என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மதகடிப்பட்டில் உள்ள பாரததேவி ஆங்கில உயர் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • கண்காட்சிக்கு பள்ளியின் தாளாளர் இளமதியழகன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டில் உள்ள பாரததேவி ஆங்கில உயர் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு பள்ளியின் தாளாளர் இளமதியழகன் தலைமை தாங்கினார். மாநில சுயநிதி தனியார் பள்ளிகள் சங்க கூட் டமைப்பு தலைவர் ரங்கநாதன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    சங்க பொதுச்செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிவசுப்பிரமணியன், நிர்வாகிகள் சம்பத், சுப்பிரமணி, தனசெல்வம் ஆகியோர் அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர். கண்காட்சியில் தானியங்கி அறிவியல் சாதனங்கள், ரோபோ விண்வெளி மனிதன், இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கணிப்பொறியின் அடுத்த கட்ட வளர்ச்சி, விமான பயன்பாடு, குடிநீர் சுத்திகரிப்பு உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

    கண்காட்சியை அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர்கள் தேவி, சரவணன், ஆசிரியர்கள் வாசுகி, கலையரசி, சர்மிளா, தமிழரசி, ரம்யா , பிரித்திகா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • பாகூர் பழைய காமராஜ் நகர் டோபிகானாவில் இருந்து தியாகி கேசவன் நகர் வரை தார் சாலை அமைக்கப்படுகிறது.
    • இந்த பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.37.05 லட்சம் செலவில் பாகூர் பங்களா தெருவிற்கு வடிகால் வசதியுடன் கூடிய சிமெண்டு சாலை மற்றும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ.9.42 லட்சம் செலவில் தர்கா வீதியில் தார்சாலை, ரூ.17.23 லட்சம் செலவில் பாகூர் பழைய காமராஜ் நகர் டோபிகானாவில் இருந்து தியாகி கேசவன் நகர் வரை தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலை பொறியாளர் புனிதவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.என்.குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை 4 வழி சாலை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
    • இதனால் சாலைகளின் அருகில் இருந்த ஊரல் குளங்கள் மூடப்பட்டு பாதி இடத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

    புதுச்சேரி:

    புதுவை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் எம்.என்.குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை 4 வழி சாலை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.

    இதனால் சாலைகளின் அருகில் இருந்த ஊரல் குளங்கள் மூடப்பட்டு பாதி இடத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. திருவாண்டார் கோவில் பஞ்சநாதீஸ்வரர் சிவன் கோவில் அருகில் பல நூற்றாண்டுகளைக் கடந்த ஊரல் குளம் அமைந்துள்ளது.

    இந்த குளத்தின் நீர் திருவண்டார்கோவில் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறையினை போக்கி வந்தது. தற்போது இந்த குளத்தை பாதியாக மூடி மண் நிரப்பி கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

    மழைக்காலங்களில் மழை நீர் மதகடிப்பட்டு வளவனூர் வாய்க்கால், வழியாக திருபுவனை ஏரியை அடைந்து. பின்னர் திருவாண்டார் கோவில் ஊரல் குளத்தில் தண்ணீர் நிரம்பி பின்னர் வழிந்து ஆழியூர் ஏரிக்கு வாய்க்கால் மூலமாக தண்ணீர் செல்வது வழக்கம். இந்த நீர் அமைப்பு முறை கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை போக்கி சுத்தமான குடிநீர் கிடைக்க மன்னர்கள் காலத்தில் இந்த ஊரல் குளங்கள் முக்கிய பங்கு அளித்து வந்த நிலையில், தற்போது இந்த குளத்தை பாதி அளவில் முடி சாலை அமைத்து வருவது, வருகின்ற காலங்களில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    • கழிவு நீர் செல்லாமல் மண் சரிந்து வீட்டு வாசல்களில் சாக்கடை கழிவு நீர் தேங்கி இருந்தது.
    • இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால்கென்னடியிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ரோடியர்பேட்டில் உள்ள அங்குநாயகர் தோப்பு பகுதியில் ப-வடிவ வாய்க்கால் சிதைந்து கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்லாமல் மண் சரிந்து வீட்டு வாசல்களில் சாக்கடை கழிவு நீர் தேங்கி இருந்தது.

    இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால்கென்னடியிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். உடனே நகராட்சி டாக்டர் துளசிராமன் நகராட்சி செயற்பொறியாளர் சிவபா லன், உதவிப்பொறியாளர் பிரபாகரன், இளநிலைப்பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகியோரிடம் கென்னடி எம்.எல்.ஏ.இது சம்பந்தமாக தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு ஜே.சி.பி.யுடன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து சுத்தகரிப்பு பணியினை மேற்கொண்டனர்.

    மேலும் முறையாக ப-வடிவ வாய்க்கால் கட்டுமான பணியினை கூடுதலாக கட்டி கொடுக்கும் படி அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். அதனை செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    • உலகின் சக்தி வாய்ந்த நமது பாரதப் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா இந்த வருடம் பெற்றுள்ளது.
    • ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்ற கருத்தை நமது பாரத பிரதமர் மோடி மாநாட்டின் வாயிலாக உலகிற்கு உணர்த்துகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    உலகத்தில் வளரும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வழிகாட்டும் தலைமை பொறுப்பை உலகின் சக்தி வாய்ந்த நமது பாரதப் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா இந்த வருடம் பெற்றுள்ளது.

    ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்ற கருத்தை நமது பாரத பிரதமர் மோடி மாநாட்டின் வாயிலாக உலகிற்கு உணர்த்துகிறார். நம் நாடு முழுவதும் 200 இடங்களில் ஜி 20 மாநாடு நிகழ்வுகள் நடக்க உள்ள நிலையில் பாரதப் பிரதமர் புதுவை மாநிலத்தில் நடைபெற தேர்வு செய்தமைக்கு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டு நடைபெறும் மாநாட்டிற்கு வருகை தந்துள்ள 20 நாட்டின் பிரதிநிதிகளையும் 9 நாடுகளின் சிறப்பு அழைப்பாளர்களையும் வரவேற்கிறேன்.

    2000 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளுடன் வியாபார தொடர்பு கொண்டு வேதபுரி என்று அழைக்கப்பட்ட புதுவையின் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க கோவில்கள், புகழ்பெற்ற கட்டிடங்கள் மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் உலக அளவில் சிறப்பு வாய்ந்த பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தெரிந்து கொள்வதற்கு இங்கு நடைபெறும் மாநாடு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அஞ்சலகத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற அசாதிகா அம்ரித் மஹாஉத்சவ் போட்டிகளில் விவேகானந்தா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • முத்திரை வடிவமைப்பு போட்டி நடந்தது.

    புதுச்சேரி:

    அஞ்சலகத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற அசாதிகா அம்ரித் மஹாஉத்சவ் போட்டிகளில் விவேகானந்தா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இந்திய அஞ்சல் துறை சார்பில் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு இடையேயான முத்திரை வடிவமைப்பு போட்டி நடந்தது. சென்னையில் நடந்த இந்த போட்டியில் புதுவை அய்யங்குட்டிப்பாளையம் விவேகானந்தா பள்ளி சி.பி.எஸ்.இ. யில் 11-ம் வகுப்பு படித்து வரும் அமிர்தா முதலிடத்தையும், பரத் ஜெயின் 2-ம் இடத்தையும், 9-ம் வகுப்பு படித்து வரும் யுவான் செலீன் ஷாரன் வில்சன் 3-ம் இடத்தையும் வென்றனர்.

    முதல் 3 இடங்களையும் பிடித்த மாணவர்களுக்கு இந்திய அஞ்சலக த்துறை சார்பாக அஞ்சலக முதன்மைத் தலைவர் காசோலை வழங்கி மாணவர்களை கவுரவப்படுத்தினார்.

    இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் செல்வகணபதி எம்.பி பள்ளி முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் சரண்யா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    • புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் தடகள போட்டிகள் நடந்தது. இதில் 8 மண்டலங்களை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் 648 பேர் பங்கேற்றனர்.
    • 17 வயது பிரிவு ஓட்டத்தில் ஓதியம்பட்டு குளூனி பள்ளி மாணவி மதுமிதா, 14 வயது பிரிவில் பாகூர் ஆல்பா பள்ளி மாணவி ஆர்த்திகா ஈட்டி எறிதலில் சாதனை படைத்தனர். இதன் பரிசளிப்பு விழா கோரிமேட்டில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் தடகள போட்டிகள் நடந்தது.

    இதில் 8 மண்டலங்களை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் 648 பேர் பங்கேற்றனர். குண்டு எறிதலில் 14 வயது பிரிவில் காரைக்கால் நிர்மலாராணி மகளிர் பள்ளி மாணவி ஜனனிகா, 19 வயது பிரிவில் கண்ணகி அரசு பெண்கள் பள்ளி மாணவி லோகிதா சாதனை படைத்தனர்.

    19 வயது பிரிவில் தவளகுப்பம் அரசு பள்ளி மாணவி கோபிகா வட்டு எறிதல், காரைக்கால் நிர்மலாராணி பள்ளி மாணவி ஹரிபிரியா நீளம்தாண்டுதலில் சாத னை படைத்தனர். 17 வயது பிரிவு ஓட்டத்தில் ஓதியம்பட்டு குளூனி பள்ளி மாணவி மதுமிதா, 14 வயது பிரிவில் பாகூர் ஆல்பா பள்ளி மாணவி ஆர்த்திகா ஈட்டி எறிதலில் சாதனை படைத்தனர்.

    இதன் பரிசளிப்பு விழா கோரிமேட்டில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

    மாணவர்கள் எதை படிக்க வேண்டும் என விரும்புகிறார்களே அதை கொண்டுவருவதுதான் அரசின் எண்ணம். இதற்கான செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம். தனியார் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்குகிறோம். நன்றாக படித்தால் நல்ல சிந்தனைகள் வளரும். அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதத்திற்குள் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப் படும்.

    இவ்வாறு அவர் பேசினார். அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் வாழ்த்தி பேசினார்.

    • புதுவை முதலியார்பேட்டை மரப்பாலம் அருகே சுகன்யா கன்வென்சன் சென்டரில் ஜி20 நாடுகளின் அறிவியல் தொடக்கநிலை கூட்டம் நடந்தது.
    • மாநாட்டிற்கு வந்த பிரதிநிதிகள் அனைவரையும் இந்த தேசியக்கொடிகளின் அணிவகுப்பு வெகுவாக கவர்ந்தது. பலரும் கொடிகள் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை மரப்பாலம் அருகே சுகன்யா கன்வென்சன் சென்டரில் ஜி20 நாடுகளின் அறிவியல்-20 தொடக்கநிலை  கூட்டம் நடந்தது.

    கூட்ட அரங்குக்கு வெளியே ஜி20 நாடுகளின் தேசியக் கொடிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள மேடையும் அமைக்கப்பட்டிருந்தன.

    கூட்டத்திற்கு வந்த பிரதிநிதிகள் அனைவரையும் இந்த தேசியக்கொடிகளின் அணிவகுப்பு வெகுவாக கவர்ந்தது. பலரும் கொடிகள் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

     9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் அந்த கொடிகளின் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரன் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கொடியில் முன்பு நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்தனர்.

    • மகாத்மா காந்தியின் நினைவுநாள் புதுவை அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்களின் தேச பக்திப் பாடல்கள் இசைக்க ப்பட்டன. தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    மகாத்மா காந்தியின் நினைவுநாள் புதுவை அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.

