என் மலர்
புதுச்சேரி
- புதுவை மாநில சைக்கிள் போலோ சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் ஜீவானந்தம் பள்ளியில் நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சுழற்கேடயம், சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில சைக்கிள் போலோ சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் ஜீவானந்தம் பள்ளியில் நடந்தது.
போட்டியில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை ரிச்சர்ட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சுழற்கேடயம், சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை சைக்கிள் போலோ சங்க தலைவர் சத்தியராஜ், சங்க நிறுவனர் பாஸ்கரன், செயலாளர்கள் ஸ்டாலின், ஜெயராஜ், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- புதுவையில் ஜி-20 மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளை அரியா ங்குப்பம் அடுத்துள்ள சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.
- அதே போல் அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் இடையே உள்ள கடைகள் அடைக்க ப்பட்டிருந்தது. அத்தியா வசிய பொருட்கள் விற்பனை கடைகள், பால் பாக்கெட், டீ கடைகள் உள்ளிட்டவைகளும் மூடப்ப ட்டிருந்தது.
புதுச்சேரி:
புதுவையில் ஜி-20 மாநாடு தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
அதில் கலந்து கொள்ள வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளை அரியாங்குப்பம் அடுத்துள்ள சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர். அவர்களின் பாது காப்புக்காக அரியாங்குப்பம் நகரப் பகுதியில் போலீசார் கெடுபிடிகள் செய்து வருகின்றனர்.
மேலும் அரியாங்கு ப்பத்தில் இருந்து வீராம்பட்டினம் மெயின் ரோடு, காக்காயன் தோப்பு, வீராம்பட்டினம், சின்னவீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் ஏராளமான போலீசார் சாலை ஓரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் அரியாங்குப்பம் நகரப் பகுதியில் கடந்த 2 நாட்களாக கடைகள் திறக்காமல் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
அதே போல் அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் இடையே உள்ள கடைகள் அடைக்க ப்பட்டிருந்தது. அத்தியா வசிய பொருட்கள் விற்பனை கடைகள், பால் பாக்கெட், டீ கடைகள் உள்ளிட்டவைகளும் மூடப்ப ட்டிருந்தது.
இந்த நிலையில் புதுவையில் 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரியாங்குப்பம் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனால் அரியாங்குப்பம் வீராம்பட்டினம் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமான குவிந்தனர்.
வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கியிருந்த சொகுசு விடுதி செல்லும் வழியில் இந்த பகுதி அமைந்துள்ளதால் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் அனுமதி அளித்ததாக காங்கிரசார் தெரிவித்தனர்.
இருப்பினும் போலீஸ் பாதுகாப்போடு வீராம்ப ட்டினம் சந்திப்பில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக போலீசார் செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும், அலை கழிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 2007-ல் நிலுவைக் கடன் சுமார் ரூ.2176 கோடியாக இருந்தது.
- கடந்த ஆண்டு இறுதி மாதம் வரை அரசு நிர்வாகம் சுமார் ரூ.1558 கோடி வரை செலுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேசத்தின் 2023-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி நிலவரப்படி ரூ. 9 ஆயிரத்து 369 கோடி கடன் உள்ளது.
மொத்த நிலுவை தொகையில், பெரும்பாலான தொகை வெளிசந்தைக் கடன்கள் மூலம் பெறப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தேதியிட்ட பத்திரங்களை ஏலம் விட்டு மாநில மேம்பாட்டுக்காக திரட்டப்பட்டது.
ஜனவரி 20-ந்தேதி நிலவரப்படி, வெளி சந்தை கடன்கள் மூலம் ரூ. 7 ஆயிரத்து 980 கோடி கடன் நிலுவையில் உள்ளது. சிறுசேமிப்புத் திட்டத்தில் கடன் வாங்கிய தொகை ரூ.594 கோடி, திட்டமில்லாத கடன் ரூ.219 கோடி, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் பெற்ற கடன் ரூ. 149 கோடி மற்றும் பிற நிறுவனங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகை ஆகியவை உள்ளடக்கம்.
சட்டத்தின் விதிகளின்படி, வரையறுக்கப்பட்ட வரி மற்றும் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களுடன் கடன் வரம்பு 25 சதவீதத்தை கடக்கக்கூடாது.
நடப்பு நிதியாண்டில், நமது கடன் விகிதம் 24.28 சதவீதம் ஆகும். சட்டப்பேரவை கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதுவை 4-வது இடத்தில் உள்ளது.
