என் மலர்
வேலூர்
- சமூக நலத்துறை அதிகாரி நடவடிக்கை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரும் பிரேம்குமார் 22 என்ற வாலிபரும் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து பேரணாம்பட்டு சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமிக்குபுகார் வந்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தனலட்சுமி விசாரணை நடத்தினார். விசாரணையில் மைனர் பெண்ணை பிரேம்குமார் திருமணம் செய்தது தெரியவந்தது.
இது குறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சியாமளா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பனை, ஆலமரங்கள் வெட்டுவதை தவிர்க்க வேண்டுகோள்
- பசுமைக் குழு கூட்டம் நடந்தது
வேலூர்:
வேலூர் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப் பணிகள் காரணமாக அகற்றப்பட வேண்டிய மரங்கள் குறித்த விவரம் பசுமை குழு ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் கலெக்டர் பேசியதாவது:-
பனைமரம் மற்றும் ஆலமரம் போன்ற பல வருடங்களுக்கு பயன் தரக்கூடிய மர வகைகளை அகற்றுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறை களின்படி ஒரு மரத்தை அகற்றினால் அதற்கு ஈடாக 10 மரங்கள் நடவு செய்ய வேண்டும் என்கின்ற நிலையை பின்பற்றும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் அந்த மண்வளத்திற்கு ஏற்ற நம்முடைய பாரம்பரிய மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
புதிய மரங்களை நடவு செய்த பின்னர் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் மரங்களை நடவு செய்யும் பொழுது உயரம் குறைவாக உள்ள மரக்கன்றுகளை தவிர்த்து குறைந்தது 6 அடி முதல் 8 அடி வரை உள்ள மர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
ஆலமரம் மற்றும் அரச மரங்களின் கிளைகளை வெட்டி நடவு செய்தாலே நல்ல நிலையில் வளர்ந்து வரும். நம்முடைய மண்வளத்திற்கு ஏற்ற மரவகையில் குறித்த ஆலோசனைகளை மாவட்ட வனத்துறை யிடமிருந்து பெற்று நடவு செய்யலாம்.
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் நம்முடைய வேலூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 18 லட்சம் மரங்கள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வனத்துறையில் 10 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை வருகின்ற அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் அதாவது பருவமழை தொடங்கு வதற்குள் நடவு செய்ய முனைப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, துணை கலெக்டர் (பயிற்சி) பிரியா உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நடவடிக்கை
- 46 இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது
வேலூர்:
உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வேலூர் கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மேயர் சுஜாதா முன்னிலை வகித்தார். கால்நடை மண்டல இணை இயக்குனர் கோபி கிருஷ்ணா திட்ட அறிக்கை வாசித்தார். கால்நடைதுறை டாக்டர் அந்துவன் தலைமை தாங்கினார்.
முகாமில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் விதவிதமான நாய்களை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இன்று மாவட்ட முழுவதும் சுமார் 46 இடங்களில் தடுப்பு ஊசி முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முகாமை விடுபட்டவர்களுக்கு மற்ற நாட்களில் அரசு கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர்கள் கூறினர்.
- போலீசார் மடக்கி பிடித்தனர்
- 2 லோடு ஆட்டோ பறிமுதல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பகுதியில், பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக லோடு ஆட்டோவில் மணல் கடத்தி வந்த விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்த சபரிநாதன் (வயது 26), வடுகன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (29) ஆகிய 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவர்கள் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லோடு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர்.
- நகர முடியாமல் 3 மணிநேரம் தவிப்பு
- வனத்துறையினர் மீட்டு காப்பு காட்டில் விட்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தையொட்டி சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.
வனத்தை ஒட்டியுள்ள இந்த கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளில், அடிக்கடி மான், மயில், மலைப்பாம்பு மற்றும் விஷபாம்புகள் இறையை தேடி வருகிறது.
கிராமத்திற்கு நுழையும் மலைப்பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பெரிய ஏரியூர்கிராம மக்கள், சுடுகாட்டு அருகே உள்ள வன பகுதி வழியாக நடந்து சென்றனர்.
அப்போது சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று மரத்திற்கு அடியில் உணவு செறியூட்ட முடியாமல் தவித்து கொண்டு இருந்தது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
3 மணி நேரத்துக்கு மேலாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
இதற்கிடையில் மலைப்பாம்பு அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் திக்கி, திணறியது.
