என் மலர்tooltip icon

    வேலூர்

    • அம்பாள் திருவீதியுலா வந்து ஊஞ்சல் சேவை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் கிராமத்தில் எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையொட்டி சிறப்பு மஹா பிரத்யங்கரா, நிகும்பலா யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அம்பாள் திருவீதியுலா வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் பெண்கள் பக்தி பரவசத்தில் அருள் வந்து ஆடினார்கள்.

    நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, தலைமை குருக்கள் டி.எஸ். சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சித்தூரை சேர்ந்தவர்
    • வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்


    வேலூர்:

    ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த வேப் பஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார்(வயது 39). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், சசிகுமார் அவ்வப்போது வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள பகுதியை சேர்ந்த அவரது உறவினர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    அப்போது, உறவினரின் மகளான 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சசிகுமார் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மாணவியை மிரட்டி உள்ளார். இந்த நிலையில் மாணவி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்தார்.

    சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது மாணவி கர்ப்பமானது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொன்னை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர். மேலும் கைதான சசிகுமாரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்

    வேலூர்:

    மகாளய அமாவாசை யொட்டி இன்று ஏராள மானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.

    ஆனால் இந்த ஆண்டு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர்.

    பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோ ர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.

    மகாளய அமாவாசை யொட்டி திருஷ்டி பூசணிக்காய் பூக்கள் அதிக அளவில் விற்பனையானது. அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மனைவி கண்டித்ததால் விரக்தி
    • போலீசார் வழக்கு பதிவு

    வேலூர்:

    வேலூர் சின்ன அல்லாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). தச்சு தொழிலாளி. இவரது மனைவி சுதீஷா. மணிகண்டன் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார்.

    இந்த நிலையில் சுதிஷாவுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. நேற்றும் மணிகண்டன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சுதிஷா கணவரிடம் 3-வது குழந்தை பிறந்த பிறகும் ஏன் குடித்துவிட்டு வருகிறாய் என கேள்வி எழுப்பினார்.

    மேலும் இது குறித்து தனது தந்தையிடமும் தெரிவித்துள்ளார். சுதிஷாவின் தந்தையும் மணிகண்டனை கண்டித்தார்.

    இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் நேற்று இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாடகங்களை பார்த்து அழுவதை விட காமெடி பார்க்கலாம்
    • வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேச்சு

    வேலூர்:

    வேலூர் கோட்டை சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு தலைமுறை பேரவை, மிட் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் நாராயணி மருத்துவமனை சார்பில் போலீசாருக்கான இதய பரிசோதனை முகாம் இன்று நடந்தது.

    முகாமிற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன் கவுதமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சிறப்பு விருந்தினர்களாக நாராயணி மருத்துவமனை குழும தலைவர் டாக்டர் பாலாஜி, வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

    நாராயணி மருத்துவ மனை குழும தலைவர் டாக்டர் பாலாஜி பேசுகையில்:-

    இந்த முகாமில் போலீசார் கலந்து கொண்டு இதய சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முகாமில் இசிஜி எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

    மாரடைப்பு ஏற்பட்டால் அவர்களை ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும். சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஆஸ்பத்திரி அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்படும்.

    போலீசார் தங்களின் அன்றாட பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் குறைந்தபட்சம் 15 நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். மூளை எவ்வளவு வேலை செய்கிறதோ அதை பொறுத்து தான் மற்ற உறுப்புகளும் வேலை செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

    வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது:-

    கொரோனா காலத்தில் போலீசாரும் மருத்து வர்களும் இந்த உலகை எப்படி காப்பாற்றினார்கள் என்பது தெரியும். சிரிப்புதான் சிறந்த மருந்து.

    தினமும் சிரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும் மனிதனாக பிறந்த அனை வருக்கும் மன அழுத்தம் உண்டு.

    அது நானாக இருந்தாலும் அதானி அம்பானியாக இருந்தாலும் ஒன்றுதான். டி.வி.யில் வரும் நாடகங்களை பார்த்து அழுவதை விட காமெடி காட்சிகளை பார்த்து சிரிக்க வேண்டும்.

    ஜப்பானில் 100 வயதை கடந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர் அதற்கு அவர்கள் கூறும் காரணம் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதுதான். தற்போது புது புது வியாதிகள் வருகிறது.

    அதனால் போலீசார் அவர்களை அவர்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் குமரன், பெப்சி சீனிவாசன் பி.டி.கே. மாறன் சதீஷ்குமார் பூமிநாதன் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டங்கள் முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
    • விபத்து இழப்பீடு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

    வேலூர்:

    மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் வேலூர் கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், எஸ்.சி., எஸ்.டி. கோர்ட்டு நீதிபதி சாந்தி தலைமை தாங்கினார்.

    இதில் நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு, தொழிலாளர் வழக்கு, விபத்து இழப்பீடு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டது. இதில் வக்கீல் தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. சம்பந்தப்ப ட்டவர்களுக்கு வழக்குக்கான இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவி டப்பட்டது.

    • சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
    • ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேப்பங்குப்பம் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

    வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் கலந்து கொண்டு பேசுகையில்:-

    மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. சாக்லேட் உள்ளிட்ட பல வடிவங்களில் போதை பொருள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

    போதை பொருள் விற்பனையை தடுக்க, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பழக்கத்தால், பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன.