கடந்த 2007-ல் நிலுவைக் கடன் சுமார் ரூ.2176 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இறுதி மாதம் வரை அரசு நிர்வாகம் சுமார் ரூ.1558 கோடி வரை செலுத்தியுள்ளது. இப்போது இருப்பில் உள்ள ரூ.618 கோடியை மரபுக் கடனாக திருப்பி செலுத்த வேண்டும். இந்த மொத்த நிலுவையில், ரூ.425 கோடி தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து பெறப்பட்டது.
இருப்பினும், நிலுவையில் உள்ள கடனைக் காட்டும் புள்ளிவிவரங்கள், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கடன் வரம்புகளுக்குள் புதுவை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டல், ரிசார்ட்டிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
புதுச்சேரி:
இந்தியா ஜி20 நாடுகளுக்கு தலைமை பொறுப்பேற்றுள்ளது. இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்து வருகிறது.
இதையொட்டி புதுவை மாநிலத்தில் எஸ்20 எனப்படும் அறிவியல்-20 தொடக்கநிலை கூட்டம் இன்று நடந்தது. புதுவை மரப்பாலம் 100 அடி சாலையில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பிலான இக்கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் அசுதோஷ் சர்மா தலைமை வகித்தார். ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், கொரியா, ரஷியா, அமெரிக்கா, டர்கி, இங்கிலாந்து, இந்தோனேஷியா ஆகிய 11 நாடுகளில் இருந்து 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மேலும் இந்தியாவில் உள்ள பல ஆராய்ச்சி, கல்வி நிறுவனங்களை சேர்ந்த 50 வல்லுநர்களும் பங்கேற்றனர். மாற்று எரிசக்தி, உலகளாவிய சுகாதார வசதிகள், அறிவியலுடன் சமுதாயம், கலாச்சாரத்தை இணைப்பதற்கான திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அறிவியலில் ஒருங்கிணைந்த நிரந்தர வளர்ச்சிக்கு வழி நெறிமுறை, திட்டங்களை வகுப்பது குறித்தும் ஆராயப்பட்டது. மாலை 3.30 மணியுடன் மாநாடு நிறைவு பெறுகிறது. தொடர்ந்து மாநாட்டு விவாதங்கள், தீர்மானங்கள் குறித்து நிருபர்களிடம் விளக்குகின்றனர்.
கூட்டம் நடைபெறும் மரப்பாலம் சுகன்யா கன்வென்சன் சென்டரை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், சுகன்யா கன்வென்சன் சென்டரை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டல், ரிசார்ட்டிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நகர் பகுதி முழுவதும் போலீசார் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலத்தின் எல்லை பகுதியிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். புதுவைக்கு வந்துள்ள ஜி20 பிரதிநிதிகள் நாளை ஆரோவில் செல்கின்றனர். ஆரோவில்லை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
- 75 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர் பிரதிநிதிகள் தங்கும் விடுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பேனர்களின் நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் படங்களும், வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.
புதுச்சேரி:
ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
இந்தியா முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடுகள் நடைபெற உள்ளது.
புதுவையில் நாளை (திங்கட்கிழமை) ஜி20 தொடக்க நிலை மாநாடு நடைபெறுகிறது. கூட்டத்தில் பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் பல நாட்டு பிரநிதிகள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளை தங்க வைக்க நகர பகுதியில் 2 நட்சத்திர விடுதிகளும், சின்ன வீராம்பட்டினம் பீச் ரெசார்டும் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
75 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க இன்று பிற்பகலில் பிரதிநிதிகள் வர தொடங்கினர். விமான நிலையத்தில் அவர்களை அரசு அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்று ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்க வைத்தனர்.
பிரதிநிதிகள் தங்கும் விடுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தங்கும் விடுதி, விமான நிலையம், மாநாட்டு அரங்கம் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மரப்பாலம் சுகன்யா கன்வென்சன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நாளை மாநாடு நடைபெறுகிறது. இதனால் சுகன்யா கன்வென்சன் சென்டர் போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை)மாநாட்டு பிரதிநிதிகள் புதுவையை யடுத்து தமிழக பகுதியில் அமைந்துள்ள ஆரோவில்லுக்கு செல்கின்றனர். ஆரோவில் நகரை சுற்றி பார்ப்பதுடன், அங்கு நடைபெறும் நிகழ்வுகளிலும் பங்கேற்கின்றனர்.
மாநாட்டையொட்டி ஜி20 சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கையை புதுவை அரசு எடுத்து வருகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி20 மைய கருத்தை முன்வைத்து பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
அதேபோல் புதுவை பாரம்பரிய கட்டிடங்களான சட்டமன்ற வளாகம், தலைமை செயலகம், புதிய மேரி கட்டிடம், டி.ஜி.பி. அலுவலகம், பாரதி பூங்கா, கவர்னர் மாளிகை, மற்றும் தலைவர்களின் சிலைகளும் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.
