பள்ளிகொண்டா அருகே பைக் திருட்டு

மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்போலீசார் விசாரணை
Published on: 

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கழனிப்பாக்கம், பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 50) இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது பைக்கை பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.

மீண்டும் வேலை முடித்துவிட்டு வந்து பார்த்த போது தனது பைக் காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com