என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கூட்டமைப்பினர் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
    • ரேசன் கடைகளை ஒரு மாதத்திற்குள் திறக்காவிட்டால் ஆயிரக்கண்க்கான பெண்களுடன் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.

    புதுச்சேரி:

    அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ரேஷன்கடைகளை திறந்து இலவச அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க வலியுறுத்தி இன்று குடிமைப்பொருள் வழங்கல்துறை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    இதற்காக சாரம் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். அங்கிருந்து ஜனநாயக மாதர் சங்க செயலாளர் இளவரசி தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தை அகில இந்திய மாதர் சங்க செயற்குழு உறுப்பினர் சுதா சுந்தர்ராமன் தொடங்கி வைத்தார்.

    ஊர்வலத்தில் இந்திய தேசிய மாதர் சங்க செயலாளர் அமுதா, தலித் பெண்கள் கூட்டமைப்பு சரளா, சமம் பெண்கள் சுய சார்பு இயக்கம் சிவகாமி, ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் முனியம்மாள், சத்யா, உமா, ஹேமலதா உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

    ஊர்வலம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சாலையில் அமர்ந்து பெண்கள் கூட்டமைப்பினர் கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் பெண்கள் போராட்டத்திற்கு ஒரு பெண் போலீசார்கூட இல்லை. இதனால் பெண்கள் மீது கை வைத்ததால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம், தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து கூட்டமைப்பினர் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். வேண்டாம், வேண்டாம் ரெஸ்டோ பார் வேண்டாம், வேண்டும், வேண்டும் ரேஷன்கடைகள் வேண்டும் என கோஷமிட்டனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராம்ஜி, பிரபுராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளவரசி நிருபர்களிடம் கூறும்போது, ரேசன் கடைகளை ஒரு மாதத்திற்குள் திறக்காவிட்டால் ஆயிரக்கண்க்கான பெண்களுடன் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • உலக புற்றுநோய் தினம் வருகிற 4-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உழவர்கரை நகராட்சி சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்புரவு பணியாளர்களுக்கு புற்று நோய் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய சீருடைகள் வழங்கப்பட்டது.
    • 30 வயதை கடந்த இருபாலினரும் புற்றுநோய் சோதனை செய்ய வேண்டும். வாய், மார்பகம், கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் சிகிச்சை பெறலாம் என்றார்.

    புதுச்சேரி:

    உலக புற்றுநோய் தினம் வருகிற 4-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

    உழவர்கரை நகராட்சி சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்புரவு பணியாளர்களுக்கு புற்று நோய் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய சீருடைகள் வழங்கப்பட்டது.

    பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சீருடைகளை வழங்கி பேசும்போது, புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் முக்கியம். நகராட்சி பணியாளர்களின் பங்கு இதில் இன்றியமையாதது. அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

    ஆரம்ப நிலையில் புற்றுநோயை கண்டறிந்தால் அதை ஒழிக்கலாம். 30 வயதை கடந்த இருபாலினரும் புற்றுநோய் சோதனை செய்ய வேண்டும். வாய், மார்பகம், கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் சிகிச்சை பெறலாம் என்றார்.

    நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர்கள் முரளி, ரகுநாதன், நோடல் அதிகாரி ரமேஷ், சித்ராதேவி, திட்ட அதிகாரி துரைசாமி, நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மற்றும் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

    • ரெட்டிச்சாவடி அருகே தமிழகப்பகுதியான மேல்அழிஞ்சிப்பட்டு கிராமத்தில், சித்த விநாயகர், பிரகதீஸ்வரர், திரவுபதி அம்மன், முத்தாலம்மன், பொறையாத்தம்மன், கெங்கை அம்மன், ஆஞ்ச நேயர், ஆகிய கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.
    • விழாவில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மிருத்சங் கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம் முதற்கால யாக பூஜை திரவ்யாஹீதி, பூர்ணாஹூதி நடத்தி தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ரெட்டிச்சாவடி அருகே தமிழகப்பகுதியான மேல்அழிஞ்சிப்பட்டு கிராமத்தில், சித்த விநாயகர், பிரகதீஸ்வரர், திரவுபதி அம்மன், முத்தாலம்மன், பொறையாத்தம்மன், கெங்கை அம்மன், ஆஞ்ச நேயர், ஆகிய கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.

