என் மலர்
புதுச்சேரி
- புதுவை கால்பந்து சங்கம் 2022-23 ஆண்டிற்கான லீக் சாம்பியன்ஷிப் போட்டி தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வரை நடைபெற்றது.
- இதில் ஜேப்பியார் அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்று கோப்பை வென்றது. 2-வது இடத்தை குப்புராஜ் அணியும், ஈகல்ஸ் அணி 3-வது இடத்தையும் பிடித்தது.
புதுச்சேரி:
புதுவை கால்பந்து சங்கம் 2022-23 ஆண்டிற்கான லீக் சாம்பியன்ஷிப் போட்டி தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வரை நடைபெற்றது.
போட்டியில் ஆண்கள் பிரிவில் மொத்தம் 34 அணிகள் பங்கேற்றன. இதில் 14 பேர் ஏ பிரிவு அணிகளாகவும, மற்றும் 20 பேர் பி பிரிவு அணிகளாகவும் பிரிக்கப்பட்டு விளையாடி வந்தனர்.
இதற்கான ஏ பிரிவு இறுதி போட்டியில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் அணியும், குப்புராஜ் விளையாட்டு கழகமும் விளையாடியது. இதில் ஜேப்பியார் அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்று கோப்பை வென்றது. 2-வது இடத்தை குப்புராஜ் அணியும், ஈகல்ஸ் அணி 3-வது இடத்தையும் பிடித்தது.
பி பிரிவில் அர்சினல் விளையாட்டு கழகம் முதலிடமும், 2-வது இடத்தில் ஆல்வார் விளையாட்டு கழகம் 3-வது இடத்தை சிட்டி-5 அணி பிடித்தது. இதன் மூலம் பி பிரிவில் வென்ற 3 அணிகளும் ஏ பிரிவுக்கு தகுதியாகியுள்ளது. மகளிருக்கான போட்டியில் 6அணிகள் மோதின. இதில் செல்டிக் குயின்ஸ் முதலிடமும், ஐ.ஜி.ஏ.எஸ்.இ. 2-வது இடத்தையும், அண்ணா அணி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
சப்- ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன. இதில் ஜேப்பியார் அணி முதலிடமும், கிருஷ்ணன் மெமோரியல் அணி 2-வது இடமும் பிடித்தது. இதற்கான பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
புதுவை கால்பந்து கழக சேர்மன் ஜான்குமார்
எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் விவிலியன் ரிச்சர்ட்ஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சங்க தலைவர் நெஸ்டர், செயலாளர் தனசேகர், துணைத் தலைவர்கள் ராஜேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, துணைச்செயலாளர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமரன், கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், வினோத்குமார், முனியாண்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெப்பகுளம் அருகில் மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா உருவ சிலை அமைக்கப்படுகிறது.
- ஏற்பாடுகளை மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன் செய்திருந்தார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெப்பகுளம் அருகில் மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா உருவ சிலை அமைக்கப்படுகிறது.
இதற்கான பூமிபூஜை விழா நடந்தது. அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில்மா அ.தி.மு.க. அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் திருநாவுக்கரசு, சாரம் கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள், கணேசன், ஜெய.சேரன், காந்தி, நாகமணி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ, மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், நகர தலைவர் கணேஷ், தொகுதி செயலாளர்கள் ராஜா, சம்பத், பொதுக்குழு உறுப்பினர் பாலன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் அன்பழகன். துணை செயலாளர்கள்கணபதி, சுந்தரமூர்த்தி, விவசாய அணி இணைச் செயலாளர் ராஜா, மாநில மீனவரணி இணைச் செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர் ராஜவேல், மாவட்ட பிரதிநிதி செங்கேணி, வார்டு செயலாளர்கள் பன்னீர் செல்வம், ஜெயக்குமார், கார்த்தி,கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- புதுவை மனிதநேய இடுகாட்டு புனித பணியா ளர்கள் நல சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
- தேனீ.ஜெயக்குமார் புனித பணியாளர்க ளுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு உருவாக்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை மனிதநேய இடுகாட்டு புனித பணியா ளர்கள் நல சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் புனித பணியாளர்களுக்கு அடை யாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க தலைமை ஆலோசகர் மேகராஜ், கௌரவத் தலைவர் ஆனந்தராஜ், மாநில தலைவர் ராமு, பொதுச் செயலாளர் காளிதாஸ், பொறுப்பாளர்கள் உலக நாதன், ஜெகதீசன், கலைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் புனித பணியாளர்க ளுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு உருவாக்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பணியாளர்களுக்கு இலவச வீடு, மனைப்பட்டா, நலத்திட்ட உதவிகளை வழங்கவும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
- புதுவையில் சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனங்களில் உலா வருவதை பெரிதும் விரும்புகின்றனர்.
