என் மலர்
நீங்கள் தேடியது "He fell and drowned in the water"
- நீச்சல் தெரியாததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் பென்னாத்தூரை அடுத்த தர்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 50).
இவருடைய கணவர் இறந்து விட்டதால் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் வசித்து வந்தார். புவனேஸ்வரிக்கு ரேஷ்மா (6) என்றபெண் குழந்தை உண்டு.
இந்த நிலையில் புவனேஸ்வரி, மகள் ரேஷ்மாவுடன் அதேப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் துணி துவைக்க சென்றார்.
அப்போது ரேஷ்மா கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் புவனேஸ்வரி மகளை காப்பாற்ற தண்ணீரில் குதித்தார்.
நீச்சல் தெரியாததால் அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதில் 2 பேரும் குட்டையில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்ததும் அங்கு சென்ற தாலுகா போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், மகள் கல் குவாரி குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