    இதற்கான கும்பாபிஷேக விழா 8 மணி அளவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதற்கால யாக பூஜைகள் தொடங்கியது. விழாவில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மிருத்சங் கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம் முதற்கால யாக பூஜை திரவ்யாஹீதி, பூர்ணாஹூதி நடத்தி தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது.

    8.30 மணி முதல் 11. 30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 2-ம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 3-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்சாஹூதி, த்ரவ்யாஹீதி, பூர்ணாஹூதி,

    தீபாராதனை நடைபெறுகிறது.

    8.00 மணிக்கு சித்த விநாயகர், பிரகதீஸ்வரர், திரவுபதி அம்மன், முத்தாலம்மன், பொறையாத்தம்மன், கெங்கை அம்மன், ஆஞ்சநேயர் கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம், நடைபெறுகிறது.

    7 மணி அளவில் சுவாமி திருவீதிஉலா காட்சியும் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.

    • ஒட்டுமொத்த இந்தியாவும், உலகமும் எதிர் நோக்கி இருந்த பட்ஜெட்டை சிறப்பாக நிதி மந்திரி தாக்கல் செய்துள்ளார். மாநில அரசுக்கு வழங்கும் வட்டியில்லா கடன் இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்படும்.
    • சுற்றுலாத்துறை உருவாக்க தனி செயலி, அஞ் சலகத்தில் முதியோருக்கு வைப்பு நிதி வரம்பு 15 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தியது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    சிறப்பான பட்ஜெட்

    ஒட்டுமொத்த இந்தியாவும், உலகமும் எதிர் நோக்கி இருந்த பட்ஜெட்டை சிறப்பாக நிதி மந்திரி தாக்கல் செய்துள்ளார். மாநில அரசுக்கு வழங்கும் வட்டியில்லா கடன் இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்படும்.

    ரெயில்வே துறைக்கு 2 லட்சம் கோடி, டிவி,செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதி வரி குறைப்பு, மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் அகற்றும் திட்டத்திற்கு கூடுதல் நிதி, 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி, அனைத்து மாநில பொருட்களும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப் படும். 7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    சுற்றுலாத்துறை உருவாக்க தனி செயலி, அஞ் சலகத்தில் முதியோருக்கு வைப்பு நிதி வரம்பு 15 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தியது. ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு 4.5 லட்சத்திலிருந்து 9 லட்சம் ஆக உயர்த்தியது, நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி, 2020 ஆம் ஆண்டு வாகன புகை இயக்கத்தை பூஜ்ஜியமாக நடவடிக்கை.

    நாடு முழுவதும் புதிய நர்சிங் கல்லூரிகள், தோட்டக்கலை வளர்ச்சி, புதுவை மாநிலத்திற்கு ஜி.எஸ்.டி. நிதி ஒதுக்கீடு,போன்ற பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

    வரலாற்று சிறப்பு மிக்க அனைத்து தரப்பு மக்கள் வளர்ச்சி யை உள்ளடக்கிய பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மிக சிறப்பான பட்ஜெட்.

    இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

    • புதுவையில் நிலையான நீர் மேலாண்மைக்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிப்பதற்கு ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய ஜலசக்தி மந்திரியிடம் கேட்டு கொண்டார்.
    • புதுவை, காரைக்கால் ஆகிய 2 பகுதிகளும் மழை அதிகம் பெய்யும் பகுதிகளாகத்தான் உள்ளன. ஆனால் மழைநீரை தேக்கி வைப்பதற்கான சேமிப்பு பகுதிகள் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் நிலையான நீர் மேலாண்மைக்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிப்பதற்கு ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய ஜலசக்தி மந்திரியிடம் கேட்டு கொண்டார்.