மேலும், நகர பகுதியில் முக்கிய இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. புதுவையின் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையிலும், சுற்றுலாவை வெளிப்படுத்தும் வகையிலும் நகரம் பொலிவுபடுத்தப் பட்டுள்ளது.
மாநாட்டையொட்டி நகரம் முழுவதும் பிரதிநிதிகளை வரவேற்று பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது. பேனர்களின் நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் படங்களும், வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகைகள் நடந்தது. இதில் அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையின் 37 குழுவினர் பங்கேற்றனர். மாவட்ட கலெக்டர் வல்லவன் தலைமையிலான அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.
அப்போது தீயணைப்பு வாகனம் அபாய அலாரம் அடித்தபடி அரங்கிற்குள் வந்தபோது அங்கே பணியில் இருந்த தாசில்தார் மகாதேவன் குறுக்கே வந்துவிட்டார். தீயணைப்பு வாகன டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் தாசில்தார் மீது தீயணைப்பு வாகனம் மோதி கீழே விழுந்தார்.
ஆனால், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் பாதுகாப்பு ஒத்திகையில் இருந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவிழுனர் அவரை உடனடியாக முதல் உதவி சிகிச்சையளித்து ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- காங்கிரஸ் ஒற்றுமை ஆலோசனை கூட்டம் புதுவை 45 அடி சாலையில் உள்ள செந்தில் மகாலில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
- ரூ.1¼ கோடி மட்டுமே அதிகாரிகள் செலவு செய்திருக்கிறார்கள். ரங்கசாமி மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என நினைப்பதாக கூறுகிறார்.
புதுச்சேரி:
காங்கிரஸ் ஒற்றுமை ஆலோசனை கூட்டம் புதுவை 45 அடி சாலையில் உள்ள செந்தில் மகாலில் நடைபெற்றது.
மாநில காங்கிரஸ் தலைவர் ஏவி சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
கடந்த மாதம் வரை ரேஷன் கடையில் அரிசி போடப்பட்டது. இந்த மாதம் அரிசி போடவில்லை. ஏனெனில் மத்திய அரசு அரிசியை நிறுத்தி விட்டது. அடுத்த மாதம் அரிசிக்கு பதில் பணம் போடுவதும் நிறுத்தப்படும்.
இங்கிருக்கும் சபாநாயகர் மத்திய அரசிடமிருந்து பணம் வாங்கி கொடுத்தேன். அதிகாரிகள் செலவு செய்யவிலலை என கூறுகிறார். சபாநாயகர் ரூ.1400 கோடி மத்திய அரசிடமிருந்து வந்தது என்கிறார். ஆனால் அதிகாரிகள் ரூ.27 கோடிதான் மத்திய அரசிடமிருந்து வந்ததாக கூறுகிறார்கள்.
அதில் ரூ.1¼ கோடி மட்டுமே அதிகாரிகள் செலவு செய்திருக்கிறார்கள். ரங்கசாமி மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என நினைப்பதாக கூறுகிறார். அவர் அதிகாரிகளை குறை கூறுகிறார். 2 நாட்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் பெண்களுக்கு ரூ.1000 போட்டதாக கூறுகிறார்கள். ஆனால் யாருக்கும் அந்த பணம்வந்து சேரவில்லை.
ரேஷன் கடையை திறக்காமல், மதுக்கடையை திறக்கிறார்கள். காமராஜர் தொகுதியில் நான் இருக்கும் வரை எந்த மது கடைகளும் இல்லை. ஆனால் இப்போது ரெஸ்டோ பார் திறக்கப்பட்டுள்ளது. சாமிபிள்ளை தோட்டத்தில் மதுக்கடையை திறக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் காங்கிரசார் எதி்ர்ப்பு தெரிவித்ததால் மதுக்கடை திறக்க முடியவில்லை. முத்தியால்பேட்டையில் மதுக்கடையை திறக்க முயன்ற போது முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோர் போராடியபோது அவர்கள் மீது பெயிலில் வர முடியாத வழக்கு தொடரப்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய பெண்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது மக்களுக்கான அரசாங்கமா.?
நமக்கு பணம் வரும்போது மின்கட்டணம் கட்டுவோம். ஆனால் இனி டெலிபோன் போல ப்ரிபெய்டு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மின்சாரம் நமது அரசின் சொத்து. அதற்கு யாரோ ப்ரிபெய்டு திட்டத்தை கொண்டு வருகிறார்கள். மத்திய அரசாங்கம் நமது சொத்தை திருடுகிறது.
