search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    133 விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள்
    X

    133 விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள்

    • ரூ.1.40 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    தமிழ்நாட்டில் நிலவும் வேளாண்மை தொழிலாளர் பற்றாக்குறையை போக்கவும், குறித்த நேரத்தில் குறைந்த செலவில் வேளாண் பணிகளை தொடங்கவும், பயிர் பாதுகாப்பு பணி களை மேற்கொள்ளவும், அறுவடை பணிகளை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசு வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நவீன வேளாண் எந்திரங்களான டிராக்டர்,பவர் டில்லர், நாற்று நடும் எந்திரம், களையெடுக்கும் எந்திரம், அறுவடை எந்திரம்உ ள்ளிட்ட எந்திரங்களும், கல்டி வேட்டர், ரோட்ட வேட்டர், வைக்கோல் கட்டும் எந்திரம் உள்ளிட்ட இணைப்பு கருவிகளும் மானிய விலையில் வழங்கப்ப டுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில், 2022-23 ஆண்டு 2-ம் தவணை நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.206 கோடி மதிப்பிலான 60 வேளாண் எந்திரங்கள் ரூ.84.55 லட்சம் மானியத்தில் விவசாயி களுக்கு வழங்கப்ப ட்டுள்ளது.

    மேலும், 2023-24-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு

    முதல்-அமைச்சர் அறிவுரையின்படி தமிழ்நாடு முழுவதும் 5000 பவர்டில்லர், பவர் வீடர் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பிலான 62 பவர் டில்லர் மற்றும் 11 களையெடுக்கும் கருவிகள் ரூ.55.81 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் இதுவரை வேலூர் மாவட்டதில் விவசாயிகளுக்கு ரூ.3.63 கோடி மதிப்பிலான 133 வேளாண் இயந்திரங்கள் ரூ.1.40 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.

    Next Story
    ×