    இதனையடுத்து ஜலசக்தி அமைச்சர் உத்தரவின்பேரில் மத்திய நீர் ஆணையம் டெல்லி இயக்குனர் அபிஷேக் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் 2 நாள் பயணமாக புதுவை வந்தனர். அவர்கள் வைத்திலிங்கம் எம்.பி.யை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.

    அவர்களிடம் வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது:-

    புதுவை, காரைக்கால் ஆகிய 2 பகுதிகளும் மழை அதிகம் பெய்யும் பகுதிகளாகத்தான் உள்ளன. ஆனால் மழைநீரை தேக்கி வைப்பதற்கான சேமிப்பு பகுதிகள் இல்லை. இதனால் புதுவை, காரைக்காலில் பெய்யும் மழையும், புதுவை, காரைக்காலிற்கு தமிழக ஆறுகளில் இருந்து வரும் நீரும் வீணாக கடலில் கலந்து விடுகின்றது.

    மழைக்காலத்தில் ஆற்று நீரை அணையில் இருந்து திறந்து விடுகின்றனர். ஆனால் கோடைக்காலத்தில் கேட்டாலும் தருவதில்லை. மேலும் உங்கள் பங்கை தந்தாலும் எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றும் கேட்கின்றனர். இதனால் தமிழக அணைகளில் இருந்து புதுவை-காரைக்காலிற்கு உரிய பங்கை கொடுக்க குழாய் அமைக்கலாம் அல்லது மாற்று வழி காண வேண்டும்.

    புதுவை நகரப்பகுதியில் வழங்கப்படும் குடிநீரில் கரைந்த திடப்பொருள்கள் அளவு 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. எனவே தரமான குடிநீர் வழங்க மழைநீரை தேக்கி வைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும். இந்த திட்டத்தை புதுவையை ஒட்டியுள்ள தமிழகத்துடன் இணைத்தும் தயாரிக்கலாம், அல்லது புதுவை-காரைக்காலிற்கு என்று தனியாகவும் தயாரிக்கலாம்.

    விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வரும் மழை காலத்திற்குள் குழாய் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின்போது மத்திய நீர் ஆணைய சென்னை இயக்குனர் தங்கமணி, துணை இயக்குனர் பன்னீர்செல்வம், டெல்லி துணை இயக்குனர் தர்மேந்திர சிங், புதுவை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், உதவி பொறியாளர் திருஞானம், பாராளுமன்ற உறுப்பினரின் தனி உதவியாளர் வினோத் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சபையில் இரங்கல் தீர்மானம், பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது.
    • குளிர்கால கூட்டம் என தெரிவிக்கப்பட்டாலும், சபை நாளை ஒரு நாள் மட்டுமே நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால் புதுவை சட்டசபை நாளை கூட்டப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.

    சபையில் இரங்கல் தீர்மானம், பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது. குளிர்கால கூட்டம் என தெரிவிக்கப்பட்டாலும், சபை நாளை ஒரு நாள் மட்டுமே நடைபெறும். இதனிடையே மத்திய அரசு புதுவைக்கு 2023-24ம் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.

    புதுவை சட்டசபையில் கடந்த 12 ஆண்டாக புதுவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

    இதற்காக மாநில திட்டக்குழுவை கூட்ட துறைவாரியாக ஒதுக்கப்பட வேண்டிய நிதி விபரங்களை பெற்று ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு வரைவு பட்ஜெட்டை மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    • புதுவை மாநிலத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரியின் இழப்பீடை சரிசெய்ய ரூ.ஆயிரத்து 250 கோடி, 7-வது சம்பளக்குழு பரிந்துரையின் நிலுவைத்தொகை ரூ.150 கோடி உட்பட பல திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடி மத்திய அரசு ஒதுக்கியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    • உணவு தானிய விநியோகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி, பழங்குடியின மக்கள் பாதுகாப்புக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரியின் இழப்பீடை சரிசெய்ய ரூ.ஆயிரத்து 250 கோடி, 7-வது சம்பளக்குழு பரிந்துரையின் நிலுவைத்தொகை ரூ.150 கோடி உட்பட பல திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடி மத்திய அரசு ஒதுக்கியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தனிநபர் வருமான உச்சவரம்பை உயர்த்தியது வரி செலுத்துவோரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. வேளாண் மக்களின் நலனையொட்டி, கால்நடை வளர்ப்பு, பால் வளம், மீன்வளத்துறை மேம்பாட்டுக்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு பெரிதும் பயனளிக்கும்.

