட் தொகையை இறுதி செய்வதற்கான மாநில திட்டக்குழு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.கவர்னர் தமிழிசை தலைமை வகித்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபி ரியங்கா, வைத்திலிங்கம் எம்.பி., எதிர்கட்சித்தலைவர் சிவா, தலைமை செயலர் ராஜீவ்வர்மா, கலெக்டர் வல்லவன், அரசு துறை செயலர்கள் பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நடப்பு நிதியாண்டில் துறைரீதியிலான நிதி ஒதுக்கீடு, செலவினங்கள், சம்பளம், ஓய்வூதியம் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. பின்னர் வரும் நிதியாண்டு பட்ஜெட்டுக்கு ரூ.11 ஆயிரத்து 600 கோடி நிர்ணயிக்கப்பட்டது.

    இதை மாநில திட்டத்துறை உறுதி செய்துள்ளது. இந்த வரையறை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் மார்ச் மாதம் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    புதுவை மாநிலத்திட்ட க்குழுவில் எதிர்க்கட்சி த்தலைவர் சிவா பேசியதாவது:-

    புதுவையில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. புதிய ஆட்சி வந்த பிறகு ஒரு தொழிற்சா லைக்கூட வரவில்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர் 20 ஆண்டுகளாக முடக்கி போட்டுள்ளோம். சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டுவருவதாகக்கூறி நிறைய குழப்பங்கள் ஏற்பட்டன.

    இப்போதும் நடை முறைக்கு வரவில்லை. புதுவை வளர்ச்சிக்கு புதிய தொழிற்சாலை கள்கொண்டு வந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள்.

    புதுவையில் குடிநீர் பிரச்சினை அதிகரி த்துள்ளது. தமிழகத்தில் காவிரி குடிநீரை விழுப்புரம் வரை கொண்டு வந்துள்ளனர். தமிழக அரசுடன் பேசி குடிநீரை புதுவைக்கு கொண்டு வரலாம்.

    ரேஷன் கடை இல்லாத மாநிலம் என்ற கெட்டப்பெயர் ஏன்.? திறக்க நடவடிக்கை எடுங்கள்.

    புதுவையில் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தும் செலவுதான் அதிகமாகிறது. வேலையே ந டக்கவில்லை. ஒவ்வொரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் தொகுதியை பிரித்து கொடுங்கள். சிறப்புக்கூறு திட்டத்தில் அம்மக்களுக்கு இடம் எடுத்து நிலம் தருவதில்லை. வாரியங்களால் மக்களுக்கு பயன் இல்லாத சூழல் உள்ளது.

    புதிய தொழிற்கொள்கை யை உருவாக்கினால்தான் புதிய தொழிற்சாலைகள் வரமுடியும். மத்திய அரசின் பிரதிநிதி துணைநிலை ஆளுநர், பேரவைத்தலைவர் ஆகியோர் மூலம் கூடுதல் நிதியை பெறுங்கள். ஒத்துழைப்பு தருகிறோம். நல்ல பட்ஜெட் போடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழுப்புரம் -நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக பகுதியான ஆழியூர் ஏரி பகுதியிலிருந்து மண் எடுத்து வர திருவாண்டார் கோவில் காலணி பகுதியில் வழி சீர்படுத்தும் பணியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் -நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக தமிழக பகுதியான ஆழியூர் ஏரி பகுதியிலிருந்து மண் எடுத்து வர திருவாண்டார் கோவில் காலணி பகுதியில் வழி சீர்படுத்தும் பணியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஈடுபட்டனர். இத் தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி பொக்லைன் எந்திரம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் இவ்வழியாக மண் லாரி சென்றால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அதுமட்டுமில்லாமல் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளியும் பகுதியில் அமைந்துள்ளது.

    ஏற்கனவே இந்திய உணவு கழகத்திற்கு உணவு ஏற்ற வரும் லாரிகளால் இடையூறு இருந்து வருகிறது. அதனுடன் சேர்த்து இவ் வழியாக லாரியில் மண் எடுத்து சென்றால் மேலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். பாதுகாப்புக்கு அச்சுறுதலாக இருக்கும் எனவே இவ்வழியில் எடுத்துச் செல்லக்கூடாது என வலியுறுத்தினர்.

    அப்பகுதி பொதுமக்களிடம் திருபுவனை போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். பொக்லைன் எந்திரத்தின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    • புதுவை அரும்பார்த்த புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் 7 வயது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • உடனே ராஜேந்திரன், சம்பத் எம்.எல்.ஏ. வைதொடர்பு கொண்டு ரத்த தானம் செய்ய கோரிக்கை விடுத்தார். இவரின் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பத் எம்.எல்.ஏ ரத்ததானம் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரும்பார்த்த புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் 7 வயது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இவருக்கு திடீரென உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சிறுமிக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைய தொடங்கியது. சிறுமிக்கு அறிய வகையான ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்பட்டது.

    பல இடங்களில் சிறுமியின் தந்தை ராஜேந்திரன் முயற்சித்தும் ரத்தம் கிடைக்கவில்லை. அரசு மருத்துவமனை ரத்த நன்கொடையாளர் பட்டியில் உள்ள எண்ணில் சம்பத் எம்.எல்.ஏ. தொலைபேசி எண்இருந்தது.

    உடனே ராஜேந்திரன், சம்பத் எம்.எல்.ஏ. வைதொடர்பு கொண்டு ரத்த தானம் செய்ய கோரிக்கை விடுத்தார். இவரின் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பத் எம்.எல்.ஏ ரத்ததானம் செய்தார்.