இதையெல்லாம் மாற்ற நாம் மக்களிடம் விழி்ப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் வீட்டு கதவை தட்டி நாம் எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், காங்கிரஸ் சிப்பு அழைப்பாளர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார சுற்றுலாவாக புதுவை வருகின்றனர்.
- இதுகுறித்து சுடு களிமண் கலைஞர் முனுசாமி கூறும்போது, ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து மாணவர்கள் புதுவை வருகின்றனர்.
புதுச்சேரி:
ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார சுற்றுலாவாக புதுவை வருகின்றனர்.
இவர்கள் புதுவையில் உள்ள கல்வி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவைகள் குறித்து அறிந்து கொள்ள இந்த கல்விச் சுற்றுலா பயன்படுகிறது. அந்த வகையில் தற்போது துருக்கி நாட்டில் இருந்து 15-க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள் புதுவை வந்துள்ளனர். அவர்கள் இங்குள்ள கலை, கல்வி, கலாச்சாரம் குறித்து தெரிந்துகொள்ள இருக்கின்றனர்.
பாரம்பரிய கலையான சுடு களிமண் பொம்மை செய்யும் பயிற்சியை திருகாஞ்சியில் பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமியிடம் பயின்றனர்.
இதுகுறித்து சுடு களிமண் கலைஞர் முனுசாமி கூறும்போது, ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து மாணவர்கள் புதுவை வருகின்றனர். அவர்கள் கல்வி, கலை, கலாச்சாரம் குறித்து பல்வேறு இடங்களுக்குச் சென்று தெரிந்து கொள்கின்றனர். அந்த வகையில் அழிவின் விளிம்பில் இருக்கும் சுடு களிமண் பொம்மை செய்வது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளித்தோம் என்றார்.
- புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:- குடியரசு தின உரையில் கவர்னர் உள்நாட்டு உற்பத்தி ரூ 39 ஆயிரம் கோடி என்றும், தனிநபர் வருமானம் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 470 என கூறியுள்ளார்.
- புதுவையில் பிடிக்கப் படும் மீன்கள் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மீன்கள் இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குடியரசு தின உரையில் கவர்னர் உள்நாட்டு உற்பத்தி ரூ 39 ஆயிரம் கோடி என்றும், தனிநபர் வருமானம் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 470 என கூறியுள்ளார்.விவசாய உற்பத்தி, பால், முட்டை, பல்வேறு தொழிற்சாலைகள் உற்பத்தி, அரசு சார்பு நிறுவனங்கள் என 60 விதமான உள்நாட்டு உற்பத்திகளை கணக்கெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் 75 சதவீதம் விவசாயம் குறைந்துள்ளது. நிலங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 4-க்கு 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் 50 ஆயிரம் லிட்டர் முதல் 60 ஆயிரம் லிட்டர் வரை தான் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுவையில் பிடிக்கப் படும் மீன்கள் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை.
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மீன்கள் இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே இதிலும் தவறு உள்ளது.உள்நாட்டு உற்பத்தியில் வருமானம் இழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட துறைகள் கொடுக்கும் தவறான கணக்கை ஆராயாமல் கவர்னர் உரையில் தெரி வித்திருப்பது தவறானது. தவறான புள்ளி விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அ.தி.மு.க. சார்பில் கவர்னர் அழைத்தால் இதுகுறித்து நேரில் விளக்கமளிக்க தயாராக உள்ளோம்.
மாநில அந்தஸ்த புதுவைக்கு அவசியமான ஒன்று. சட்டமன்ற தீர்மானத்தோடு நின்று விடாமல் முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அந்தஸ்து விவகாரத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை அழைத்து சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
- வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார். முதலியார்பேட்டை பா.ஜனதா., எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி எம்.பி. தொகுதி தலைவர் இன்பசேகர், நகர மாவட்ட துணை தலைவர்கள் குமார், விஜயரங்கம், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
முதலியார்பேட்டை பா.ஜனதா., எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் 60 பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி
எம்.பி. தொகுதி தலைவர் இன்பசேகர், நகர மாவட்ட துணை தலைவர்கள் குமார், விஜயரங்கம், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி, மீனவரணி துணைத்தலைவர் நடராஜ், வர்த்தக பிரிவு தலைவர் சத்தியராஜ் விவசாய அணி அய்யனார், தொகுதி பொதுச்செயலாளர்கள் விஜயகுமார், பாலகுரு, மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கமலக்கண்ணன், திரிச்சந்திரன், ஓ.பி.சி. அணி லட்சுமி, மகளிர் அணி புவணேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- வில்லியனூர் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார். வில்லியனூர் அருகே பெருங்களூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அனந்தராமன். கூலி தொழிலாளி.