    உணவு தானிய விநியோகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி, பழங்குடியின மக்கள் பாதுகாப்புக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 157 மருத்துவ கல்லூரிகளுக்கு அருகில் செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என்பது உட்பட பல சிறப்பம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளது. அனைவருக்கும், அனைத்தும் என்ற வகையில் சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பட்ஜெட்டால் பயனடைவர். சிறந்த பட்ஜெட்டை வழங்கிய பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் ஆகியோருக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவையில் வெள்ள பாதிப்பை தவிர்க்க அனைத்து நீர்நிலைகளையும் புனரமைக்க ரூ.378 கோடியே 50 லட்சம் வேண்டும் என மத்திய ஜல் சக்தி துறையிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் கோரியிருந்தார்.
    • மழை காலங்களில் வீடூர் அணையில் வெளி யேற்றப்படும் தண்ணீரால் நோணாங்குப்பம், சுண்ணாம்பாறு பகுதியில் வெள்ளப்பெருக்கை தடுக்க 21 கி.மீ. கரையில் சாலை வசதி செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் வெள்ள பாதிப்பை தவிர்க்க அனைத்து நீர்நிலைகளையும் புனரமைக்க ரூ.378 கோடியே 50 லட்சம் வேண்டும் என மத்திய ஜல் சக்தி துறையிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் கோரியிருந்தார்.

    இதை பரிசீலித்த மத்திய அமைச்சகம், மத்திய நீர்வள ஆணைய சேர்மன் அபிஷேக்சின்கா, பொறியாளர் தங்கமணி ஆகியோர் தலைமையில் துணை இயக்குனர்கள் பன்னீர்செல்வம், தர்மேந்திரசிங் கொண்ட மத்திய நீர் ஆணைய நிபுணர் குழுவை அமைத்தது.

    இந்த குழுவினர் புதுவைக்கு வந்து சட்டசபையில் அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் நீர்மேலாண்மை குறித்து ஆலோசனை நடத்தினர். புதுவையில் சாத்தியமான இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். ஆறுகளில் கரையை 2 மீட்டர் உயர்த்த வேண்டும்.

    மழை காலங்களில் வீடூர் அணையில் வெளி யேற்றப்படும் தண்ணீரால் நோணாங்குப்பம், சுண்ணாம்பாறு பகுதியில் வெள்ளப்பெருக்கை தடுக்க 21 கி.மீ. கரையில் சாலை வசதி செய்ய வேண்டும். ஆறு, குளங்களின் கரைகளை பலப்படுத்தி சாத்தனூர் அணையிலிருந்து புதுவைக்கு தண்ணீர் கொண்டுவர சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

    மேட்டூரில் கல்லணை வழியாக காரைக்காலுக்கு தண்ணீர் கொண்டுவரும் சாத்திய ங்களை ஆராய வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    பின்னர் மத்திய குழுவினர் சங்கராபரணி ஆறு, ஆரியப்பாளையம், கோனேரிக்குப்பம், செல்லி ப்பட்டு, நோணாங்குப்பம், தென்பெண்ணை யாறு, மணமேடு, சோரியாங்குப்பம் பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த கூட்டத்தில் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
    • மத்திய பட்ஜெட் லோக்சபா தேர்தலை முன்வைத்து தயாரித்ததாக தெரிகிறது. பிரதமர் அறிவித்த விவசாய விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராய ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய பட்ஜெட் லோக்சபா தேர்தலை முன்வைத்து தயாரித்ததாக தெரிகிறது. பிரதமர் அறிவித்த விவசாய விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கு விதை, உர மானியம், இலவச மின் திட்டம் இல்லை. நெல், வாழை, கரும்பு விலையில் எந்த மாற்றமும் இல்லாத விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட். இதில் ரூ.13 லட்சம் கோடி வெளிசந்தையில் கடன் வாங்குவதாக உள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும்.

