என் மலர்tooltip icon

    வேலூர்

    • வனத்துறையினர் நடவடிக்கை
    • மருந்து சீட்டு மூலம் கண்டுபிடித்தனர்

    வேலூர்:

    பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக- ஆந்திரா எல்லையான பத்தலப்பல்லி வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு காலாவ தியான மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து சமூக வலைத ளங்களில் வைரலானது.

    தகவலறிந்த வேலுார் மாவட்ட வன அதிகாரி கலாநிதி உனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

    அதன்பேரில் பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ் குமார் தலைமையில் வனவர் இளையராஜா, வனகாப்பாளர்கள் அரவிந்தசாமி, சிவன் ஆகியோர் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட வனப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.

    மருத்துவ கழிவுகளில் இருந்த மருந்து சீட்டு கண்டெடுக்கப்பட்டு, அதில் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வனத்துறையினர், நைசாக பேசி அந்த நபரை பேரணாம்பட்டு வனச்சரக அலுவலகத்துக்கு வரவழைத்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். அருகே உள்ள கோரமண்டல் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் ராஜேந்திர பிரசாத் (வயது 48) என்றும் 5 நாட்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து பத்த லப்பல்லி வனப்பகுதியில் கொட்டி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ராஜேந்திர பிரசாத்தை வனத்து றையினர் கைது செய்து செய்தனர்.

    • 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், கடும் மோதல் ஏற்பட்டது.
    • மோதலில் கவுன்சிலர் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுதாகர். இவர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவருக்கும் 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முருகன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில், சுதாகர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனது ஓட்டலில் நின்று கொண்டிருந்தார். அப்போது முருகன் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு வந்து சுதாகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், கடும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது 2 தரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கும், இங்கும் தெறித்து ஓடினர்.

    2 தரப்பினரும் பயங்கர சத்தத்துடன் மோதி கொண்ட சம்பவத்தால், அந்த இடம் பரபரப்பாக காட்சியளித்தது.

    இந்த மோதலில் கவுன்சிலர் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர் உடனே அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதேபோல காயமடைந்த முருகனும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலுார் வடக்கு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தி.மு.க. கவுன்சிலர்கள் மோதிக்கொண்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
    • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டவுன்ஹாலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சுமார் 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. மேலும் அவர்களுக்கு அரசு சார்பில் சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    அனைவரும் சுகாதாரத்தை பேண வேண்டும். பெண்களை சமமாக நடத்த வேண்டுமென்ற நோக்கில் இது போன்ற சமுதாய வளைகாப்புகள் நடத்தப்படுகிறது.

    கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். அப்போதுதான் சத்தான குழந்தைகள் பிறக்கும்.

    பொதுவாகவே பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பெண்களால் மட்டும் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.

    சத்தான நல்ல மூளை வளர்ச்சியுடன் பிறக்கும் குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலம். குழந்தைகளுக்கு சத்தான உணவை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வண்ணம் தீட்டும் பணியில் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்
    • களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது

    வேலுார்:

    நவராத்திரி பண்டிகை, வருகிற அக். 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது.

    இதன் முக்கிய நிகழ்வாக, கொலு வைக்கப்படும்.

    இதையொட்டி, வேலுார் கொசப்பேட்டை பகுதியில் பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. குறைந்தபட்சம் 3 அங்குலம் முதல் அதிகபட்சம் 4 அடி வரையிலான மண் பொம்மைகளை தயார் செய்து, அதற்கு வண்ணம் தீட்டும் பணியில் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து பொம்மை தயாரிப் பாளர்கள் கூறியதாவது:-

    நவராத்திரிக்கு பொம்மை தயாரிக்கும் பணியை ஆண்டுதோறும் டிசம்பர் மாதமே தொடங்கி விடுவோம்.

    களிமண் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பொம்மைகளை, 3 மாதங்கள் நிழலில் உலரவைத்து, அதன் ஈரப்பதம் குறைந்தபிறகு சூளையில் வைத்து சுடப்படும்.

    பின்னர், பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி நடக்கும். ஒரு பொம்மையை முழுமையாக தயார் செய்ய 10 மாதகாலம் உழைப்பு தேவைப்படுகிறது.

    வேலுாரில் தயார் செய்யப்படும் இந்த பொம்மைகள், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை ரகத்துக்கு ஏற்றார் போல் விற்கப்படுகிறது.

    பிளாஸ்டர் ஆப் பாரீஸ் எனும் ரசாயன கலவையால் தயார் செய்யப்படும் பொம்மைகள் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால், களிமண்ணால் செய்யப்பட்ட இந்த பொம்மைகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று காலை சைக்கிள்கள் உள்ள அறையை சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்றுள்ளனர்.

    அப்போது, சுமார் 10 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை கவனித்த பள்ளி மாணவர்கள் உடனே தலைமை ஆசிரியரிடம் கூறினர். பின்னர் தலைமை ஆசிரியர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சாரை பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட பாம்பை வனச்சரகர் அலுவலர் இந்து உத்தரவின் பேரில் அருகே உள்ள பருவமலை காப்பு காட்டில் விட்டனர்.

    • மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கழனிப்பாக்கம், பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 50) இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் தனது பைக்கை பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.

