என் மலர்
நீங்கள் தேடியது "Increase in voter"
- புதுவையில் 13-வது தேசிய வாக்காளர் தின விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு புதுவைத் தலைமை செயலாளர் ராஜூவ் வர்மா, தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தலைமை வகித்தார்.
- தேர்தலுக்குத் தேர்தல் புதுவையில் வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெருமையாக உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 13-வது தேசிய வாக்காளர் தின விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.
விழாவுக்கு புதுவைத் தலைமை செயலாளர் ராஜூவ் வர்மா, தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தலைமை வகித்தார். புதுவை மாவட்டத் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான வல்லவன், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி குமார், துணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி தில்லை மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் தலைமைச்செயலர் ராஜீவ் வர்மா பேசியதாவது:-
தேர்தலுக்குத் தேர்தல் புதுவையில் வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெருமையாக உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் வாக்காளித்தோர் எண்ணிக்கை 67 சதவீதமாக இருந்தபோது, புதுவையில் 81.19 சதவீதமாக இருந்தது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாக்களித்தோர் எண்ணிக்கை 83 சதவீதமாக உயர்ந்துள்ளது. புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி களில் வாக்காளர் சேர்க்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளிகளில் மட்டும் 227 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் புதுவை யில் தற்போது 18 வயது பூர்த்தியடைந்தவர்களில் புதிய வாக்காளர்களாக 4 ஆயிரத்து 440 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய வாக்காளர்களாக அடையாள அட்டை பெற்றவர்கள், தேர்தலின் போது வாக்களிப்பது முக்கியமாகும்.
வாக்கு தோட்டாவை விட வலிமையானது என மறைந்த அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார். ஆகவே, நாம் ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் வகையில் வாக்களிப்பது அவசியம்.
இவ்வாறு ராஜீவ்வர்மா பேசினார்.
வாக்காளர் உறுதி மொழியை தலைமைச் செயலாளர் ராஜீவ்வமா வாசிக்க அதை அங்கிருந்தோர் திரும்பக் கூறி ஏற்றனர்.






