என் மலர்
நீங்கள் தேடியது "10 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது"
- டிரைவர் காயங்களுடன் உயிர்தப்பினார்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு லோடு வேன் ஒன்று கீரைகள் ஏற்றிக்கொண்டு வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
வேன் கவிழ்ந்தது
அப்போது பள்ளிகொண்டா அருகே உள்ள வெட்டுவானம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
மேலும் சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் லேசான காயங்க ளுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார்.
கீரை கட்டுகள் சேதம்
இதில் சென்னைக்கு ஏற்றி சென்ற சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 5 ஆயிரம் கீரைக்கட்டுகள் கீழே விழுந்து நாசமானது.
அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து பள்ளி கொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசர் சம்பவ இடத்திற்கு சென்று டிரைவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் பொக்லைன் எந்திரத்தின் மூலம் லோடு வேனை மீட்டு போலீஸ்நிலையம் எடுத்து வந்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






