search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee committed suicide"

    • தாவீதுபேட்டில் நகராட்சி துப்புரவு பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை உப்பளம் தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது50).
    • அப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு பாத்திமாமேரி சென்று விட்டார். அந்த நேரத்தில் ஆறுமுகத்துக்கு நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    புதுச்சேரி:

    தாவீதுபேட்டில் நகராட்சி துப்புரவு பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை உப்பளம் தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது50). இவர் புதுவை நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பாத்திமா மேரி என்ற மனைவியும், மணிவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.

    மணிவண்ணனுக்கு திருமணமாகி அவர் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இதற்கிடையே ஆறுமுகம் நீரழிவு நோய் மற்றும் தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இந்த நிலையில் ஆறுமுகம் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பினார். அப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு பாத்திமாமேரி சென்று விட்டார். அந்த நேரத்தில் ஆறுமுகத்துக்கு நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் மின் விசிறியில் நைலான் கயிற்றால் அவர் தூக்கு போட்டு தொங்கினார். நிகழ்ச்சி முடிந்து பாத்திமா மேரி வீடு திரும்பிய போது அங்கு கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆறுமுகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி பாத்திமாமேரி கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த சில நாட்களாக ஓட்டல் அறையில் தற்கொலை சம்பம் நடந்து வருகிறது.
    • நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

    கோவை

    திருவள்ளூர் மாவட்டம் கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் தரணி (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 30-ந் தேதி கோவை வந்தார்.

    இங்கு காட்டூர் ராம் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இதையடுத்து ஓட்டல் ஊழியர் ஒருவர் அறையை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது அவர் கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

    இதனால், சந்தேகமடைந்த ஊழியர் இது குறித்து லாட்ஜ் மேலாளரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, தரணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்த தரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தரணி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஓட்டல் அறையில் தற்கொலை சம்பம் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ரஞ்சித் தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • ரஞ்சித் சாவில் மர்மம் இருப்பதாக ஊட்டி ஊரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஊட்டி,

    ஊட்டி அருகே தங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி திவ்யா. இவர்கள் கோவையில் வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தங்காடுக்கு வந்தனர்.

    இந்தநிலையில் ரஞ்சித் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் கிராம மக்கள் உடலை அடக்கம் செய்ய முயன்றனர். இதற்கிடையே ரஞ்சித் சாவில் மர்மம் இருப்பதாக ஊட்டி ஊரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரஞ்சித் சாவு குறித்து, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதனால் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×