என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.63.71 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிசெந்தில் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    சாலை அமைக்கும் பணியை செந்தில் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.63.71 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிசெந்தில் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • பாகூர் பழைய காமராஜ் நகர் டோபிகானாவில் இருந்து தியாகி கேசவன் நகர் வரை தார் சாலை அமைக்கப்படுகிறது.
    • இந்த பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.37.05 லட்சம் செலவில் பாகூர் பங்களா தெருவிற்கு வடிகால் வசதியுடன் கூடிய சிமெண்டு சாலை மற்றும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ.9.42 லட்சம் செலவில் தர்கா வீதியில் தார்சாலை, ரூ.17.23 லட்சம் செலவில் பாகூர் பழைய காமராஜ் நகர் டோபிகானாவில் இருந்து தியாகி கேசவன் நகர் வரை தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலை பொறியாளர் புனிதவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×