ஒரு கட்டத்தில் மலை பாம்பு விழுங்கிய புள்ளிமானை, வெளியே கக்கியது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு, வனத்துறையினரை போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர்.
காலதாமதமாக வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை
- அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஒட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நாளை 28-ந்தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி மற்றும் வருகிற அக்டோபர் 2-ம் தேதி (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தி நாட்களில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும்.
அந்த நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கூடாது. விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல், மதுக்கூட உரிமை தாரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.
- 90 ஆண்டுகள் பழமையானது
- கலெக்டர் உத்தரவு
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் 90 ஆண்டுகள் பழமையான ஓட்டல் ஒன்று இயங்கி வந்தது. கடந்த 18-ந் தேதி வேலூரில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் பழைய கட்டிட சுவர்களில் மழை நீர் இறங்கி நள்ளிரவில் ஓட்டலில் உள்ள சமையல் அறையின் சுவர் பாதி இடிந்து விழுந்தது.
காலை ஓட்டலில் திறந்து பார்த்த அதன் உரிமையாளர் இடிந்து விழுந்த சுவற்றின் ஈடிபாடுகளை அகற்ற முடிவு செய்தார்.
இதையடுத்து ராமமூர்த்தி (வயது 55) கட்டிட மேஸ்திரி. பவானி 60 மற்றும் வெண்ணிலா என 2 பெண் வேலையாட்களை அழைத்து வந்தார்.
3 பேரும் கட்டிட சுவற்றின் இடுப்பாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மீதி இருந்த சமையலறையின் சுவர் திடீரென இடிந்து 3 பேர் மீது விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கி பவானி சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமமூர்த்தி மற்றும் வெண்ணிலாவை மீட்டனர்.
சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார். இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள பழமையான ஓட்டலை இடிக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் இன்று காலை ஓட்டலை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
- வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி பகுதியில் ஆந்திரா, கர்நாடகா செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த காடுகள் உள்ளது.
இந்தப் காப்பு காட்டில் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள், ஊசி மற்றும் மருந்துகளை மர்ம கும்பல் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இந்த சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
அதேபோல் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளதால் அதிகளவில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகள் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவக் கல்லூரிகளால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே தமிழக எல்லையில் உள்ள வன சோதனை சாவடியில் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய வேண்டும்.
மருத்துவக் கழிவுகளை வனப்பகுதியில் கொட்டப்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பயணிகளை மழையில் இறக்கி விட்டதால் நடவடிக்கை
- வேலூர் மண்டல பொது மேலாளர் உத்தரவு
பேரணாம்பட்டு:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு பேரணாம்பட்டுக்கு சென்றது.
அந்த பஸ்சின் டிரைவர் வெங்கடேசனும், கண்டக்டர் சத்திய நாராயணனும் பயணிகளை பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் இறக்கி விடாமல் கொட்டும் மழையில் 1.5 கிலோமீட்டர் முன்பாக புத்துக்கோவில் சந்திப்பு சாலையில் இறக்கி விட்டு சென்றனர்.
மேலும் பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பாமல் அவரையும் டிப்போவில் விட்டு சென்றனர். இந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவலறிந்த வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி, பேரணாம்பட்டு கிளை மேலாளர் ரமேஷை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
விசாரணையில் பயணிகளை நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட சம்பவம் உறுதியானது. இதனையடுத்து நேற்றிரவு அரசு பஸ் டிரைவர் வெங்கடேசன், கண்டக்டர் சத்திய நாராயணன், டெப்போ செக்யூரிட்டி கவுதமன் ஆகிய 3 பேரை சஸ்பெண்டு செய்து வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி உத்தரவிட்டுள்ளார்.
- பஸ்கள் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது
- கர்நாடக மாநிலத்தில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டதால் நடவடிக்கை
வேலூர்:
காவிரி பிரச்சினையால் கர்நாடக மாநிலத்தில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு செல்லும் அரசு பஸ்கள் இன்று காலை முதல் தமிழக எல்லையான ஒசூர் பகுதி வரை இயக்கப்படுகிறது.
