என் மலர்
புதுச்சேரி

பாதாள வடிகால் வாய்க்கால் களையும், நகராட்சி யையும் மற்றும் ப-வடிவ வாய்க்கால்களையும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி ஆய்வு மேற்கொண்ட காட்சி.
வடிகால் வாய்க்கால்களை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
- புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட பொதுப் பணித் துறையின் பராமரிப்பில் உள்ள பாதாள வடிகால் வாய்க்கால் களையும், நகராட்சி யையும் மற்றும் ப-வடிவ வாய்க்கால்களையும் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி ஆய்வு மேற்கொண்டார்.
- தொடர்ந்து வாணரப் பேட்டை அலன் வீதி, கஸ்தூரிபாய் வீதிகளில் வாய்க்கால்களை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட பொதுப் பணித் துறையின் பராமரிப்பில் உள்ள பாதாள வடிகால் வாய்க்கால் களையும், நகராட்சி யையும் மற்றும் ப-வடிவ வாய்க்கால்களையும் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களிடம் இருந்து புகார் வராத வண்ணம் முன்கூட்டியே தொடர்ந்து ஆய்வு செய்து சீர்படுத்த வேண்டும் என அதிகாரிகளை எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.
மேலும் நகராட்சி அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்ட அனைத்து வாய்க்கால்களும் சீர்செய்ய வலியுறுத்தினார்.
தொடர்ந்து வாணரப் பேட்டை அலன் வீதி, கஸ்தூரிபாய் வீதிகளில் வாய்க்கால்களை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அப்போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், மீனவரணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி கிளை செயலாளர்கள் செல்வம், காலப்பன், அசோக், ராகேஷ், கவுதமன், ராஜா, பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






