என் மலர்
புதுச்சேரி

அடுக்குமாடி குடியிருப்பு கட்டும்பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் உள்ளனர்.
ரூ.45 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு-ரங்கசாமி பூமி பூஜை செய்தார்
- புதுவை நகராட்சிக்குட்பட்ட ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குமரகுரு பள்ளத்தில் பல ஆண்டுக்கு முன் குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டது. இது குடியிருக்கும் தகுதியில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் இடிக்கப்பட்டது.
- இந்த திட்டத்திற்கான பூமி பூஜை விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை நகராட்சிக்குட்பட்ட ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குமரகுரு பள்ளத்தில் பல ஆண்டுக்கு முன் குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டது.
இது குடியிருக்கும் தகுதியில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் இடிக்கப்பட்டது. இதனால் அங்கு வசித்த மக்கள் வாடகை வீடுகளில் இன்னல்களோடு வசித்து வந்தனர்.
இந்நிலையில் அதே இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடியிருப்பு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுத்தது. தரை மற்றும் 12 தலங்களுடன் 216 குடியிருப்புகள் அடங்கிய 2 கட்டடங்கள் கட்ட ரூ.45.50 கோடியில் திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்திற்கான பூமி பூஜை விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் மற்றும் ஊர்பொதுமக்கள், என்ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.