அதன்படி வேலூர் போக்குவரத்து மண்ட லத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து பெங்களூருக்கு செல்லும் 44 அரசு பஸ்கள் இன்று வழக்கமான நேரத்தில் இயக்கப்பட்டன.
இந்த பஸ்கள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது. இதில் முழு அடைப்பு காரணமாக பெரும்பாலான பஸ்கள் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
- விடுமுறை அளிக்காமல் உள்ள பள்ளிகளின் மீது நடவடிக்கை
- கலெக்டர் உத்தரவு
வேலூர்:
வேலூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாக விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
தொடர் மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று இரவு முதல் காலை ஏழு மணி வரை லேசான தூரல் மழை பொழிந்தது.
இதன் காரணமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட பின்பும் விடுமுறை அளிக்காமல் உள்ள பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளித்ததை நடைமுறைப்படுத்தாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பின்பு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் 9, மேல் ஆலத்தூரில் 104.20, ஒடுகத்தூரில் 18, விரிஞ்சிபுரத்தில் 3, காட்பாடியில் 27, வேலூரில் 15.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவும் திடீரென மழை பெய்தது. இரவு முழுவதும் தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்தது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டையில் 27.6, பாலாறு அணைக்கட்டு 4.8, வாலாஜாவில் 15, அம்மூரில் 20, ஆற்காட்டில் 24.8, அரக்கோணத்தில் 14, மின்னலில் 24.4, காவேரிப்பாக்கத்தில் 33, பனப்பாக்கத்தில் 34.4, சோளிங்கரில் 8.2, கலவையில் 38.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், கண்ணமங்கலம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.
இதில் திருவண்ணாமலை யில் 15 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் செங்கத்தில் 1.40, போளூரில் 17.40, ஜமுனா மரத்தூரில் 10, கலசபாக்கத்தில் 62, தண்டராம்பட்டில் 4, ஆரணியில் 18.80, செய்யாறில் 60, வந்தவாசியில் 17, கீழ்பெண்ணாத்தூரில் 63.40, வெம்பாக்கத்தில் 27, சேத்துப்பட்டு 7.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திருப்பத்தூரில் நேற்று மாலை முதல் லேசான மழை பெய்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாட்டறம்பள்ளியில் 1.20, வாணியம்பாடியில் 5, ஆம்பூரில் 24.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- வியாபாரிகள், விவசாயிகள் கடும் அவதி
- அடிப்படை வசதிகள் இல்லை என புகார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று மாட்டுச்சந்தை நடைபெறுகிறது.
இந்த சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான கால்நடைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இது தவிர சண்டை சேவல்கள், கோழிகள், புறாக்களும் ஒருபுறம் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் காய்கறி சந்தையும் நடக்கிறது.
செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் காய்கறி சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விளையும் காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இங்கு வாரந்தோறும் பல லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதன்மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கிறது. ஆனால் இங்கு அடிப்படை வசதி என்பது இல்லை.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், மாட்டு சந்தை முழுவதும் குளம்போல் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. சந்தை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இன்று சுமார் ஆயிரம் கால்நடைகள் விற்பனைக்கு வந்தது. ஆனால் இந்த நிலைமையை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கால்நடைகளை முழங்கால் சேற்றில் நிற்க வைத்து விற்பனை செய்தனர்.
சேரும் சகதியுமான இடங்களிலேயே காய்கறி கடைகளும் அமைக்கப்பட்டு விற்பனை நடந்தது. தற்போது டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கு தேங்கியுள்ள நீரில் உள்ள கொசுக்களால் தங்களுக்கும் காய்ச்சல் வருமோ என இன்று சந்தைக்கு வந்தவர்கள் பீதி அடைந்தனர்.
எனவே இந்த மாட்டு சந்தையில் அடிப்படை வசதிகள் மற்றும் மழைநீர் தேங்காத வகையில் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-
இந்த மாட்டு சந்தை 3 தலைமுறையாக நடந்து வருகின்றது. அடிப்படை வசதிகள் இல்லாததால் 2 மணி வரை நடக்கும் மாட்டு சந்தை 10 மணிக்குள்ளாகவே சந்தைகள் முடிந்து விடுகிறது.
இந்த சந்தைக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வருவதால் தங்கும் விடுதி, கழிப்பிட வசதி, மாடுகளை வாகனத்தில் ஏற்ற மேடை ஆகியவற்றை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.






