என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிரீபெய்டு மின்கட்டண திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்-ரங்கசாமியிடம் அ.தி.மு.க. மனு
    X

    முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் மனு அளித்த காட்சி அருகில் அவைத் தலைவர் அன்பானந்தம், பொருளாளர் ரவி பாண்டுரங்கன் ஆகியோர் உள்ளனர்.

    பிரீபெய்டு மின்கட்டண திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்-ரங்கசாமியிடம் அ.தி.மு.க. மனு

    • புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
    • இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.மேலும், தற்போதுள்ள ஒரு மின் விளக்கு திட்டம், இலவச மின்சார திட்டங்கள் பாதிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மின் துறை தனியார் மய டெண்டர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பிரீபெய்டு மின் கட்டண திட்டத்திற்காக சுமார் ரூ.251.10 கோடிக்கு புதிய மீட்டர்களை மாற்ற அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

    பிரீபெய்டு முறையில் மின் உயோகத்திற்கு முன் கூட்டியே பணம் செலுத்த வேண்டும்.

    கட்டிய பணத்திற்கு கூடுதலாக உபயோகப்படுத்த முடியாது. தானாக மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.மேலும், தற்போதுள்ள ஒரு மின் விளக்கு திட்டம், இலவச மின்சார திட்டங்கள் பாதிக்கப்படும்.

    அரசு துறைகள் பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் தெரு விளக்குகள், குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். அரசு கட்டிடம், மற்றும் மருத்துவ மனைகளில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும்.

    எனவே, முதல்-அமைச்சர், மின்துறை அமைச்சர் ஆகியோர் ஏழை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரீபெய்டு திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கடிதத்தில் கூறியுள்ளார்.

    இந்த சந்திப்பின்போது மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் ஆகியோர் இருந்தனர்.

    Next Story
    ×