    தொலைபேசியில் தொடர்பு கொண்ட உடனேயே எம்.எல்.ஏ குழந்தைக்கு ரத்தம் தானம் செய்ய வந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சம்பத் எம்.எல்.ஏவுக்கு இது 45-வது ரத்த தானம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொது இடத்தில் மது குடித்து விட்டு ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுவை சாரம் மார்க்கெட்டில் உள்ள கழிவறை அருகே 3 வாலிபர்கள் மது குடித்து விட்டு மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களை அருவ ருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்வதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இதைத்தொடர்ந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பொது இடத்தில் மது குடித்து விட்டு ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை சாரம் மார்க்கெட்டில் உள்ள கழிவறை அருகே 3 வாலிபர்கள் மது குடித்து விட்டு மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களை அருவ ருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்வதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் ரகளை செய்த 3 பேரும் தப்பியோடினர். போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேர் போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடி விட்டனர். விசாரணையில் பிடிப்பட்டவர் சாரம் வேலன் நகரை சேர்ந்த சத்திய மூர்த்தி(வயது19) மற்றும் தப்பியோடியவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாய் மற்றும் சக்தி நகரை சேர்ந்த பெரியசாமி என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுபோல் புதுவை அண்ணாசாலையில் மது குடித்து விட்டு ரகளை செய்த கண்டக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த சங்கர் என்ற பிரவீன்(25) என்பவரை ஒதியஞ்சாலை போலீசாரும், தென்னஞ்சாலை ரோட்டில் ஒரு டீக்கடை அருகே ரகளையில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுபள்ளியை சேர்ந்த வெங்கடேசன்(38) என்பவரை உருளை யன்பேட்டை போலீசாரும் கைது செய்தனர்.

    • தனியார் பள்ளி வாகன டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார். முதலியார்பேட்டை மொட்டையபடையாட்சி வீதியை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது சகோதரர் காஞ்சிபுரம் மாவட்டம் மாடபாக்கத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்.
    • முதலியார்பேட்டை கெங்கையம்மன் கோவில் அருகே வந்த போது திடீரென அரிகிருஷ்ணன் மயங்கி விழுந்தார்.

    புதுச்சேரி:

    தனியார் பள்ளி வாகன டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார். முதலியார்பேட்டை மொட்டையபடையாட்சி வீதியை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது சகோதரர் காஞ்சிபுரம் மாவட்டம் மாடபாக்கத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி இறந்து விட்டதால் கடந்த 1½ ஆண்டுகளாக பத்மாவதி வீட்டில் தங்கி ஒரு தனியார் பள்ளியில் வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    பணி முடிந்து அரிகிருஷ்ணன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். முதலியார்பேட்டை கெங்கையம்மன் கோவில் அருகே வந்த போது திடீரென அரிகிருஷ்ணன் மயங்கி விழுந்தார்.

    உடனே அவருடன் வந்த மற்ற ஊழியர்கள் அரிகிருஷ்ணனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அரிகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது சகோதரி பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காலாப்பட்டு அருகே மகள் காதல் திருமணம் செய்த வேதனையில் எலக்ட்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஆனாலும், மகள் காதல் திருமணம் செய்ததை ஆனந்தனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனந்தன் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு அருகே மகள் காதல் திருமணம் செய்த வேதனையில் எலக்ட்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது48). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 2 மகளும் உள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆனந்தனின் மூத்த மகள் வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்த வாலிபரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆனந்தன் மனவருத்தத்தில் இருந்து வந்தார். அவருக்கு அவரது மனைவி ராஜ லட்சுமி ஆறுதல் கூறி வந்தார். ஆனாலும், மகள் காதல் திருமணம் செய்ததை ஆனந்தனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனந்தன் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவருக்கு ராஜலட்சுமி பணத்தை கொடுத்து விட்டு தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜலட்சுமி கதவை உடைத்து பார்த்த போது கணவர் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து ராஜலட்சுமி காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மகள் காதல் திருமணம் செய்ததால் மனவேதனையடைந்து எலட்க்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் திரு மடம் சார்பில் புதுவை ஆதீனம் சந்திரசேகர சாமிகள் தலைமையில் 10-ம் ஆண்டாக வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி விழா நடைபெற்றது.
    • மேலும் 3 முறை கடலில் நீராடினார்கள். பின்பு சூரிய நமஸ்காரம் செய்து வணங்கினார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் திரு மடம் சார்பில் புதுவை ஆதீனம் சந்திரசேகர சாமிகள் தலைமையில் 10-ம் ஆண்டாக வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி விழா நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட அனைவரும் 7 எருக்கன் இலைகளை தலை, இரு கண்கள், இரு தோள்பட்டை, வைத்து வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி தேவியை வணங்கினர்.

    மேலும் 3 முறை கடலில் நீராடினார்கள். பின்பு சூரிய நமஸ்காரம் செய்து வணங்கினார்கள். இதில் சிவ ராமலிங்கம், கலியபெருமாள், செந்தில்நாதன், மனோகர் கூட்டேரிப்பட்டு பொன்முடி, தெள்ளார் சங்கர், சென்னை உமா அம்மையார், சென்னை ஓட்டேரி வெங்கடேசன் , கோவை காலபைரவி அம்மையார் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×