    மீண்டும் வேலை முடித்துவிட்டு வந்து பார்த்த போது தனது பைக் காணாமல் போனது தெரியவந்தது.

    இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரெயில் நிலையத்தில் சிறுவனின் பைக் நின்று கொண்டு இருந்தது
    • பெற்றோர் போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி விஜி ராம் நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் சிறுவன் வீட்டில் இருந்த பைக் மற்றும் ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு டியூஷன் செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு சென்றார்.

    அதன்பின்னர் சிறுவன் வீடு திரும்பவில்லை. மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தில் சிறுவன் ஓட்டி சென்ற பைக் நின்று கொண்டு இருந்தது. ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் காட்பாடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.

    • சமூக நலத்துறை அதிகாரி நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரும் பிரேம்குமார் 22 என்ற வாலிபரும் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து பேரணாம்பட்டு சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமிக்குபுகார் வந்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தனலட்சுமி விசாரணை நடத்தினார். விசாரணையில் மைனர் பெண்ணை பிரேம்குமார் திருமணம் செய்தது தெரியவந்தது.

    இது குறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சியாமளா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பனை, ஆலமரங்கள் வெட்டுவதை தவிர்க்க வேண்டுகோள்
    • பசுமைக் குழு கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது.

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப் பணிகள் காரணமாக அகற்றப்பட வேண்டிய மரங்கள் குறித்த விவரம் பசுமை குழு ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    பனைமரம் மற்றும் ஆலமரம் போன்ற பல வருடங்களுக்கு பயன் தரக்கூடிய மர வகைகளை அகற்றுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறை களின்படி ஒரு மரத்தை அகற்றினால் அதற்கு ஈடாக 10 மரங்கள் நடவு செய்ய வேண்டும் என்கின்ற நிலையை பின்பற்றும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் அந்த மண்வளத்திற்கு ஏற்ற நம்முடைய பாரம்பரிய மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

    புதிய மரங்களை நடவு செய்த பின்னர் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் மரங்களை நடவு செய்யும் பொழுது உயரம் குறைவாக உள்ள மரக்கன்றுகளை தவிர்த்து குறைந்தது 6 அடி முதல் 8 அடி வரை உள்ள மர வகைகளை நடவு செய்ய வேண்டும்.

    ஆலமரம் மற்றும் அரச மரங்களின் கிளைகளை வெட்டி நடவு செய்தாலே நல்ல நிலையில் வளர்ந்து வரும். நம்முடைய மண்வளத்திற்கு ஏற்ற மரவகையில் குறித்த ஆலோசனைகளை மாவட்ட வனத்துறை யிடமிருந்து பெற்று நடவு செய்யலாம்.

    பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் நம்முடைய வேலூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 18 லட்சம் மரங்கள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட வனத்துறையில் 10 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை வருகின்ற அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் அதாவது பருவமழை தொடங்கு வதற்குள் நடவு செய்ய முனைப்புடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, துணை கலெக்டர் (பயிற்சி) பிரியா உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நடவடிக்கை
    • 46 இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது

    வேலூர்:

    உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வேலூர் கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு மேயர் சுஜாதா முன்னிலை வகித்தார். கால்நடை மண்டல இணை இயக்குனர் கோபி கிருஷ்ணா திட்ட அறிக்கை வாசித்தார். கால்நடைதுறை டாக்டர் அந்துவன் தலைமை தாங்கினார்.

    முகாமில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் விதவிதமான நாய்களை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இன்று மாவட்ட முழுவதும் சுமார் 46 இடங்களில் தடுப்பு ஊசி முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முகாமை விடுபட்டவர்களுக்கு மற்ற நாட்களில் அரசு கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • போலீசார் மடக்கி பிடித்தனர்
    • 2 லோடு ஆட்டோ பறிமுதல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பகுதியில், பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக லோடு ஆட்டோவில் மணல் கடத்தி வந்த விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்த சபரிநாதன் (வயது 26), வடுகன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (29) ஆகிய 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லோடு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர்.

    • நகர முடியாமல் 3 மணிநேரம் தவிப்பு
    • வனத்துறையினர் மீட்டு காப்பு காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தையொட்டி சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.

    வனத்தை ஒட்டியுள்ள இந்த கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளில், அடிக்கடி மான், மயில், மலைப்பாம்பு மற்றும் விஷபாம்புகள் இறையை தேடி வருகிறது.

    கிராமத்திற்கு நுழையும் மலைப்பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பெரிய ஏரியூர்கிராம மக்கள், சுடுகாட்டு அருகே உள்ள வன பகுதி வழியாக நடந்து சென்றனர்.

    அப்போது சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று மரத்திற்கு அடியில் உணவு செறியூட்ட முடியாமல் தவித்து கொண்டு இருந்தது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    3 மணி நேரத்துக்கு மேலாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

    இதற்கிடையில் மலைப்பாம்பு அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் திக்கி, திணறியது.

    ஒரு கட்டத்தில் மலை பாம்பு விழுங்கிய புள்ளிமானை, வெளியே கக்கியது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு, வனத்துறையினரை போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர்.

    காலதாமதமாக வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×