- இந்த பரிந்துரையை ஏற்று புதுவை அரசு, வாடகை இருசக்கர வாகனங்களுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை எடுத்தது.
புதுச்சேரி:
புதுவையில் சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனங்களில் உலா வருவதை பெரிதும் விரும்புகின்றனர்.
இவர்களுக்காக அங்கீ காரமின்றி பலர் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுகின்றனர். இதனால் பல சமூக விரோத செயல்களும் அரங்கேறின. இதையடுத்து இருசக்கர வாகனங்களை அங்கீகரித்து கருப்பு நிறத்தில் நம்பர் பிளேட், மஞ்சள் நிற எழுத்துக்களுடன் அனுமதி அளித்து வரி வசூலிக்கலாம். இதனால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என போக்குவரத்து போலீசார் அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
இந்த பரிந்துரையை ஏற்று புதுவை அரசு, வாடகை இருசக்கர வாகனங்களுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை எடுத்தது. இருசக்கர வாகன வாடகை நிலையங்கள் நடத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்தது.
இருசக்கர வாகன வாடகை நிலையம் நடத்த குறைந்த பட்சம் 5 வாகனங்கள் வைத்திருக்கவேண்டும். தனி பார்க்கிங் வசதி இடம் இருக்க வேண்டும். ஒரு வாகனத்திற்கு ஆண்டிற்கு ரூ.1000 அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி இருசக்கர வாடகை வாகனங்களுக்கு உரிமம் வழங்கும் பணியை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில்,
அரசின் விதிகளுக்கு உட்பட்டு இருசக்கர வாகனங்கள் வாடகை விட விரும்புவோர், வட்டார போக்குவரத்து அலுவ லகத்தில் விண்ணப்பித்தால், ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படும்.
அரசின் உரிமமின்றி, வாடகைக்கு விடப்படும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.
- புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் தலைமையில் நடைபெற்றது.
- தொகுதி செயலாளர்கள் செந்தில் என்கிற குமாரவேல் ராமசந்திரன், ரத்தினக்குமார், கலைவாணி பூங்குழலி, அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவை த்தலைவர் சுப்பிரமணியன், இணைச்செயலாளர் லாவண்யா, மகளிரணி செயலாளர் காமாட்சி, துணைச்செயலாளர் தமிழரசி, அ.ம.மு.க. நிர்வாகிகள் ரகுபதி, ஆனந்தன், ஜெயலலிதா பேரவை செயலாளர் காண்டீபன், தொழிற்சங்க பேரவை செயலாளர் பிரகாஷ், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், மாணவரணி செயலாளர் ஜெகதீஷ், தொகுதி செயலாளர்கள் செந்தில் என்கிற குமாரவேல் ராமசந்திரன், ரத்தினக்குமார், கலைவாணி பூங்குழலி, அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திண்டிவனம் அருகே உள்ள வெளியனூர் எரலி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் ஊர் ஊராக திருவிழா மற்றும் கண்காட்சி போன்ற பொது இடங்களில் ராட்டினம் போட்டு வேலை செய்கிறார்.
- அதற்கு ராட்டினம் அமைப்பவர்கள் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிதான் ராட்டினம் அமைக்கிறோம் என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் மற்றும் சாந்த குமார் தகாதவார்த்தைகளால் திட்டினார்.
