என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கடற்கரை சாலையில் ஜி20 கோலப்போட்டிகள்
    X

    போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிய காட்சி.

    கடற்கரை சாலையில் ஜி20 கோலப்போட்டிகள்

    • ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் மாநாடுகள், கருத்தரங்குகள் நடக்கிறது. புதுவையில் வருகிற 29ம் தேதி முதல் 31-ந் தேதி வரை மாநாடு நடக்கிறது.
    • கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் செல்வம் தலைமை வகித்து, போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார்.

    புதுச்சேரி:

    ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது.

    இதையொட்டி நாடு முழுவதும் மாநாடுகள், கருத்தரங்குகள் நடக்கிறது. புதுவையில் வருகிற 29ம் தேதி முதல் 31-ந் தேதி வரை மாநாடு நடக்கிறது. இதில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

    மத்திய அரசு ஜி20 மாநாடு சின்னத்தை வெளி யிட்டுள்ளது. இந்த சின்னத்தை பொது மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பெண்களுக்கு கோலப்போட்டி, மாணவ- மாணவிகளுக்கு வர்ணம் தீர்ட்டுதல், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் செல்வம் தலைமை வகித்து, போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார். சிறந்த கோலம் வரைந்த 10 பெண்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கலை பண் பாட்டுத்துறை இயக்குனர் கந்தன் தலைமையில் துறை அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×