search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரேஷன்கடைகளை திறக்கக்கோரி பெண்கள் கூட்டமைப்பு மறியல்- போலீசாருடன் தள்ளுமுள்ளு

    • கூட்டமைப்பினர் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
    • ரேசன் கடைகளை ஒரு மாதத்திற்குள் திறக்காவிட்டால் ஆயிரக்கண்க்கான பெண்களுடன் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.

    புதுச்சேரி:

    அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ரேஷன்கடைகளை திறந்து இலவச அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க வலியுறுத்தி இன்று குடிமைப்பொருள் வழங்கல்துறை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    இதற்காக சாரம் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். அங்கிருந்து ஜனநாயக மாதர் சங்க செயலாளர் இளவரசி தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தை அகில இந்திய மாதர் சங்க செயற்குழு உறுப்பினர் சுதா சுந்தர்ராமன் தொடங்கி வைத்தார்.

    ஊர்வலத்தில் இந்திய தேசிய மாதர் சங்க செயலாளர் அமுதா, தலித் பெண்கள் கூட்டமைப்பு சரளா, சமம் பெண்கள் சுய சார்பு இயக்கம் சிவகாமி, ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் முனியம்மாள், சத்யா, உமா, ஹேமலதா உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

    ஊர்வலம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சாலையில் அமர்ந்து பெண்கள் கூட்டமைப்பினர் கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் பெண்கள் போராட்டத்திற்கு ஒரு பெண் போலீசார்கூட இல்லை. இதனால் பெண்கள் மீது கை வைத்ததால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம், தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து கூட்டமைப்பினர் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். வேண்டாம், வேண்டாம் ரெஸ்டோ பார் வேண்டாம், வேண்டும், வேண்டும் ரேஷன்கடைகள் வேண்டும் என கோஷமிட்டனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராம்ஜி, பிரபுராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளவரசி நிருபர்களிடம் கூறும்போது, ரேசன் கடைகளை ஒரு மாதத்திற்குள் திறக்காவிட்டால் ஆயிரக்கண்க்கான பெண்களுடன் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.

    Next Story
    ×