    நிதி பற்றாக்குறை 5.9 சவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இது பணவீக்கத்தை உருவாக்கி விலைவாசியை உயர்த்தும். நெடுஞ்சாலை துறைக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர். ரூ.4 லட்சம் கோடியில் நெடுஞ்சாலை துறை பணிகள் தொடங்கி கிடப்பில் உள்ளது.

    பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான எந்த முகாந்தரமும் இல்லை. பல எதிர் பார்ப்புகளோடு இருந்த அரசு ஊழியர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த பட்ஜெட் பணம் படைத்தோருக்கும், நாட்டில் உள்ள ஒரு சதவீத மிகப்பெரிய முதலாளிக்கும் தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நாட்டு மக்களை மத்திய அமைச்சர் ஏமாற்றியுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

    • புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் உப்பளம் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சக்கர நாற்காலி, கை, கால் ஊன்றுகோல், காது கேட்கும் கருவிகள் வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் உப்பளம் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் அனிபால் கெ ன்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சக்கர நாற்காலி, கை, கால் ஊன்றுகோல், காது கேட்கும் கருவிகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் ரவி, செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் ராஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மத்திய அரசின் மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது தேசிய பெண் குழந்தைகள் கொண்டாடுகிறது.
    • இதில் சிறப்பு விருந்தினராக புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி தலைவர் வித்யா ராம்குமார் கலந்து கொண்டார்.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது தேசிய பெண் குழந்தைகள் கொண்டாடுகிறது.

    அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் கல்வித்துறையின் வழிகாட்டுதலின் பேரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டின் முக்கியதுவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் அமலோற்பவம் மேல்நிலை ப்பள்ளியில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி தலைவர் வித்யா ராம்குமார் கலந்து கொண்டார். அவருக்கு பள்ளி முதல்வர் ஆண்டோனியோஸ் பிரிட்டோ பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

    இக்கருத்தரங்கம் 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்காக நடைபெற்றது.

    இந்த வயதில் உள்ள பெண் குழந்தைகள் தங்களின் பாதுகாப்பற்ற சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற விழிப்புணர்வை சிறப்பு விருந்தினர் வித்யாராம்குமார் தனது உரையில் எடுத்துரைத்தார்.

    • வில்லியனூர் அருகே அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பம்மாள் . இவர் பாகூர் திரவுபதி அம்மன் கோவில் அருகில் கடந்த 7ஆண்டுகளாக தனியார் பள்ளி நடத்தி வருகிறார்.
    • மேலும் பள்ளியை மூடிவிட்டு வெளியேறுங்கள், இல்லை என்றால் உங்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விடுவேன் என்று மணிமாறன் மிரட்டல் விடுத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பம்மாள். இவர் பாகூர் திரவுபதி அம்மன் கோவில் அருகில் கடந்த 7ஆண்டுகளாக தனியார் பள்ளி நடத்தி வருகிறார்.

    இந்தப் பள்ளிக்கு அருகில் மணிமாறன்.என்பவர் வசித்து வருகிறார். இவர் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் பள்ளி வழக்கம் போல் செயல்பட்டிருந்த நிலையில் மணிமாறன் அத்துமீறி பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளரை தரக்குறைவாக திட்டினார்.

    மேலும் பள்ளியை மூடிவிட்டு வெளியேறுங்கள், இல்லை என்றால் உங்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விடுவேன் என்று மணிமாறன் மிரட்டல் விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி தாளாளர் குப்பம்மாள் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் மணிமாறனை தேடி வருகின்றனர்.

    ×