- இந்த நிலையில் அனந்தராமன் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
வில்லியனூர் அருகே பெருங்களூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அனந்தராமன். கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கமுள்ள அனந்தராமனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்து வந்தது. டாக்டரின் ஆலோசனையின் படி மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் அனந்தராமன் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனந்தராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை அரசு கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில், உழவர் திருவிழா, நாட்டுப்புற கலைவிழா, திருவள்ளுவர் தின விழா ஆகிய முப்பெரும் விழா பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் நடந்தது.
- விழாவில் தொடக்கமாக கலைமாமணி தட்சணாமூர்த்தி குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது. விழாவையொட்டி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
புதுச்சேரி:
புதுவை அரசு கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில், உழவர் திருவிழா, நாட்டுப்புற கலைவிழா, திருவள்ளுவர் தின விழா ஆகிய முப்பெரும் விழா பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் நடந்தது.
விழாவிற்கு விருதாளர் சங்க நிறுவனச்செயலாளர் தமிழ்வாணன் வரவேற்றார். சங்க பொருளாளர் ஜோதி செந்தில்கண்ணன் தலைமை தாங்கினார். கலைமாமணி நெல்லைராஜன் முன்னிலை வகித்தார். தலைவர் அரியபுத்திரி நோக்கவுரை ஆற்றினார். கலைமாமணி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் தொடக்கமாக கலைமாமணி தட்சணாமூர்த்தி குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது. விழாவையொட்டி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உழவு மாமணி விருது கருணாகரன், மறைந்த துளசி மணவாளன், டாக்டர் பாலாஜி கிருஷ்ணசாமி ஆகியோருக்கும், நாட்டுப்புற கலை ரத்னா விருது சிலம்புசேகர், சிவப்பிரகாஷ் ஆகியோருக்கும், திருக்குறள் சுடர் விருது சிறுவன் அமுதன், மாணவி சவுமியா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சகாதேவன், பரமகேது, ராஜாராம், குமார், ராமலிங்கம் மற்றும் சத்திரிய சேனா சேவகத்தின் பொறுப்பாளர்கள் வெற்றிச்செல்வன், சுவாதிகிருஷ்ணன், பெரியசாமி, ஆனந்தராஜ், சங்கரன், ரவிக்குமார் ஆகியோர் கல ந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.
விழாவில் கடந்த டிசம்பர் மாதம் புதுவை கடற்கரை பகுதியில் நடந்த கர்லாகட்டை சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குருகுல மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
- புதுவை மக்கள் நல பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-
- ஆனால் அவ்வாறு அவர்கள் அறிவித்தது போல் இதுவரை எந்தவித வளர்ச்சியும் , புதிய வளர்ச்சி காணப்படவில்லை. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ரோடு வசதிகள் மற்றும் காவி பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. இதுதான் அவர்கள் கூறிய வளர்ச்சியா?
புதுச்சேரி:
புதுவை மக்கள் நல பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 30 மற்றும் 31 தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெறுவதாக அறிவித்துள்ளனர். ஜி 20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
அவர்கள் கலந்து கொள்வ தால் புதுவை மாநிலம் பல்வேறு வகைகளில் வளர்ச்சி பெறும் என்று புதுவை மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் கவர்னர் தமிழிசை ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவ்வாறு அவர்கள் அறிவித்தது போல் இதுவரை எந்தவித வளர்ச்சியும் , புதிய வளர்ச்சி காணப்படவில்லை. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ரோடு வசதிகள் மற்றும் காவி பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. இதுதான் அவர்கள் கூறிய வளர்ச்சியா?
அதேபோல் குறிப்பிட்ட 5 இடங்களுக்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அந்த பகுதிகளிலும் தரமான சாலை வசதிகள் கிடையாது. ஏற்கனவே நகர மக்கள் பல்வேறு போக்குவரத்து நெருக்கடிகளில் உள்ளாகி வருகின்றனர். இது தினந்தோறும் வாடிக்கை யாக உள்ளது. மேலும் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலை உருவாக்கும் வகையில் சட்டத்தை மீறி பேனர்கள் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை தொடர்ந்து மக்கள் சந்தித்து வருவதால் ஜி20 மாநாடு நடைபெறும் வருகிற 30 மற்றும் 31 தேதிகளில் புதுவை மாநில அரசு அனைவருக்கும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்.
அல்லது குறைந்தபட்சம் கல்லூரி மற்றும் பள்ளிகளு க்காவது விடுமுறை அளிக்க வேண்டும். அப்பொழுது தான் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க முடியும். எனது புதுவை அரசு அனைவருக்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






