15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

சமூக நலத்துறை அதிகாரி நடவடிக்கை போலீசார் விசாரணை
15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரும் பிரேம்குமார் 22 என்ற வாலிபரும் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து பேரணாம்பட்டு சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமிக்குபுகார் வந்தது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தனலட்சுமி விசாரணை நடத்தினார். விசாரணையில் மைனர் பெண்ணை பிரேம்குமார் திருமணம் செய்தது தெரியவந்தது.

இது குறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சியாமளா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com