என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசாருக்கான இதய பரிசோதனை முகாம்"

    • நாடகங்களை பார்த்து அழுவதை விட காமெடி பார்க்கலாம்
    • வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேச்சு

    வேலூர்:

    வேலூர் கோட்டை சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு தலைமுறை பேரவை, மிட் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் நாராயணி மருத்துவமனை சார்பில் போலீசாருக்கான இதய பரிசோதனை முகாம் இன்று நடந்தது.

    முகாமிற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன் கவுதமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சிறப்பு விருந்தினர்களாக நாராயணி மருத்துவமனை குழும தலைவர் டாக்டர் பாலாஜி, வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

    நாராயணி மருத்துவ மனை குழும தலைவர் டாக்டர் பாலாஜி பேசுகையில்:-

    இந்த முகாமில் போலீசார் கலந்து கொண்டு இதய சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முகாமில் இசிஜி எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

    மாரடைப்பு ஏற்பட்டால் அவர்களை ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும். சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஆஸ்பத்திரி அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்படும்.

    போலீசார் தங்களின் அன்றாட பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் குறைந்தபட்சம் 15 நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். மூளை எவ்வளவு வேலை செய்கிறதோ அதை பொறுத்து தான் மற்ற உறுப்புகளும் வேலை செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

    வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது:-

    கொரோனா காலத்தில் போலீசாரும் மருத்து வர்களும் இந்த உலகை எப்படி காப்பாற்றினார்கள் என்பது தெரியும். சிரிப்புதான் சிறந்த மருந்து.

    தினமும் சிரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும் மனிதனாக பிறந்த அனை வருக்கும் மன அழுத்தம் உண்டு.

    அது நானாக இருந்தாலும் அதானி அம்பானியாக இருந்தாலும் ஒன்றுதான். டி.வி.யில் வரும் நாடகங்களை பார்த்து அழுவதை விட காமெடி காட்சிகளை பார்த்து சிரிக்க வேண்டும்.

    ஜப்பானில் 100 வயதை கடந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர் அதற்கு அவர்கள் கூறும் காரணம் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதுதான். தற்போது புது புது வியாதிகள் வருகிறது.

    அதனால் போலீசார் அவர்களை அவர்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் குமரன், பெப்சி சீனிவாசன் பி.டி.கே. மாறன் சதீஷ்குமார் பூமிநாதன் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×