    மேலும் பள்ளி பருவத்தில் ஒழுக்கம், கல்வி கற்றல், ஒற்றுமை மற்றும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என எடுத்துரைத்தார்.

    இந்த கல்வி பருவத்தில் போதை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடாமல், நன்கு படித்து பல்வேறு துறைகளில் அதிகாரியாக விளங்க வேண்டும் என அறிவுறை கூறினார்.

    • கொலையா? போலீசார் விசாரணை
    • நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தென் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பூரோதயன் (வயது 36). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயலட்சுமி, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலில் பூரோதயன் அங்கிருந்து சென்று விட்டார்.

    இன்று காலை நிலத்தில் வழியாக சென்றவர்கள் பூரோதயன் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பூரோதயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.

    இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் நண்பர்களின் ஏற்பட்ட பிரச்சனையால் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சலவன் பேட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). கூலி தொழிலாளி. இவர் திருவலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றார். சம்பவத்தன்று பெருமுகை அருகே சர்வீஸ் சாலையில் இரவு 7 மணி அளவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

    பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பலனின்றி சிவகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் தகவல்
    • வேலூரில் நாளை நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்ணா பிறந்த நாளையொட்டி 2023-24-ம் ஆண்டுக்கான சைக்கிள் போட்டிகள் வேலூரில் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் மாவட்டப் பிரிவு சார்பில் நடத்தப் படும் இந்த போட்டிகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களுடைய சொந்த சைக்கிளுடன் கலந்து கொள்ளலாம்.

    போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டிகள் 13 வயது, 15 வயது, 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்படும்.

    இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளித் தலைமையா சிரியர்களிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்றும் அல்லது ஆதார் அட்டை கொண்டு வந்தும் கலந்து கொள் ளலாம். போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்படமாட்டாது.

    போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெயர்களை நாளை காலை 6 மணிக்குள் வேலூர் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரிடம் போட்டி நடைபெறும் இடத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என பரிசுத்தொகை, சான்றி தழ்கள் வழங்கப்படும்.

    4 முதல் 10 இடங்களைப் பிடிப்பவர்களுக்குத் தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகையும் தகுதிச்சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    போட்டிகள் காட்பாடி அருகிலுள்ள பள்ளிக்குப்பத்தில் தொடங்கி கண்டிப்பேட்டில் நிறைவடையும்.

    மேலும் விவரங்களுக்கு இளைஞர் நலன் அலுவலரை 74017 03483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்
    • வேலூரில் நிரந்தர வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இல்லை

    வேலூர்:

    வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-

    தமிழக அரசு நேற்று முன்தினம் வாகன சாலை வரியை உயர்த்தி உள்ளது.லாரி மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவற்றுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 6 லட்சம் வாகனங்கள் உள்ளன. முன்னறிவிப்பு இல்லாமல் இந்த வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. விவசாயத்திற்கு அடுத்தது லாரிகள் மூலம் தான் பொருளாதார மேம்பாடு நடைபெறும்.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் டீசல் விலை 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.தற்போது டீசல் விலை 95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் டீசல் விலை குறைவாக உள்ளது.

    அதனை ஏன் குறைக்கவில்லை.தேர்தல் அறிக்கையில் டீசல், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்தனர். பெட்ரோல் விலை தான் குறைக்கப்பட்டது.ஆனால் டீசல் விலை குறைக்கப்படவில்லை.தென் தமிழகத்தில் தான் டீசல் விலை அதிகமாக உள்ளது.

    கர்நாடகாவில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் குறைவாக உள்ளது. தமிழக லாரிகள் கர்நாடகாவில் டீசல் பிடிப்பதால் தமிழக அரசுக்கு தான் வரி இழப்பீடு ஏற்படுகிறது உயர்த்தப்பட்ட வரி உயர்வை தமிழக அரசு குறைக்க வேண்டும்.

    தொழில் நலிவு

    லாரி தொழில் தற்போது நலிவடைந்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் லாரி தொழிலுக்கு என்று எந்த சலுகை கொடுப்பதில்லை.

    இதுவரை எந்த அரசாங்கமும் இந்த அளவுக்கு வரியை உயர்த்தியது இல்லை.

    உயர்த்தப்பட்டுள்ள வானங்களுக்கான வரியை குறைக்க வேண்டும்.வேலூரில் நிரந்தர வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இல்லை.அவரை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • நுழைவுக் கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் குற்ற வழக்குகளில் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளன.

    இதில் பைக், கார் உள்ளிட்ட 115 வாகனங்கள் இன்று வேலூர் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. வாகனத்தை ஏலம் எடுக்க வந்தவர்களிடம் ரூ.100 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    மதுவிலக்கு வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனங்க ளுக்கு ஏலத்தொகையுடன் இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து வசூலித்தனர்.

    மேலும் வழக்குகளில் சம்மந்தப் பட்டுள்ள வாகனங்கள் அனைத்திற்கும் ரசீது வழங்கினர்.

    ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணம் என போலீசார் தெரிவித்தனர். இதனை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பார்வையிட்டார்.

    ×