என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடியரசு தின கவர்னர் உரையில் தவறான புள்ளி விவரங்கள்-அ.தி.மு.க. குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    குடியரசு தின கவர்னர் உரையில் தவறான புள்ளி விவரங்கள்-அ.தி.மு.க. குற்றச்சாட்டு

    • புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:- குடியரசு தின உரையில் கவர்னர் உள்நாட்டு உற்பத்தி ரூ 39 ஆயிரம் கோடி என்றும், தனிநபர் வருமானம் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 470 என கூறியுள்ளார்.
    • புதுவையில் பிடிக்கப் படும் மீன்கள் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மீன்கள் இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியரசு தின உரையில் கவர்னர் உள்நாட்டு உற்பத்தி ரூ 39 ஆயிரம் கோடி என்றும், தனிநபர் வருமானம் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 470 என கூறியுள்ளார்.விவசாய உற்பத்தி, பால், முட்டை, பல்வேறு தொழிற்சாலைகள் உற்பத்தி, அரசு சார்பு நிறுவனங்கள் என 60 விதமான உள்நாட்டு உற்பத்திகளை கணக்கெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் 75 சதவீதம் விவசாயம் குறைந்துள்ளது. நிலங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 4-க்கு 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

    ஆனால் 50 ஆயிரம் லிட்டர் முதல் 60 ஆயிரம் லிட்டர் வரை தான் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுவையில் பிடிக்கப் படும் மீன்கள் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை.

    கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மீன்கள் இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே இதிலும் தவறு உள்ளது.உள்நாட்டு உற்பத்தியில் வருமானம் இழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட துறைகள் கொடுக்கும் தவறான கணக்கை ஆராயாமல் கவர்னர் உரையில் தெரி வித்திருப்பது தவறானது. தவறான புள்ளி விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    அ.தி.மு.க. சார்பில் கவர்னர் அழைத்தால் இதுகுறித்து நேரில் விளக்கமளிக்க தயாராக உள்ளோம்.

    மாநில அந்தஸ்த புதுவைக்கு அவசியமான ஒன்று. சட்டமன்ற தீர்மானத்தோடு நின்று விடாமல் முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அந்தஸ்து விவகாரத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை அழைத்து சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    Next Story
    ×