    இதனையொட்டி புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ. சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, டி.ஜி.பி. மனோஜ்குமார் லால், கலெக்டர் வல்லவன் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்களின் தேச பக்திப் பாடல்கள் இசைக்க ப்பட்டன. தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • புதுவை மணக்குள விநாயகர் கோவில் உள்பு றத்தில் மூலவரை பார்த்த வண்ணம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. சண்டிகேஸ்வரர் கும்ப சென்டர் என பெயர் பெற்றவர்.
    • சண்டிகேஸ்வரர் சன்னதி கோபுரம் 45 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டு கவச விமானம் பணி நிறைவடைந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் கோவில் உள்பு றத்தில் மூலவரை பார்த்த வண்ணம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

    சண்டிகேஸ்வரர் கும்ப சென்டர் என பெயர் பெற்றவர். இவர் விநாயகரை பார்த்த வண்ணம் அமர்ந்திருப்பார். இவர் பக்தர்களுக்கு பூர்விக பூண்ணிய பலனை கொடுப்பவர். பக்தர்கள் கோவிலுக்கு வரும் பொழுது மணக்குள விநாயகரை தரிசித்து விட்டு கடைசியாக சண்டிகேஸ்வரரிடம் வந்து அவரை வணங்கி விட்டு உள்ளங்கையில் 3 முறை தட்டி விட்டு செல்வர்.

    இவ்வாறு செய்தால் விநாயகரிடம் விடுத்த வேண்டுதல் மற்றும் பூஜை பலனை முழுவதுமாக சண்டிகேஸ்வரர் பக்தர்களுக்கு வாங்கி கொடுப்பார் என்பது ஐதீகம்.

    சண்டிகேஸ்வரர் சன்னதி கோபுரம் 45 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டு கவச விமானம் பணி நிறைவடைந்துள்ளது.

    இதன் கும்பாபிஷேகம்  1-ந் தேதி 11 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • வில்லியனூர் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த நிலையில் வழக்கம் போல் லோகநாதன் மது குடித்துவிட்டு வந்தார். இதனை எழிலரசியும், வளப்பு மகன் ராஜ்குமாரும் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த லோகநாதன் மனைவியையும், வளர்ப்பு மகனையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு திட்டினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது52). கட்டிட தொழிலாளி. இவருக்கு எழிலரசி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் எழிலரசியின் தங்கை மகனை தத்து பிள்ளையாக வளர்த்து வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக லோகநாதன் கட்டிட வேலை முடிந்ததும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை எழிலரசி கண்டித்து வந்தார். ஆனாலும், லோகநாதன் மது பழக்கத்தை கைவிடவில்லை.

    இந்த நிலையில் வழக்கம் போல் லோகநாதன் மது குடித்துவிட்டு வந்தார். இதனை எழிலரசியும், வளப்பு மகன் ராஜ்குமாரும் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த லோகநாதன் மனைவியையும், வளர்ப்பு மகனையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு திட்டினார்.

    இதையடுத்து எழிலரசியும், ராஜ்குமாரும் வீட்டின் பின்புறத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அந்த நேரத்தில் லோகநாதன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் ஏணியை போட்டு தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட எழிலரசியும், ராஜ்குமாரும் ஏணியை பறித்து மறைத்து வைத்து விட்டார்கள்.

    ஆனாலும் நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பிறகு லோகநாதன் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி எழிலரசி கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை மாநில சைக்கிள் போலோ சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் ஜீவானந்தம் பள்ளியில் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சுழற்கேடயம், சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில சைக்கிள் போலோ சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் ஜீவானந்தம் பள்ளியில் நடந்தது.

    போட்டியில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை ரிச்சர்ட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சுழற்கேடயம், சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.

    விழா ஏற்பாடுகளை சைக்கிள் போலோ சங்க தலைவர் சத்தியராஜ், சங்க நிறுவனர் பாஸ்கரன், செயலாளர்கள் ஸ்டாலின், ஜெயராஜ், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×