search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
    X

    பயிற்சி வகுப்பை செல்வகணபதி எம்.பி. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

    • புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • புதுவை மாநில ஏழை எளிய மாணவ-மாணவிகள் எல்.டி.சி., யூ.டி.சி., ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கான போட்டி தேர்வினை பயமின்றி எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு தேவையான பயிற்சியை வழங்க அனுபவமிக்க ஆசிரியர் இங்கு வந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    இதனை விவேகானந்தா கல்வி அறக்கட்டளை தலைவர், தாளாளர் செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்து பேசியதாவது:-

    புதுவை மாநில ஏழை எளிய மாணவ-மாணவிகள் எல்.டி.சி., யூ.டி.சி., ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கான போட்டி தேர்வினை பயமின்றி எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு தேவையான பயிற்சியை வழங்க அனுபவமிக்க ஆசிரியர் இங்கு வந்துள்ளனர்.

    இந்த பயிற்சி 45 நாட்கள் நடைபெற உள்ளது.காலை மாலை 2 பிரிவுகளாக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    இந்த பயிற்சியை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×