புதுச்சேரி:
திண்டிவனம் அருகே உள்ள வெளியனூர் எரலி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் ஊர் ஊராக திருவிழா மற்றும் கண்காட்சி போன்ற பொது இடங்களில் ராட்டினம் போட்டு வேலை செய்கிறார்.
இந்த நிலையில் புதுவை கதிர்காமம் செடலை முன்னிட்டு ஏழாத்தான் குளம் என்ற பகுதியில் ராட்டினம் அமைப்பதற்காக வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கிஷோர் மற்றும் அவரது நண்பர் சாந்தகுமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் எங்களுக்கு தெரியாமல் எப்படி ராட்டினம் போடலாம் என கேட்டனர். அதற்கு ராட்டினம் அமைப்பவர்கள் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிதான் ராட்டினம் அமைக்கிறோம் என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் மற்றும் சாந்த குமார் தகாதவார்த்தைகளால் திட்டினார். மேலும் பீர்பாட்டிலை உடைத்து சாந்த குமார் ராட்டினம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் கிஷோர் கார்த்திக்கை குத்தினார்.
எங்களை மீறி ராட்டினம் அமைத்தால் உங்களை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். ராட்டினம் அமைப்பவர்கள் திருப்பி தாக்கியதில் கிஷோர் மற்றும் சாந்த குமாருக்கு காயம் ஏற்பட்டது. பீர் பாட்டிலால் குத்தியதில் காயமடைந்த தினேஷ் குமாரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமத்தித்தனர்.
இதுகுறித்து எரலி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை மேட்டுப்பாளையத்தில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சரஸ்வதி அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். சசிகலா சேதராப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். காத்தவராயனுக்கு குடி பழக்கம் இருந்து வந்தது.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையத்தில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை முத்திரையார் பாளையம் கோவிந்தன் பேட் அணைக்கரை வீதியை சேர்ந்தவர் காத்தவராயன் கட்டிட தொழிலாளி இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு சசிகலா, திவ்யா என்ற மகளும் ராஜகோபால் என்ற மகனும் உள்ளனர். சரஸ்வதி அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். சசிகலா சேதராப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். காத்தவராயனுக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். சில சமயங்களில் வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சசிகலா கல்லூரிக்கு சென்று விட்டார். அவரது தாய் வேலைக்கு சென்றிருந்தார். சசிகலாவின் தங்கை திவ்யா தம்பி ராஜகோபால் பள்ளி சென்று விட்டனர். காத்தவராயன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். சசிகலாவின் பாட்டி புஷ்பா காத்தவராயன் வீட்டுற்கு வந்து காத்தவராயனை பார்த்து சென்றுள்ளார். மாலை 3.30 மணியளவில் சசிகலா கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது படுக்கையறையில் உள்ள கொக்கியில் காத்தவராயன் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா தனது உறவினர்.
தமிழ்வேந்தன் மற்றும் அக்க்ம் பக்கத்தினர் உதவியுடன் காத்தவராயனை மீட்டு கதிர்காமம் அரசு மருந்துவகல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து என்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் காத்தவராயன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் குடி போதையில் இறந்தாரா அல்லது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவில்லை. இது குறித்து காத்தவராயனின் மகள் சசிகலா மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை சுற்றுலாத்துறை வளர்ச்சி கழக தலைவர் அருண் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் புதுவை சுற்றுலா வளர்ச்சிக்கழக நிரந்தர ஊழியர்களுக்கு அகவிலைப்படி 41 சதவீதம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
- அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது ஊழியர்களின் வாழ்வில் வெளிச்சத்தையும் நம்பிக்கை யும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சுற்றுலாத்துறை வளர்ச்சி கழக தலைவர் அருண் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் புதுவை சுற்றுலா வளர்ச்சிக்கழக நிரந்தர ஊழியர்களுக்கு அகவிலைப்படி 41 சதவீதம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அகவிலைப்படி 148 சதவீதத்திலிருந்து 189 சதவீதமாக உயர்த்தி ஜனவரி மாத சம்பளத்தில் சேர்த்து ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கு சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் விஜயராகவன் அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது ஊழியர்களின் வாழ்வில் வெளிச்சத்தையும் நம்பிக்கை யும் ஏற்படுத்தியுள்ளது.
