என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "We have applied for permission to operate the aircraft"

    • 90 சதவீதம் பணிகள் நிறைவு
    • இந்த ஆண்டு இறுதியில் விமான சேவை தொடங்க நடவடிக்கை

    வேலூர்:

    வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தை மத்திய அரசின் உதான் திட்டத்தின்கீழ் சீரமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடை பெற்று வருகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு 20 பயணிகள் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

    அதற்காக 850 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளப் பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் உள்ளிட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவடை ந்துள்ளது.

    இங்கிருந்து விமானங்கள் பறப்பதற்கும், தரையிறங்கு வதற்கும் அந்த பகுதியில் உள்ள 25 அடி உயரத்துக்கு மேல் உள்ள கட்டிடங்கள், மரங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இடையூறாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது. அதனால் விமான நிலை யத்தை சுற்றியுள்ள 10 ஏக்கர் நிலம் கையகப்ப டுத்தும் பணிகள் மற்றும் இங்கிருந்து இந்த ஆண்டிற்குள் விமான சேவை தொடங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதையொட்டி விமான ஓடுதளப்பாதையின் அருகே விமானங்கள் இறங்குவதற்காக பிரத்யே கமாக அமைக் கப்பட்டுள்ள மின்விளக்குகள் பகல்வே ளையில் சரியாக தெரிகிறதா என்றும், விமானத்தில் இருந்து தகவல் கட் டுப்பாட்டு அறை மற்றும் சிக்னல் கோபுரத்தில் இருந்து சிக்னல் கிடைக்கிறதா எனவும் முதற்கட்ட சோதனை செய்யப்பட்டது. இதற்காக விமான போக்கு வரத்து ஆணைக்குழுவிற்கு சொந்தமான விமானம் புதுடெல்லி யில் இருந்து சென்னை வழி யாக வேலூருக்கு வரவ ழைக்கப்பட்டது. அப்துல்லா புரம் விமான நிலைய ஓடுபா தையின் அருகே 5 முறை தாழ்வாக விமானத்தை இயக்கி சோதனை செய்யப் பட்டது. இதனை புதுடெல்லியை சேர்ந்த விமானங்கள் ஆய்வு பிரிவை சேர்ந்த 3 பேர் நேரில் பார்வையிட்டு ஆய்வு. செய்தனர். இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் தீய ணைப்பு வாகனம் விமான நிலைய ஓடுதளம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், அப் துல்லாபுரம் விமானநி லையத் தில் சிக்னல், மின்வி ளக்குகள் தொடர்பாக விமானம் இயக்கி மேற்கொ ள்ளப்பட்ட முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

    அடுத்தக்கட்டமாக விமான ஓடுதள பாதையில் விமா னத்தை இறக்கி சோதனை செய்ய உள்ளோம். விமானம் இயங்குவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்துள் ளோம். விரைவில் அனுமதி கிடைத்து விடும்.

    இந்த டிசம்பர் மாதத்திற்குள் இங்கிருந்து விமான சேவை தொடங்கப் படும் என்றனர்.

    ×