என் மலர்
புதுச்சேரி

கொசு மருந்து அடிக்கும் பணியை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்த காட்சி.
கொசு மருந்து அடிக்கும் பணி-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- உப்பளம் தொகுதி க்குட்பட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, கொசு மருந்து அடிக்கும் பணியை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்து தீவிரமாக செயல்படுத்திக் வருகிறார்.
- இதுமட்டுமின்றி அனைத்து வார்டுகளில் உள்ள வீதிகளில்,வீதி வீதியாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியை நேரில் சென்று தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொள்கிறார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி க்குட்பட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, கொசு மருந்து அடிக்கும் பணியை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்து தீவிரமாக செயல்படுத்திக் வருகிறார்.
கொசுக்களால் மக்களுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்க நகராட்சி மற்றும் பொதுப்பணி துறை நிர்வாகிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எம்.எல்.ஏ. மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தெருக்கள் மற்றும் தொட்டிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை நகராட்சி ஊழியர்கள் அகற்ற வேண்டுமென்று அதிகாரியிடம் அறிவுறுத்தி இருக்கிறார்.
இதுமட்டுமின்றி அனைத்து வார்டுகளில் உள்ள வீதிகளில்,வீதி வீதியாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியை நேரில் சென்று தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொள்கிறார்.
அதன் தொடர்ச்சியாக வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு, தாவீதுபேட்டை ஆகிய பகுதிகளில் கொசு மருந்து அடிகும் பணியை தி.மு.க. நிர்வாகிகளுடன் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இப்பணியில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, கிளை செயலாளர் காலப்பன் , லாரன்ஸ், ரகுமான், தமிழ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