அதனால் ஒட்டுமொத்த ஊழியர்களின் சார்பாக முதல்-அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- வில்லியனூர் கொம் பாக்கம் வார்டுக்கு உட்பட்ட பாப்பாஞ்சாவடி பகுதியில் ஓட்டாம்பாளையம் சாலையில் கழிவு நீர் செல்லும் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் சேதமடைந்தது.
- தகவல் அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. அந்த பகுதியில் சேதமடைந்த சிமெண்ட் சிலாப்புகளை அகற்றிவிட்டு, புதிதாக நடைப்பாதை அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் கொம் பாக்கம் வார்டுக்கு உட்பட்ட பாப்பாஞ்சாவடி பகுதியில் ஓட்டாம்பாளையம் சாலையில் கழிவு நீர் செல்லும் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் சேதமடைந்தது.
இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். தகவல் அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. அந்த பகுதியில் சேதமடைந்த சிமெண்ட் சிலாப்புகளை அகற்றிவிட்டு, புதிதாக நடைப்பாதை அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
இந்த பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆய்வு செய்து, பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். நிகழ்சியில் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, துணை செயலாளர் அங்காளன் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.
- நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி 2022-2023 பட்ஜெட் உரையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்த முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1,64,847 பயனாளிகள் பயன்பெற்று வந்த நிலையில் ஜனவரி 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை நிலுவையில் உள்ள 16,769 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2023 ஜனவரி மாதம் முதல் பயன் பெற இருக்கின்றனர் இதன் தொடர்ச்சியாக தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட 350 புதிய பயனாளிகளுக்கு நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.
இவ்விழாவில் மகளிர் மற்றும் மேம்பாட்டு துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- குடிநீரில் உப்புத்தன்மை அதிகளவில் உள்ளதாகவுப், இவை குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் உகந்ததாக இல்லை அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் குற்றம் சாட்டினர்.
- எனவே ஏற்கனவே அறிவித்த கூட்டு குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட உத்திரவாகினிபேட், பீமாராவ் நகர், பெரியபேட், புதுப்பேட், எஸ்.எஸ் நகர் ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் உப்புத்தன்மை அதிகளவில் உள்ளதாகவுப், இவை குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் உகந்ததாக இல்லை அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் குற்றம் சாட்டினர்.
எனவே ஏற்கனவே அறிவித்த கூட்டு குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மணவெளி உத்தரவாகினிபேட் பகுதியில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை மணவெளிபகுதியில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அறிவித்த உத்தரவாகினி பேட் பகுதியில் திட்டம் தொடங்கப்படவில்லை. இந்தக் கூட்டு குடிநீர் திட்டத்தை உத்தரவாகனிப்பேட் பகுதியில் செயல்படுத்தி சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று காலை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வில்லியனூர் தொகுதி செயலாளர் தமிழ்வளவன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், விடுதலை சிறுத்தைகள் தமிழ்நாடு, புதுவை அமைப்பு செயலாளர் தலையாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் காலி குடங்கள், பானைகளை உடைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தமிழ்மாறன், செல்வநந்தன், அரிமா தமிழன் உள்ளிட்ட மாநில தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வில்லியனூர் தொகுதி பொருளாளர் தமிழரசன் நன்றி கூறினார்.
- புதுவை மற்றும் தமிழ்நாடு மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.
- இப்போட்டியில் புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை மற்றும் தமிழ்நாடு மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் 17 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் அப்பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி அஷிதா முதல் பரிசும், 13 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் 7-ம் வகுப்பு மாணவிகள் பிரஜூஷா மற்றும் சின்மயா ஆகியோர் 2-ம் பரிசும் பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மற்றும் பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.






